பிராந்திய மொழிகள் பேசுவோர் எண்ணிக்கை சரிகிறது : முழு புள்ளிவிவரம்

இந்தியாவில் பேசப்படும் முதல் 12 மொழிகளில், இந்தி மொழியைத் தவிர்த்து இதர மொழிகளில்  பேசும் மக்கள் சதவீதம் கணிசமாக குறைந்துள்ளது.

By: Updated: February 22, 2020, 11:01:15 AM

மொழியியல் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் பன்மொழிவாதத்தை” ஊக்குவிப்பதற்காக 1999  ஆம் ஆண்டும் முதல் பிப்ரவரி 21 ஆம் தேதி சர்வதேச தாய் மொழி தினமாக கொண்டாடப்படுகிறது.

ஐ.நா.வின் கூற்றுப்படி, உலகில் வழக்கிலுள்ள 6000 மொழிகளில், 43 சதவிகிதம் ஆபத்தான அருகி  (Endangered) வரும் நிலையில் உள்ளன. மறுபுறமோ, உலக மக்கள் தொகையில் 60% க்கும் (4.8 பில்லியன் பேச்சாளர்கள்) அதிகமான மக்கள்  வெறும் 10 மொழிகளை பயன்படுத்துகின்றனர். அதாவது, கல்வி மற்றும் பொது மேடைகளில் சுமார் இந்த 10 மொழிகளே அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.

எத்னோலாக் என்ற ஆன்லைன் டேட்டாபேஸ் அறிக்கைப்படி, 2019 ஆம் ஆண்டில் 1.132 பில்லியன்(ஒரு பில்லியன் – 100 கோடிக்கு சமம்) பேச்சாளர்களுடன் ஆங்கிலம் அதிகம் பேசப்படும் மொழியாக உள்ளது. மாண்டரின் சீனா வழக்கு மொழி 1.117 பில்லியன் பேச்சாளர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.  615 மில்லியன் பேச்சாளர்களுடன் இந்தி மூன்றாவது இடத்திலும், 265 மில்லியனுடன் பெங்காலி ஏழாவது இடத்திலும் உள்ளது.

இந்தியாவிற்குள்:

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில், இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழியாக இந்தி இருந்தது. இந்தியாவில், 528 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்தி மொழியை பேசுகின்றனர். 2011 ஆம் ஆண்டில், 97.2 மில்லியன் மக்கள் பெங்காலி பேசுபவர்களும், 83 மில்லியன் மக்கள் மராத்தி மொழியில் பேசுபவர்களாக இருந்தனர்.

50 மில்லியனுக்கும் அதிகமான இதர மொழிகளில்  பேசுபவர்களின் பட்டியல் பின்வருமாறு:  தெலுங்கு (81 மில்லியன்), தமிழ் (69 மில்லியன்), குஜராத்தி (55.5 மில்லியன்) மற்றும் உருது (50.8 மில்லியன்)

மேலே, உள்ள வரைபடத்தை பார்த்தோமானால், 1991 ஆண்டில் ஒட்டு மொத்த மக்கள்தொகையில், 39.29% மக்கள் இந்தி மொழி பேசுபவர்கள். 2011 ஆம் ஆண்டில் இது 43.63% ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் பேசப்படும் முதல் 12 மொழிகளில், இந்தி மொழியைத் தவிர்த்து இதர மொழிகளில்  பேசும் மக்கள் சதவீதம் கணிசமாக குறைந்துள்ளது (1991 -2011 காலக்கட்டத்தில்).

 

 

ஏன் பிப்ரவரி 21 :  கிழக்கு பாகிஸ்தானில் (இன்றைய பங்களாதேஷ்) உருது மொழியை மேற்கு பாகிஸ்தான் (இன்றைய பாகிஸ்தான்) திணித்ததை எதிர்த்து 1952 ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தை நினைவுகூரும் வகையில் சர்வதேச தாய் மொழி தினம்  கொண்டாடப்படுகிறது .

டெய்லி சன் என்ற நாளிதழ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த மொழி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து டாக்கா பல்கலைக்கழக மாணவர்களை ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டால் “சிலர்” கொல்லப்பட்டனர்.

காவல்துறையின் இந்த வன்முறையைக் கண்டித்து மறுநாள் பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்ட போராட்டத்திலும், காவல் துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் பலர் மரணம் அடைந்தார்கள். இவர்களை நினைவுக் கூறும் வகையில், வங்கதேச அரசு பிப்ரவரி 21ம் தேதியை (1953 ஆம் ஆண்டு முதல்) ஏகுஷே தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஏகுஷே என்றால் வங்காள வார்த்தையில்  21 என்று பொருள்.

தெற்காசியா ஜனநாயக மன்றத்தின் கூற்றுப்படி, கொல்லப்பட்டவர்களில்- அபுல் பர்கத், அப்துல் ஜபார், ரபிகுதீன் அஹ்மத், அப்துஸ் சல்மான், ஷபியுர் ரஹ்மான் மொழி தியாகிகளா அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:World mother language day indian population language trends

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X