இந்தியாவில் ஆண்களுக்கு நிகரான வாய்ப்புகள் பெண்களுக்கு வழங்கப்படுகிறதா? WEF அறிக்கை!

153 நாட்கள் கொண்ட பட்டியலில் இந்தியாவுக்கு 112வது இடம் தான் கிடைத்துள்ளது.

By: Updated: December 18, 2019, 08:29:31 PM

World Economic Forum Global Gender Gap Report 2020 : உலக அளவில் ஆண்கள் பெண்களுக்கு இடையேயான ஜென்டர் கேப் எப்படி இருக்கிறது? இந்த பாலியல் இடைவெளியை குறைக்க என்ன வழி என்று நாம் யோசித்துக் கொண்டு இருக்கின்றோம். தற்போதைய நிலையில் உலக நாடுகளில் சில நாடுகள் மட்டும் புதிய திட்டங்கள், புதுப்புது வாய்ப்புகள் மூலமாக இந்த இடைவெளியை குறைத்து வருகிறது. இந்த இடைவெளியை அடிப்படையாக கொண்டு உலக பொருளாதார மன்றம் ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது.

19 வருடத்திற்கு முன்பு சச்சினுக்கு சென்னை ரசிகர் கொடுத்த பேட்டிங் டிப்..

World Economic Forum Global Gender Gap Report 2020

ஐஸ்லாந்து, நார்வே, மற்றும் பின்லாந்து நாடுகள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளது. 153 நாட்கள் கொண்ட பட்டியலில் இந்தியாவுக்கு 112வது இடம் தான் கிடைத்துள்ளது. இந்த பட்டியலை உலக பொருளாதார மன்றம் ( World Economic Forum (WEF)) வெளியிட்டுள்ளது. பொருளாதாரம் ஈட்டலில் பங்கேற்பு, வாய்ப்புகள் மற்றும் கல்வியை பெறுதல், சுகாதாரம் மற்றும் வாழ்வு, அரசியல் அதிகாரம் ஆகிய நான்கு முக்கிய காரணங்களை அடிப்படையாக கொண்டு ஜென்டெர் கேப் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

World Economic Forum Global Gender Gap Report 2020 World Economic Forum Global Gender Gap Report 2020

உலகளாவிய ஜென்டெர் கேப் அறிக்கை 2020 (Global Gender Gap Report 2020) நிர்வாகிகளின் கணக்கெடுப்பு மற்றும் சர்வதேச அமைப்புகளின் சமீபத்திய அறிக்கைகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது என்று உலக பொருளாதார மன்றம் அறிவித்துள்ளது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையே இருக்கும் உடல்நலம், கல்வி, பொருளாதாரம், மற்றும் அரசியல் ரீதியான ஒப்பீட்டு இடைவெளிகளை குறைப்பதற்கான வழிகாட்டியாக இந்த அறிக்கை அமையும். இந்த அறிக்கைகளை அடிப்படையாக கொண்டு உலக நாடுகள் பொருளாதாரம், அரசியல் மற்றும் கலாச்சாரம் ரீதியான முன்னுரிமைகளை பெண்களுக்காக நிறுவ இயலும் என்று கூறியுள்ளது உலக பொருளாதார மன்றம்.

To read this article in English

அறிக்கையில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள்

உலக அளவில் சராசரியாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே இருந்த தூரம் 68.6% வரை குறைக்கப்பட்டுள்ளது. கடந்த முறை வெளியான அறிக்கையை காட்டிலும் இதன் அளவு அதிகரித்துள்ளது.  மிகப்பெரிய பாலின ஏற்றத்தாழ்வு அரசியல் அதிகாரமளிப்பதில் உள்ளது. உலகெங்கிலும் உள்ள நாடாளுமன்றங்களில் இருக்கும் இடங்கள் 35,127 ஆகும். அதில் வெறும் 25% மட்டுமே பெண்கள் இடம் பெற்றுள்ளனர், 3,343 அமைச்சர்களில் 21% மட்டுமே பெண்கள்.

சி.ஏ.ஏ-க்கு எதிராக தமிழகம் முழுவதும் வலுக்கும் போராட்டம்…

இப்போதைய நிலையை கணக்கில் கொண்டால் உலக அளவில் இந்த இடைவெளியை முற்றிலுமாக குறைக்க 99.5 ஆண்டுகள் தேவைப்படும்.

தற்போதைய அறிக்கையின் படி நிகழ்வுகள் சென்றால் 54 ஆண்டுகளில் மேற்கு ஐரோப்பாவில் 54 ஆண்டுகளில் இந்த இடைவெளி குறைக்கப்படும். லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் 59 ஆண்டுகளில் இந்த இடைவெளி குறைக்கப்படும். 71.5 ஆண்டுகளில் தெற்காசியாவில் இந்த இடைவெளி குறைக்கப்படும். சஹாரா ஆப்பிரிக்க நாடுகளில் 95 ஆண்டுகளிலும், கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் 107 ஆண்டுகளிலும், மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்காவில் 140 ஆண்டுகளிலும், வட அமெரிக்காவில் 151 ஆண்டுகளிலும், கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் 163 ஆண்டுகளிலும் பாலின இடைவெளி குறைக்கப்படும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:World economic forum global gender gap report

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement