இந்தியாவில் தயாராகும் ஐபோன்கள்… விலை குறைய வாய்ப்புகள் உள்ளதா?

ஃபாக்ஸ்கான் மெக்ஸிகோவில் தங்கள் உற்பத்தித் தளத்தை அமைக்க விரும்பும் நிறுவனங்களில் ஒன்றாக இருப்பதாக அறிக்கைகள் வெளிவந்துள்ளன

By: Updated: August 26, 2020, 12:58:03 PM

Nandagopal Rajan

ஆப்பிள் நிறுவனம் தங்களின் சமீபத்திய தொலைபேசியை இந்தியாவில் தயாரிக்க ஆரம்பித்துவிட்டது. இந்த தொலைபேசியுடன் மேலும் 4 மாடல்களை இந்தியாவில் ஃபாக்ஸ்கான் மற்றும் விஸ்ட்ரான் நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ளது ஆப்பிள்.

இந்தியாவில் எப்போது இருந்து ஐபோன்களை தயாரித்து வருகிறது ஆப்பிள்?

இந்தியாயில் 2017ம் ஆண்டு முதல் ஐபோன் எஸ்.இ. போன்களை அசெம்பெல் செய்ய துவங்கியது. அந்த தொலைபேசி ஏற்கனவே இரண்டு வருடங்கள் பழமை. இருந்தாலும் இதன் குறைவான விலை காரணமாக இந்தியாவில் அதிக வரவேற்பை பெற்றிருந்தது. 2018ம் ஆண்டு ஐபோன் 6எஸ் போனும் இந்தியாவில் அசெம்பிள் செய்ய ஆரம்பிக்கப்பட்டது. 2019ம் ஆண்டு ஐபோன் 7 போனும் இந்தியாவில் உருவாக்கப்பட்டது. அனைத்தும் விஸ்ட்ரானின் பெங்களூரு ஆலையில் உருவாக்கப்பட்டது.

ஐபோன் எஸ்.இ.யை போன்றே ஐபோன் 6எஸ்-உம் ஐபோன் 7வும் பழைய மாடல்கள் தான். இருப்பினும் இந்திய வாடிக்கையாளர்கள், பழைய மாடல்களை குறைந்த விலை கொடுத்து வாங்குவது காரணமாக தயாரிக்கப்பட்டது.  2019 ஆம் ஆண்டில், ஆப்பிளின் பார்ட்னர் ஃபாக்ஸ்கான் ஐபோன் XR போனை சென்னையில் உள்ள தனது ஆலையில் அசெம்பிள் செய்ய ஆரம்பித்தது. இது மிகச் சமீபத்திய தொலைபேசியாகும், மேலும் குப்பெர்டினோ இந்திய சந்தையை எவ்வாறு தீவிரமாக எடுத்துக் கொள்ளத் துவங்கியுள்ளது என்பதைக் காட்டியது.

2020ம் ஆண்டில் ஐபோன் 11 சென்னையில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில் அசெம்பிள் செய்ய ஆரம்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஐபோன் எஸ்.இ. விஸ்ட்ரான் ஆலையில் அசெம்பிள் செய்துவருகின்றனர். 2019 ஆம் ஆண்டில், ஆப்பிள் இந்தியாவில் ஐபோன் எஸ்இ மற்றும் ஐபோன் 6 எஸ் உற்பத்தியை நிறுத்தியது, இந்த மாடல்கள் விற்பனை சரிய துவங்கியது.

To read this article in English

இந்தியாவில் ஐபோன் உற்பத்தி, இந்தியாவில் ஐபோன் விலைகளை குறைக்குமா?

ஆப்பிள் சர்வதேச அளவில் தான் விலை நிர்ணயத்தை உறுதி செய்யும். எப்போதாவது தான் உள்ளூர் சந்தைகளுக்கு ஏற்ப விலையை மாற்றும். வன்பொருட்களை உற்பத்தி செய்யும் இடத்திலும் கூட எப்போதாவது தான் இப்படி நடைபெறும். உள்ளூர் உற்பத்தியிலும் விலை குறைப்பு நிகழாமல் இருப்பதற்கு காரணங்களும் உண்டு. முதலில் ஐபோன்கள் இந்தியாவில் அசெம்பிள் மட்டுமே செய்கிறது. உள்ளூர்களில் இருந்து வேறெந்த பொருட்களையும் ஆப்பிள் வாங்கவில்லை. எனவே ஐபோன்களின் விலை குறைவதற்கு வாய்ப்புகள் இல்லை.

இரண்டாவதாக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அலகுகளை வைத்து முழு தேவையையும் பூர்த்தி செய்ய ஆப்பிளால் இயலாது. அதன் அர்த்தம் மேலும் பல செல்போன்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும். அதனால் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் செல்போன்களை இந்தியாவில் குறைந்த விலையில் விற்பனை செய்ய இயலாது. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் சுங்கவரி உயர்வால் ஆப்பிள் தங்கள் பொருட்களின் விலைகளை மாற்றாமல் வைத்திருந்தது போல, உள்ளூர் மாடல்களுக்கு வைத்திருக்க இயலும்.

ஐபோன்கள் உற்பத்தியை சீனாவில் இருந்து வெளியேற்ற ஆப்பிள் முடிவெடுத்துள்ளதா?

கொரோனா தொற்றின் தாக்கம் மற்றும் டொனால்ட் ட்ரெம்பின் அழுத்தம் காரணமாக நிறைய உற்பத்திகளை சீனாவில் இருந்து வெளியேற்ற முடிவு செய்துள்ளது ஆப்பிள். சீனாவில் உற்பத்தி மையங்களை அமைக்க நிறைய முதலீடு செய்துள்ளதால் ஆப்பிள் அங்கிருந்து முழுமையாக வெளியேறுவது சாத்தியமில்லை. இந்தியாவில் தயாரிக்கப்படும் போன்களும் வெளியே இருக்கும் சந்தைகளுக்கு விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முழுமையான உற்பத்தியை பாதிக்கும் வாய்ப்புகள் இருப்பதால், சில உற்பத்திகளை மட்டுமே சீனாவில் இருந்து வெளியேற்றும் வாய்ப்புகள் உள்ளது.

2019 ஆம் ஆண்டில், ஆப்பிள் தனது மேக் புரோ கம்ப்யூட்டர்களின் உற்பத்தியை டெக்சாஸின் ஆஸ்டினில் 1 பில்லியன் டாலர் மதிப்பீட்டில், 3 மில்லியன் சதுர அடி வளாகத்துடன் அமெரிக்காவிற்கு மாற்றியது. ஆப்பிள் மற்றும் அதன் உற்பத்தி பங்காளிகள் 200 மில்லியன் டாலர்களை மேக் புரோ வசதியில் முதலீடு செய்துள்ளதாக அந்த நேரத்தில் வெளியான ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவாரஸ்யமாக, இந்த வாரத்திலேயே, தைவானை தளமாகக் கொண்ட ஃபாக்ஸ்கான் மெக்ஸிகோவில் தங்கள் உற்பத்தித் தளத்தை அமைக்க விரும்பும் நிறுவனங்களில் ஒன்றாக இருப்பதாக அறிக்கைகள் வெளிவந்துள்ளன, அமெரிக்க சந்தைக்கு உதவுகிறது. இருப்பினும், ஃபாக்ஸ்கானின் உற்பத்தி ஆப்பிளுக்கு மட்டும் அல்ல என்பதையும், மற்ற பிராண்டுகளுக்கு இந்த வசதி இருக்கக்கூடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த மாத துவக்கத்தில், யங் லியூ, ஹான் ஹய் ப்ரிசசன் நிறுவனத்தின் (ஃபாக்ஸ்கான்) தலைவர் “படிப்படியாக சீனாவிற்கும் வெளியிலும் நிறைய திறனை இணைக்க இருப்பதாக கூறியுள்ளது. இதன் ரேசியோ ஏற்கனவே 30% என்ற அளவில் உள்ளது. இந்தியாவிலோ, அமெரிக்காவிலோ, தென்கிழக்கு ஆசியாவிலோ உற்பத்தி ஆலை அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார் என ப்ளூம்பெர்க் வெளியிட்ட செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஃபாக்ஸ்கானின் உற்பத்தி சாம்ராஜ்யத்தில் சீனா இன்னும் முக்கிய பங்கு வகிக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:Will local production make iphones cheaper

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X