‘விண்ட்ஃபால் லாப வரி’ என்பது எரிபொருள் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தி மீது விதிக்கப்பட்ட செஸ் வரிகள் மற்றும் எரிபொருள் ஏற்றுமதியாளர்கள் மற்றும் எண்ணெய் உற்பத்தியாளர்களின் வழக்கத்திற்கு மாறான கொள்ளை லாபத்திற்கு வரி விதிப்பது ஆகும். இந்த வரியை ரத்து செய்வதன் மூலம் அரசாங்கத்திடம் இருந்து என்ன சமிக்ஞை வருகிறது என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
ஆங்கிலத்தில் படிக்க: Windfall gains tax on oil production, diesel-petrol export removed: The impact, explained
கச்சா எண்ணெய் உள்நாட்டு உற்பத்தி மற்றும் டீசல், பெட்ரோல் மற்றும் விமானப் போக்குவரத்து எரிபொருள் (ஏ.டி.எஃப்) ஏற்றுமதி மீதான விண்ட்ஃபால் லாப வரியை திங்கள்கிழமை (டிசம்பர் 2) அரசு திரும்பப் பெற்றது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை அடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் முக்கிய எரிபொருட்களின் விலை உயர்வுக்கு மத்தியில் 30 மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வரியை ரத்து செய்தது.
ஆனால், அதன் பிறகு நிறைய மாறிவிட்டது. உக்ரைனில் நடந்த போர் காரணமாக ஆரம்ப அதிர்ச்சி மற்றும் விநியோக கவலைகளுக்குப் பிறகு, உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிபொருள் விலையின் போக்குகள் மாறி, நிலைப்படுத்தப்பட்டுள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் விலை கணிசமாக குறைந்துள்ளது, உள்நாட்டு சந்தையில் எரிபொருட்களின் வலுவான விநியோகம் உள்ளது. முதன்மையாக இந்தக் காரணங்களால், விண்ட்ஃபால் லாப வரி குறிப்பிடத்தக்க வருவாயை உருவாக்கவில்லை. உண்மையில், இந்த வரியை நிறுத்த அரசாங்கம் முடிவு செய்தபோது, வரி ஏற்கனவே பூஜ்யமாக இருந்தது.
ஜூலை 20, 2022 முதல் பெட்ரோல் ஏற்றுமதிக்கான வரி பூஜ்ஜியமாக இருந்தபோதும், டீசல் ஏற்றுமதி வரி மார்ச் 1, 2024 முதல் பூஜ்ஜியமாக இருந்தது. விமானப் போக்குவரத்து எரிபொருள் (ஏ.டி.எஃப்) ஏற்றுமதிகளில், உள்நாட்டு எண்ணெய் மீதான விண்ட்ஃபால் லாப வரி 2024 ஜனவரி 2 முதல் பூஜ்யமாகக் குறைக்கப்பட்டது. உற்பத்தி, தீர்வை செப்டம்பர் 18, 2024 முதல் பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டது. எனவே, அனைத்து நடைமுறைகநோக்கத்திற்காக, இந்த வரி ஏற்கனவே செயலிழந்துவிட்டது. தற்போது அது முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
விண்ட்ஃபால் லாப வரி ஜூலை 1, 2022-ல் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, உள்நாட்டு கச்சா எண்ணெய் மீதான விண்ட்ஃபால் லாப வரி ஒரு டன்னுக்கு ரூ. 23,250 ஆக இருந்தது. இது ஒரு பீப்பாய்க்கு சுமார் $40 அமெரிக்க டாலர் என கூறப்பட்டது. அப்போது கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 100 டாலருக்கும் அதிகமாக இருந்தது. அவை இப்போது ஒரு பீப்பாய்க்கு $75 டாலருக்கு கீழ் உள்ளன, மேலும் ஒரு பெரிய விநியோக அதிர்ச்சி இல்லாவிட்டால், அவை உயர்வது சாத்தியமில்லை. டீசல் ஏற்றுமதியை பொறுத்தவரை, ஆரம்ப வரியாக லிட்டருக்கு ரூ.13 இருந்தது. விமானப் போக்குவரத்து எரிம்பொருள் மற்றும் பெட்ரோல் ஏற்றுமதிக்கு ஆரம்பத்தில் லிட்டருக்கு 6 ரூபாய் வரி விதிக்கப்பட்டது.
விண்ட்ஃபால் லாப வரி என்றால் என்ன, இந்த வரி ஏன் விதிக்கப்பட்டது?
"விண்ட்ஃபால் ஆதாய வரி" என்பது எரிபொருள் ஏற்றுமதியாளர்கள் மற்றும் எண்ணெய் உற்பத்தியாளர்களின் வழக்கத்திற்கு மாறான லாபங்களுக்கு வரி விதிக்க, எரிபொருள் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தியின் மீது விதிக்கப்பட்ட மத்திய கலால் வரி வரம்பிற்கு உட்பட்ட செஸ்களை விவரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. உள்நாட்டு கச்சா எண்ணெய் மற்றும் விமானப் போக்குவரத்து எரிபொருள் ஏற்றுமதியைப் பொறுத்தவரை, விண்ட்ஃபால் லாப வரியானது சிறப்பு கூடுதல் கலால் வரி (SAED) வடிவத்தில் இருந்தது, டீசல் மற்றும் பெட்ரோல் மீது, இது சிறப்பு கூடுதல் கலால் வரி (SAED) மற்றும் கூடுதல் கலால் வரி (AED) ஆகியவற்றின் கலவையாகும். சாலை மற்றும் உள்கட்டமைப்பு செஸ் வரி (RIC) என அழைக்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் எரிபொருட்கள் மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை மீதான லாபத்தின் அடிப்படையில் ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கும் வரிகள் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன. முதல் திருத்தத்திலேயே, பெட்ரோல் மீதான வரி பூஜ்யமாகக் குறைக்கப்பட்டது, பின்னர் உயர்த்தப்படவில்லை.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு, உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிபொருள் விலைகள் அதிகரித்ததன் காரணமாக, இந்த வரிகள் முதலில் ஜூலை 1, 2022 அன்று விதிக்கப்பட்டன. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெயின் விலை சர்வதேச விலைக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், உள்நாட்டிலும் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. அதே நேரத்தில், மற்ற சந்தைகளில் எரிபொருட்களின் லாபம் மிகவும் லாபகரமாக இருந்தன, சுத்திகரிப்பாளர்களை, குறிப்பாக தனியார் துறை நிறுவனங்களை எரிபொருளை ஏற்றுமதி செய்ய ஊக்குவிக்கின்றன. இதனால் நாட்டின் சில பகுதிகளில் எரிபொருள் விநியோகம் தடைபட்டுள்ளது.
உள்நாட்டு பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையின் மீதான வரிக் குறைப்பு நடவடிக்கை ஓரளவு குறைக்க எண்ணெய் உற்பத்தியாளர்கள் மற்றும் எரிபொருள் ஏற்றுமதியாளர்களின் எதிர்பாராத லாபத்தில் ஒரு பங்கைப் பெறுவதைத் தவிர, இந்த வரிகள் மூலம் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய போதுமான எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்தவும் அரசாங்கம் விரும்பியது.
விண்ட்ஃபால் லாப வரி விதிப்பதில் இந்தியா மட்டும் இல்லை. பிப்ரவரி 2022-ல் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து சில மாதங்களில் எரிசக்தி நிறுவனங்களின் வழக்கத்திற்கு மாறான கொள்ளை லாபத்திற்கு வரி விதிக்க வேண்டும் என பல நாடுகள் வரி விதித்தன.
வரி ரத்து: தாக்கமும் சமிக்ஞையும்
இந்த வரி அறிமுகப்படுத்தப்பட்டபோது நாட்டின் எண்ணெய் தொழில்துறை விண்ட்ஃபால் லாப வரி விதிப்புக்கு எதிராக இருந்தது. இந்த வரிக்கு எதிரானவர்கள், இது பொதுவில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் லாபத்தை மட்டுப்படுத்துவதாக வாதிட்டது, மேலும், 85 சதவீதத்திற்கும் அதிகமான எண்ணெய் தேவைகளை பூர்த்தி செய்ய இறக்குமதியை சார்ந்திருக்கும் ஒரு நாட்டில் எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதற்கான முயற்சிகளை ஊக்கப்படுத்தாத சூழலை உருவாக்கியது. இந்த வரி விதிப்புகளை அடிக்கடி மறுபரிசீலனை செய்வது, வரிவிதிப்பை கணிக்க முடியாததாக ஆக்கியது என்று வாதிடப்பட்டது.
சமீபகாலமாக, விண்ட்ஃபால் லாப வரியால் அதிக வருவாய் கிடைக்கவில்லை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் மூன்று முக்கிய எரிபொருட்களின் விலைகள் குறிப்பிடத்தக்க வகையில் தணிந்து வருவதே இதற்குக் காரணம். 2022-23-ம் நிதி ஆண்டில் (FY23) விண்ட்ஃபால் லாப வரி வசூல் சுமார் ரூ.25,000 கோடியாக இருந்தது. இது 2024 நிதி ஆண்டில் சுமார் ரூ.13,000 கோடியாகவும், 2025 நிதி ஆண்டில் இதுவரை ரூ.6,000 கோடியாகவும் குறைந்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த வரிவிதிப்பு பூஜ்யமாக இருந்தபோதிலும், வரி அளவை மாற்றுவதற்கான ஏற்பாடு தொடர்ந்து நடைமுறையில் இருந்தது. திங்கள்கிழமை நடவடிக்கை மூலம், அரசாங்கம் அந்த விதிகளையும் திறம்பட திரும்பப் பெற்றுள்ளது. இந்த வரிவிதிப்பு முறை கணிக்கக்கூடியதாகவும் நிலையானதாகவும் இருக்கும் என்று நாட்டின் எண்ணெய் தொழில்துறைக்கு இது ஒரு உத்தரவாதமாக கருதப்படலாம்.
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் (ONGC) மற்றும் ஆயில் இந்தியா (OIL) மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (RIL) மற்றும் நயாரா எனர்ஜி (Nayara Energy) போன்ற முக்கிய எரிபொருள் ஏற்றுமதியாளர்களான உள்நாட்டு எண்ணெய் உற்பத்தியாளர்களின் நிதிநிலைகளில் விண்ட்ஃபால் லாப வரி நீக்கம் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தாது. இருப்பினும், நம்பகமான மற்றும் கணிக்கக்கூடிய வரிவிதிப்புக்கான சமிக்ஞையாக இது மதிப்பைக் கொண்டுள்ளது. எண்ணெய் மற்றும் எரிபொருள் விலைகள் மற்றும் விநியோக அதிர்ச்சிகள் போன்றவற்றில் நிர்வகிப்பதற்கு கடினமான எழுச்சி முன்னோக்கிச் செல்ல வாய்ப்பில்லை என்ற பார்வையில் இந்திய அரசாங்கம் இப்போது நம்பிக்கையுடன் இருப்பதை சமிக்ஞை செய்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.