scorecardresearch

ஒமிக்ரானை தடுக்குமா தடுப்பூசிகள்…. தீவிர ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள்

மற்ற கொரோனா வேரியண்ட்களை போல் இல்லாமல், இந்த ஒமிக்ரான் வேரியண்ட் இயற்கையாகவும், தடுப்பூசிகள் மூலமாகவும் உடலில் உருவான நோய் எதிர்ச்சி சக்தியை எதிர்த்து அதிவேகமாக பரவக்கூடியது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஒமிக்ரானை தடுக்குமா தடுப்பூசிகள்…. தீவிர ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள்

கொரோனா தொற்று பரவ தொடங்கி இரண்டாண்டு நிறைவடைந்த நிலையிலும், அதன் பாதிப்பை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. அதேசமயம், கொரோனாவுக்கு எதிரான போரில் தடுப்பூசி முக்கிய ஆயுதமாக இருப்பதால், அதனால் பரவல் கட்டுக்குள் இருந்துவந்தது.

இதற்கிடையில், தற்போது மீண்டும் கொரோனாவின் உருமாற்றத்தால் தென் ஆப்பிரிக்காவுடனான விமான போக்குவரத்தை பல நாடுகள் துண்டித்தது, உலகளாவிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஒமிக்ரான் கொரோனா தரவுகளை ஆராய்வதில் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, அந்த கொரோனாவுக்கு எதிராக நமது தடுப்பூசிகளின் செயல்திறன் எவ்வாறு இருக்கும் என்பதை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆரம்பகால சோதனையில் கலவையான முடிவு கிடைத்துள்ளது. மற்ற கொரோனா வேரியண்ட்களை போல் இல்லாமல், இந்த ஒமிக்ரான் வேரியண்ட் இயற்கையாகவும், தடுப்பூசிகள் மூலமாகவும் உடலில் உருவான நோய் எதிர்ச்சி சக்தியை எதிர்த்து அதிவேகமாக பரவக்கூடியது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும், தடுப்பூசிகள் நோய் பாதிப்பின் வீரியத்தை குறைத்து மரணம் ஏற்படாமல் தடுக்கிறது. ஒரு சிலருக்கு, பூஸ்டர் டோஸ் தேவைப்படும் சூழ்நிலை உள்ளது. எவ்வாறாயினும், புதிய கொரோனா வேரியண்ட் காரணமாக பைசர் மற்றும் மாடர்னா தங்களின் தடுப்பூசிகளை மறுசீரமைக்க தயாராகி வருகின்றனர்.

ஒமிக்ரான் வைரஸ் குறித்து தகவல் பரவ தொடங்கியதுமே, அது முதன்முதலில் தென்பட்ட தென் ஆப்பிரிக்கா நாடுகளுக்கு செல்ல பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன. கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இஸ்ரேல் மற்றும் ஹாங்காங் உட்பட பல ஐரோப்பியா நாடுகளில் அதன் பாதிப்பை கண்டறிந்துள்ளனர்.

தென்னாப்பிரிக்காவின் Gauteng மாகாணத்தில் பதிவாகும் 2,300 தினசரி பாதிப்புகளில், பெரும்பாலானவை ஒமிக்ரான் கொரோனா என அந்நாட்டின் குடியரசுத் தலைவர் சிரில் ராமபோசா தெரிவித்தார். குறிப்பாக, கடந்த வாரத்தில் புதிய நோய்த்தொற்றுகள் எண்ணிக்கை, தேசிய அளவில் மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளன. கொரோனா பாதிப்பும் 2% இலிருந்து 9% ஆக அதிகரித்துள்ளது.

விஞ்ஞானிகள் மற்ற மாறுபாடுகளைக் காட்டிலும் ஒமிக்ரான் வேரியண்ட் எதிராக தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். தென்னாப்பிரிக்காவில் அதன் பாதிப்பு கண்டறியப்பட்டு 36 மணி நேரத்திற்குள் 100க்கும் மேற்பட்டோரின் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்து உலக நாடுகளை அலர்ட் செய்துள்ளனர்.

தற்போது, ஒமிக்ரான் வேரியண்ட்க்கு எதிராக தடுப்பூசி செயல்திறனை கண்டறியும் பணியில் தென் ஆப்பிரிக்கா ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அந்த ரேசில், ஃபைசர் மற்றும் மாடர்னா ஆராய்ச்சியாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.

ஆய்வு முடிவுகள் கிடைப்பதற்கு இன்னும் இரண்டு வாரங்கள் ஆகும். அதே சமயம், முந்தைய கொரோனா வேரியண்ட்க்கு எதிரான தடுப்பூசி செயல்திறனை ஒப்பிடுகையில், ஒமிக்ரான் கொரோனா பிறழ்வுகளுக்கு எதிராக தடுப்பூசி செயல்பாடு குறைவாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.

மேலும், கொரோனா தொற்று உறுதியாகி குணமான நபர்களுக்கும், ஒமிக்ரான் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஒமிக்ரான் மாறுபாடு இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை எதிர்த்து நம்மை தாக்கக்கூடியது என முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: Will the vaccines stop omicron scientists are racing to find out