குடியேற்றம், இறக்குமதி வரி விதிப்புக்கு இடையே மோடியின் அமெரிக்க பயணம் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?

மோடியும், டிரம்பும் தனிப்பட்ட முறையில் சில நல்லுறவைக் கொண்டுள்ளனர். குடியேற்றம் மற்றும் இறக்குமதி வரி விதிப்பு தொடர்பாக அமெரிக்க அதிபர் ஆக்ரோஷமான நிலைப்பாட்டை எடுக்கும்போது, இருநாட்டு தலைவர்களின் சந்திப்பு மிகவும் முக்கியமானது.

author-image
WebDesk
New Update
Modi Trump

பிப்ரவரி 12-13 ஆகிய தேதிகளில், டிரம்பின் வெள்ளை மாளிகைக்கு பிரதமர் மோடி வருகை தருகிறார். அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் பதவியேற்று நான்கு வாரங்கள் கடந்திருக்கிறது. இவ்வளவு குறுகிய காலத்தில் அமெரிக்க அதிபர் மற்றும் இந்திய பிரதமர் இடையே சந்திப்பு நிகழ்வது இதுவே முதல் முறை என அதிகாரிகள் வட்டாரம் கூறுகிறது.

Advertisment

 

ஆங்கிலத்தில் படிக்கவும்: With immigration, tariffs at forefront, why PM Modi’s US visit matters to New Delhi

 

Advertisment
Advertisements

ஜனவரி 20 ஆம் தேதி பதவியேற்றதிலிருந்து, டிரம்ப் இதுவரை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா ஆகியோரை மட்டுமே சந்தித்துள்ளார். ஜோர்டான் மன்னர் அப்துல்லாவுடனான சந்திப்பு செவ்வாய்க்கிழமை திட்டமிடப்பட்டது.

ஒரு தனிப்பட்ட உறவு

தற்போதைய நிலவரப்படி, டிரம்ப் தனது உள்நாட்டு நிகழ்வுகளில் கவனம் செலுத்துகிறார். அவர் காஸாவுக்கான சர்ச்சைக்குரிய திட்டத்தைப் பற்றியும் பேசினார். மேலும் பல நாடுகள் மற்றும் பொருட்களுக்கு வர்த்தக வரிகளை விதித்தார். 

மோடியும் டிரம்பும் தனிப்பட்ட முறையில் சில நல்லுறவைக் கொண்டுள்ளனர். இந்தியாவின் பார்வையில், இரு தலைவர்களுக்கும் இடையே  நிகழும் சந்திப்பு முக்கியமானது.

இந்த நல்லுறவு, மோடியும் ட்ரம்பும் பரஸ்பரமாக  சந்தித்ததன் பேரில் கட்டமைக்கப்பட்டது - செப்டம்பர் 2019 ஹூஸ்டனில் நடந்த ஹவுடி மோடி நிகழ்வில், பிரதமர் "அப்கி பார், டிரம்ப் சர்க்கார்" என்று பிரபலமாக அறிவித்தார்; பிப்ரவரி 2020 இல், அகமதாபாத்தில் இந்தியர்களிடமிருந்து பெற்ற வரவேற்பை டிரம்ப் விரும்பினார்.

ஆனால் டிரம்ப் 2.0 இன் திட்டங்கள் மிகவும் தீவிரமானது.

குடியேற்றம், நாடு கடத்தல்

சட்டவிரோதமாக குடியேறிய 104 இந்தியர்கள் அமெரிக்கா ராணுவ விமானத்தில் முதன்முதலாக திருப்பி அனுப்பப்பட்டனர். இது மோசமான நிகழ்வு என்றும், இதற்கு அரசு எதிர்வினையாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இது தவிர 487 இந்தியர்கள் மீண்டும் நாடு கடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களை திரும்பப் பெற இந்தியா தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தது.

அமெரிக்காவில் சுமார் 7.25 லட்சம் இந்தியர்கள் சட்டவிரோதமாக குடியேறியுள்ளதாக கூறப்படுகிறது. இவர்களில் 20 ஆயிரம் பேர் நாடு கடத்தலுக்காக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிகிறது. 2009 ஆம் ஆண்டு முதல் 15,500 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 6,135 பேர், டிரம்ப் முதன்முறையாக அதிபர் பதவியேற்றபோது நாடு கடத்தப்பட்டனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை, சட்டவிரோத குடியேறிகளைப் பெறுவது சர்வதேச சட்டத்திற்கு இணங்குவதன் ஒரு பகுதியாகும். ஆனால், அவர்களுக்கு கை விலங்குகள் மற்றும் கால் விலங்குகள் அணிவிக்கப்படுவது சிக்கலை உருவாக்குகிறது.

எனவே, டிரம்ப்புடனான மோடியின் சந்திப்பின் போது, ​​நாடு கடத்தப்படும் இந்தியர்களை மனிதாபிமானத்துடன் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் கண்ணோட்டத்தில், இது ஒரு நெருங்கிய மூலோபாய கூட்டாளரிடம் நியாயமற்ற கோரிக்கை இல்லை. மிக முக்கியமாக, கல்வி, வேலை மற்றும் சுற்றுலா போன்றவற்றிற்காக சட்டப்பூர்வமாக அமெரிக்காவிற்கு செல்லும் இந்தியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய இந்தியா விரும்புகிறது.

வர்த்தகம் மற்றும் வரி விதிப்பு

டிரம்பின் அகராதியில் வரிகள் என்ற வார்த்தை மிக அழகாக தோன்றுவதை போல இருப்பது, மற்ற நாடுகளுடனான உறவில் எரிச்சலை ஏற்படுத்துகின்றன. கனடா, மெக்சிகோ மற்றும் சீனா மீது அதிக இறக்குமதி வரிகளை டிரம்ப் விதித்தார். மேலும், கடந்த காலங்களில் வரி விதிப்பில் இந்தியா துஷ்பிரயோகமாக செயல்படுகிறது எனவும் டிரம்ப் விமர்சித்தார்.

திங்களன்று, டிரம்ப் அலுமினியம் மற்றும் எஃகு இறக்குமதி மீது 25% வரியை அறிவித்தார். இது எந்த நாட்டிற்கும் விலக்குகள் மற்றும் விதிவிலக்குகள் அளிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக உள்நாட்டில் எஃகு விலை குறையும் என்று இந்திய நிறுவனங்கள் அஞ்சுகின்றன. 

அமெரிக்க அதிபர், பொதுவாக சிறந்த ஒப்பந்தங்களைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்த வரி விதிப்பு அச்சுறுத்தல்களைப் பயன்படுத்தினார். மேலும், உரையாடலை மென்மையாக்க மோடியின் வருகைக்கு முன்னதாக இந்தியா ஏற்கனவே உயர்தர மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மின்சார பேட்டரிகள் மீதான கட்டணங்களை குறைத்துள்ளது.

சீனா மீதான மூலோபாய சீரமைப்பு

சீனாவை, அமெரிக்காவிற்கு ஒரு மூலோபாய அச்சுறுத்தல் மற்றும் போட்டியாளர் என்று பெயரிட்ட முதல் அமெரிக்க அதிபர் டிரம்ப் தான். 

மெக்மாஸ்டர் குறிப்பில், "ஜப்பானிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் யாச்சி ஷோடாரோ மற்றும் இந்திய வெளியுறவு செயலாளர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் இருவரும் சீனாவின் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்பு நடத்தை குறித்து தங்கள் கடுமையான கவலைகளை பகிர்ந்து கொண்டனர்" எனக் குறிப்பிடப்பட்டிள்ளது.

டிரம்ப் சீனாவுக்கு எதிரான பொதுப் பேச்சுக்களை குறைத்திருந்தாலும், இந்தியா கணிசமான கொள்கையில் தொடர்ச்சியை எதிர்பார்க்கிறது.
ஏ.ஐ பந்தயத்தில் பெய்ஜிங், அமெரிக்காவுடன் கடுமையான போட்டியில் இருப்பதால் இது முக்கியமானது எனக் கூறப்படுகிறது.

இந்திய - அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பில் சீனாவும் தாக்கத்தை ஏற்படுத்தும். ட்ரோன்கள் போன்ற அமெரிக்க உபகரணங்களை இந்தியா வாங்க வேண்டும் என்று டிரம்ப் விரும்புவதால், மோடி மற்றும் டிரம்ப் விவாதத்தில் சீனா குறித்தும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

- Shubhajit Roy 

India America

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: