Advertisment

சசிகலாவின் அரசியல் செல்வாக்கு என்ன? தேர்தலில் போட்டியிடுவாரா?

Sasikala impact in 2021 Tamil Nadu Assembly Election : வாழ்க்கையும் சசிகலாவைச் சார்ந்ததாக தான் இருந்தது.

author-image
WebDesk
Jan 08, 2021 19:15 IST
சசிகலாவின் அரசியல் செல்வாக்கு என்ன? தேர்தலில் போட்டியிடுவாரா?

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் இணைந்து வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில்  சசிகலா கர்நாடகா சிறையில் தண்டனை பெற்று வருகிறார்.

Advertisment

சசிகலா அரசியலுக்கு திரும்புவாரா?

யார் இந்த சசிகலா ?

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி என்ற சிறிய நகரத்தைச் சேர்ந்த சசிகலா, 1984 ஆம் ஆண்டில் ஜெயலலிதாவுக்கு அறிமுகமானார். 1982ம் ஆண்டு, அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக ஜெயலலிதா பணி அமர்த்தப்பட்டார்.  சசிகலா போயஸ் கார்டன் பகுதிக்கு அருகே வினோத் வீடியோ விசன் என்ற ஒளிநாடாவை வாடகைக்கு விடும் கடையை நடத்தினார்.  இந்த காலகட்டங்களில் இருவருக்கும் இடையேயான நட்பு வளர்ந்தது. எம். ஜி. ஆரின் மறைவுக்குப் பிறகு, பல நெருக்கடியான கால கட்டங்களில் ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பாய் சசிகலாவின் கணவர் நடராஜன் உதவினார்.1980 களின் பிற்பகுதியில் ஜெயலலிதாவின்  இல்லமான போயஸ் கார்டனிலேயே சசிகலா தங்க ஆரம்பித்தார். சசிகலாவின் நெருங்கிய உறவினர்கள் தான் ஜெயலலிதாவின் பாதுகாப்பை உறுதிபடுத்தினர்.

1990 ல் கட்சியில் இருந்து நடராஜன் நீக்கப்பட்ட போது கூட, ஜெயலலிதா வுடனான தனது நட்புறவை தொடர ​சசிகலா முடிவெடுத்தார். 2016 டிசம்பரில் உடல்நலக் குறைவின் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா மரணமடையும் வரை அவரின் நெருங்கிய  வட்டாரத்தில் இருந்தவர் சசிகலா.

சசிகலாவின் செல்வாக்கு என்ன?

சுமார் மூன்று தசாப்தங்களாக நீடித்த ஜெயலலிதாவுடனான நெருங்கிய தொடர்பில், நான்கு சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக அபார வெற்றி பெற்றது. திரைக்குப் பின்னால் அரசியல் நகர்வுகளை இயக்குபவராக சசிகலா அறியப்படுகிறார். ஒருபோதும் அரசியல் பேரணியில் உரையாற்றியதில்லை, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டதில்லை.

ஆனால், அ.தி.மு.க சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் சசிகலா முக்கியத்துவம் பெற்றார். கூட்டணிக் கட்சிகளோடு இடப்பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தைகளிலும், அரசாங்கத்தில் உள்ள  முக்கியமான நியமனங்களிலும் சசிகலாவின் ஆதிக்கம் அதிகமாக இருந்தன.

ஏன் சசிகலா வில்லியாக சித்தரிக்கப்படுகிறார்?  

ஜெயலலிதா மீதான மரியாதை இன்று வரை மக்கள் மனதில் பல மடங்கு அதிகரித்து கொண்டு வருகிறது. ஜெயலலிதா மீதான அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் சசிகலா ஒரு காரணமாக்கப்பட்டார். 1991ல் நடைபெற்ற  அதிமுக ஆட்சிக் காலத்தில் நடந்தேறிய மாஃபியா கொள்ளை முதல் ஊழல் குற்றச்சாட்டுகள் வரை சசிகலாவின் பங்கு குறித்து தான் பேசப்படுகிறது. ஜெயலலிதா மரணத்திலும் சசிகலாவின் பெயர் சுட்டிக்காட்டப்பட்டது.இதுதவிர,சசிகலாவின் குடும்ப உறவுகளும், அவர்களின் கடந்த காலத்தைப் பற்றிய கேள்விகளும் சசிகலா மீதான இந்த பார்வைக்கு வழிவகுத்தது.

இருப்பினும், ஜெயலலிதா மற்றும் அவரது செயல்பாடுகளை மிகவும் உன்னிப்பாக அறிந்த பல அதிகாரிகளின் கூற்று வேறு வகையில் உள்ளது.  ஜெயலலிதாவின் எண்ண ஓட்டங்களை தான் சசிகலா பிரதிபலித்தார் என்பது தான் பலரின் வாதம். மேலும், ஜெயலலிதாவின் அரசியல் வெற்றிகளும், அரசியல் வாழ்க்கையும் சசிகலாவைச் சார்ந்ததாக தான் இருந்தது. மேலும், ஜெயலிதாவின் அரசியல் வெற்றி என்பது  சசிகலா, சசிகலாவால் கட்சிக்கு அறிமுகம் செய்யப்பட்ட பன்னீர்செல்வம், பழனிசாமி போன்றவர்களால் தான் முழுமையடைந்தது என்பது தான் நிதர்சனம்.

2021 சட்ட்மன்றத் தேர்தல் : 

2021 சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக, சசிகலா தரப்புடன் இணைந்து செயல்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிமுக தலைவர்கள் ஒப்புக்கொள்கின்றனர். சசிகலா தரப்புடன் இணைவது அதிமுகவை மேலும் வலுவடையச் செய்யும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. கடந்த தேர்தல்களில் தினகரன் பெற்ற மொத்த வாக்குகளில், 5 சதவீத வாக்குகள் அதிமுகவுடையது. இருப்பினும், தற்போதைய முதல்வர் பழனிசாமி, இந்த இணைப்பிற்கு இடையூறாக இருக்கலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

#V K Sasikala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment