WPL Auction 2023 Tamil News: முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) டி20 கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (மார்ச்) 4-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை மும்பையில் நடக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, யு.பி. வாரியர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 5 அணிகள் களமிறங்க உள்ளன.
இந்த அணிகளுக்கு வீராங்கனைகளை தேர்வு செய்வதற்கான ஏலம் மும்பையில் பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்சில் உள்ள ஜியோ சர்வதேச கூட்டரங்கில் நேற்று பிற்பகல் நடந்தது. 5 அணிகளைச் சேர்ந்த உரிமையாளர்கள், நிர்வாகிகள் ஏலத்தில் பங்கேற்றனர். ஒவ்வொரு அணிக்கும் தலா ரூ.12 கோடி செலவிட அனுமதிக்கப்பட்டது. ஏலப்பட்டியலில் 179 வெளிநாட்டவர் உள்பட மொத்தம் 449 வீராங்கனைகள் இடம் பிடித்தனர். அவர்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்த ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்டவராக இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இருந்தார். அவரை ரூ. 3.4 கோடிக்கு (மொத்த பணப்பையில் 28.3 சதவீதம்) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வாங்கியது. வெளிநாட்டு வீராங்கனைகளில் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் ஆஷ்லீக் கார்டனர் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட வீராங்கனையாக இருந்தார். அவரை குஜராத் ஜெயண்ட்ஸ் ரூ.3.2 கோடிக்கு வாங்கியது.
ஏலத்தில் ஒவ்வொரு அணியின் செயல்பாடுகள் மற்றும் அணியின் பலம் மற்றும் பலவீனங்களின் சுருக்கமாக இங்கு பார்க்கலாம்.
டெல்லி கேப்பிட்டல்ஸ்
ஜெமிமா ரோட்ரிக்ஸ் (2.20 கோடி), மெக் லானிங் (1.10 கோடி), ஷஃபாலி வர்மா (2.00 கோடி), ராதா யாதவ் (40 லட்சம்), ஷிகா பாண்டே (60 லட்சம்), மரிசானே கப் (1.50 கோடி), டிடாஷ் சாது (25 லட்சம்), ஆலிஸ் கேப்ஸி (75 லட்சம்), தாரா நோரிஸ் (10 லட்சம்), லாரா ஹாரிஸ் (10 லட்சம்), ஜாசியா அக்தர் (10 லட்சம்), மின்னு மணி (30 லட்சம்), டானியா பாட்டியா (30 லட்சம்), பூனம் யாதவ் (40 லட்சம்), ஜெஸ் ஜோனாசன் (50 லட்சம்), சினேகா தீப்தி (30 லட்சம்), அருந்ததி ரெட்டி (30 லட்சம்), அபர்ணா மோண்டல் (10 லட்சம்)
ஏலத்தில் கடைசியாக வீராங்கனைகளை வாங்க தொடங்கிய அணியாக டெல்லி இருந்தது. எனினும், அந்த அணி சிறப்பானவர்களையே வாங்கியுள்ளனர். குறிப்பாக இளம் மற்றும் அனுபவமிக்க வீராங்கனைகளுடன் ஒரு அணியை உருவாக்கியுள்ளனர். ஆனால் வீராங்கனைகளுக்கு இன்னும் அதிகமாக செலவழித்திருக்கலாம் என்று தெரிகிறது.
பலம்
தரமான பேட்டிங்: ஷஃபாலி வர்மா மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் இருவரும் ஏலத்தில் சிறந்த இந்திய டாப் ஆர்டர் பேட்டர்களாக உள்ளனர். ஆஸ்திரேலியாவின் உலகக் கோப்பையை வென்ற கேப்டன் மெக் லானிங்குடன் சேர்த்து, டெல்லி அணியின் டாப் ஆர்டர் நன்றாக உள்ளது. மிடில் ஆர்டரில், மரிசான் கேப் மற்றும் ஆலிஸ் கேப்ஸி ஆகியோர் வேகமாக ரன்களை குவிப்பதில் சிறந்தவர்களாக உள்ளனர்.
பலவீனம்
பவுலிங்: டெல்லியின் பந்துவீச்சு பிரிவில் நிலையாக வீசக் கூடிய வீராங்கனைகள் இல்லை. பந்து வீச்சாளர்களுக்கு உகந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் போட்டியில், பந்துவீச்சுத் துறையில் தரம் இல்லாதது டெல்லிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தும். ராதா யாதவ் மற்றும் ஷிகா பாண்டே, எக்ஸ்-ஃபேக்ட்டராக பார்க்கப்படும் 19 வயதுக்குட்பட்ட நட்சத்திரம் திடாஷ் சாது போன்றோரைத் தான் அந்த அணி பெரிதும் நம்புகிறது.
குஜராத் ஜெயண்ட்ஸ்
ஆஷ்லே கார்ட்னர் (3.20 கோடி), பெத் மூனி (2.00 கோடி), சோபியா டன்க்லி (60 லட்சம்), அனாபெல் சதர்லேண்ட் (70 லட்சம்), ஹர்லீன் தியோல் (40 லட்சம்), டீன்ட்ரா டாட்டின் (60 லட்சம்), ஸ்னே ராணா (75 லட்சம்), எஸ். மேகனா (30 லட்சம்), ஜார்ஜியா வேர்ஹாம் (75 லட்சம்), மான்சி ஜோஷி (30 லட்சம்), மோனிகா பட்டேல் (30 லட்சம்), தனுஜா கன்வர் (50 லட்சம்), சுஷ்மா வர்மா (60 லட்சம்), ஹர்லி கலா (10 லட்சம்), அஷ்வனி குமாரி (35 லட்சம்), ஷப்னம் எம்.டி (10 லட்சம்).
குஜராத் ஜெயண்ட்ஸ் அணியால் மார்கியூ இந்திய வீராங்கனைகளைப் பெற முடியவில்லை. இதனால், வெளிநாட்டு வீராங்கனைகளை வாங்கிக் குவித்தனர். டபிள்யூ.பி.எல்-லில் இந்திய வீராங்கனைகளுக்கான ஒதுக்கீடுகள் இல்லை என்றால், போட்டியில் குஜராத் சிறந்த அணியாக இருந்திருக்கும். ஆனால், நிரூபிக்கப்படாத அல்லது சோதிக்கப்படாத உள்நாட்டுத் திறமைகளைத் தேர்ந்தெடுக்கும் போது அவர்கள் விளையாடும் லெவனில் இருந்து சில சிறந்த வீரர்களை வெளியேற்றும் நிலை ஏற்படும்.
பலம்
வெளிநாட்டு வீராங்கனைகளின் தரம்: பெத் மூனி போன்ற மிகவும் திறமையான பேட்டர்களில் ஒருவரைக் குஜராத் ஜெயண்ட்ஸ் கொண்டுள்ளனர். அவர் ஒரு நல்ல விகிதத்தில் ஸ்கோர் செய்கிறார் மற்றும் கீப்பிங் விருப்பத்தையும் வழங்குகிறார். ஆஷ்லே கார்ட்னர் இப்போது உலகின் சிறந்த டி20 வீராங்கனைகயாக வலம் வருகிறார். பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் கலக்குவார். சோபியா டன்க்லி, டியாண்ட்ரா டோட்டின், ஜார்ஜியா வேர்ஹாம் மற்றும் அனாபெல் சதர்லேண்ட் போன்ற நம்பகமான வீராங்கனைகளைக் கொண்டு, குஜராத் தங்கள் வெளிநாட்டுத் திறமைகளை நம்பி முன்னேறி கேம்களை வெல்லும்.
பலவீனம்
நிரூபிக்கப்பட்ட இந்திய வீராங்கனைகள் இல்லாதது: பல ஆண்டுகளாக, இந்திய வீரர்களின் தரம் தான் ஒரு அணியின் வெற்றியை பெரும்பாலும் தீர்மானிக்கிறது என்பதை ஐ.பி.எல் காட்டியுள்ளது. இந்த விஷயத்தில், குஜராத்தில் முக்கிய கேள்விக்குறிகள் உள்ளன. ஸ்னே ராணா, எஸ் மேகனா, ஹர்லீன் தியோல் மற்றும் சுஷ்மா வர்மா ஆகியோரில் இந்திய அணியின் விளிம்புநிலை வீரர்கள் உள்ளனர். அவர்கள் ஒரு நட்சத்திர இந்திய வீரரைப் போல் பேசப்படவில்லை. ரயில்வேயில் இருந்து வீராங்கனைகளை தேர்வு செய்யும் மிதாலி ராஜின் வியூகம் பலிக்குமா? என்பதை காலம்தான் பதில் சொல்லும்.
மும்பை இந்தியன்ஸ்
ஹர்மன்ப்ரீத் கவுர் (1.80 கோடி), நாட் ஸ்கிவர்-பிரண்ட் (3.00 கோடி), அமெலியா கெர் (1.00 கோடி), பூஜா வஸ்த்ரகர் (1.90 கோடி), யாஸ்திகா பாட்டியா (1.50 கோடி), ஹீதர் கிரஹாம் (30 லட்சம்), இஸ்ஸி வோங் (30 லட்சம்) , அமன்ஜோத் கவுர் (50 லட்சம்), தாரா குஜ்ஜர் (10 லட்சம்), சைகா இஷாக் (10 லட்சம்), ஹேலி மேத்யூஸ் (40 லட்சம்), க்ளோ ட்ரையன் (30 லட்சம்), ஹுமைரா காசி (10 லட்சம்), பிரியங்கா பாலா (20 லட்சம்), சோனம் யாதவ் (10 லட்சம்), ஜிந்தாமணி கலிதா (10 லட்சம்), நீலம் பிஷ்ட் (10 லட்சம்).
ஏலத்தில் சில நேரங்களில் மும்பை இந்தியன்ஸ் கையைத் தூக்க தயக்கம் காட்டியது. அவர்கள் வைத்திருக்கும் மேட்ச் வின்னர்கள் இன்னும் கேம்களை வெல்வதற்கு அவர்களுக்கு உதவக்கூடும் என்றாலும், ஒட்டுமொத்தமாக, ஏலத்தில் மும்பையின் செயல்திறன் முந்தைய ஆண்டுகளில் உரிமையாளரிடம் இருந்த சில ஐ.பி.எல் ஏலங்களிலிருந்து வெகு தொலைவில் இருந்தது. உண்மையில், விஷயங்கள் மிகவும் குழப்பமாக இருந்தன. ஏலதாரர் மும்பைக்கு தேவையான குறைந்தபட்ச எண்ணிக்கையிலான வீராங்கனைகளை வாங்க அனுமதிக்க இறுதி சுற்று ஏலத்தை நடத்த வேண்டியிருந்தது.
பலம்
ஹர்மன்ப்ரீத் கவுர்: இந்திய பெண்கள் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ஹர்மன்ப்ரீத் கவுரை ரூ.1.80 கோடி மட்டுமே கொடுத்து வாங்கியது மும்பை அணி. 33 வயதான அவர் அணிக்கு நல்ல வலு சேர்கிறார். இந்த ஃபார்மெட்டில் அவரைப் போல் வெகு சில வீராங்கனைகளால் மட்டுமே செயல்பட முடியும். 2017 உலகக் கோப்பையின் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அவரது ஆட்டம். கிரிக்கெட்டில் இதுவரை விளையாடிய சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்றாகும்.
பலவீனம்
அடிப்படை விலை வீராங்கனைகள் அதிகம்: மும்பையின் குழப்பமான ஏல உத்தி (அல்லது அதன் பற்றாக்குறை) என்பது ஏலத்தின் முடிவில் பேரம் பேசும் போது சில வீராங்கனைகளுக்கு அதிக பணம் கொடுத்து எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. இது ஒட்டுமொத்தமாக, அணி பலவீனமாகத் தெரிகிறது. குறிப்பாக மற்ற சில அணிகளுடன் ஒப்பிடும்போது, பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே பின்னடைவு ஏற்படும். அதை அவர்கள் எப்படி சமாளிப்பார்கள் என்பதை பார்ப்பதில் சுவாரசியமாக இருக்கும்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ
ஸ்மிருதி மந்தனா (3.40 கோடி), சோஃபி டெவின் (50 லட்சம்), எலிஸ் பெர்ரி (1.70 கோடி), ரேணுகா சிங் (1.50 கோடி), ரிச்சா கோஷ் (1.90 கோடி), எரின் பர்ன்ஸ் (30 லட்சம்), திஷா கசத் (10 லட்சம்), இந்திராணி ராய் (10 லட்சம்), ஸ்ரேயங்கா பாட்டீல் (10 லட்சம்), கனிகா அஹுஜா (10 லட்சம்), ஆஷா ஷோபனா (10 லட்சம்), ஹீதர் நைட் (40 லட்சம்), டேன் வான் நீகெர்க் (30 லட்சம்), ப்ரீத்தி போஸ் (30 லட்சம்), பூனம் கெம்னார் (10 லட்சம்), கோமல் சன்சாத் (25 லட்சம்), மேகன் ஷட் (40 லட்சம்), சஹானா பவார் (10 லட்சம்).
ஆர்.சி.பி ஏலத்தின் ஆரம்பத்தில் பெரிய அளவில் சென்றது, மந்தனா, டிவைன் மற்றும் பெர்ரியை முதல் செட் மார்கியூ வீராங்கனைகளில் இருந்து கைப்பற்றியது. அவர்களின் ஏல உத்தியைப் பார்க்கும்போது, அவர்கள் விரும்பும் வீராங்கனைகளைப் பற்றி அவர்கள் மிகவும் தெளிவாகவும், அவர்களைப் பெறுவதற்கு அதிக செலவு செய்ய பயப்படுவதில்லை என்றும் தோன்றியது. விரைவுபடுத்தப்பட்ட ஏலத்தில் அவர்கள் சில மதிப்புக் கையகப்படுத்துதல்களைச் செய்திருந்தாலும், குறிப்பாக டேன் வான் நீகெர்க், அவர்களின் அணியின் மையமானது பெரிய பெயரைக் கொண்டுள்ளது.
பலம்
சிறந்த வீராங்கனைகளின் கூட்டணி: சம கால கிரிக்கெட் வீராங்கனைகளில் மிகவும் திறமையான ஒருவராக இந்தியாவின் மந்தனா (26) உள்ளார். அவருடன் பெர்ரி மற்றும் டிவைன் போன்ற சிறந்த விளையாட்டு வீராங்கனைகளையும், பெண்கள் கிரிக்கெட்டின் இரண்டு பிரபலமான பெயர்களையும் தேர்ந்தெடுத்துள்ளது பெங்களூரு அணி. 19 வயதான ரிச்சா கோஷ் இந்தியாவின் சிறந்த விக்கெட் கீப்பிங் வாய்ப்பாக உள்ளார். மேலும், மிடில் ஆர்டரில் வேகமாக ரன் குவிக்கும் திறன் கொண்டவராகவும் அவர் இருக்கிறார். ஒட்டுமொத்தமாக, பெங்களூரு அணி பல வெற்றியாளர்களுடன் சிறப்பாக உள்ளது.
பலவீனம்
டெப்த்: ஆரம்பத்திலேயே பெங்களூரு அணி குங்-ஹோ அணுகுமுறையுடன், அவர்கள் ஒட்டுமொத்த அணியின் ஆழத்தில் சமரசம் செய்துகொண்டனர். பல புதிய முகங்கள் வாங்கப்பட்ட இந்திய திறமைகளுக்கு இது குறிப்பாக உண்மையாக இருக்கு. மேலும், அவர்களிடத்தில் ஒரு தரமான இந்திய சுழற்பந்து வீச்சாளர் இல்லை. ஏனென்றால், அவரால் இந்திய சூழலில் சிறப்பாக பந்துகளை வீச முடியும்.
யு.பி.வாரியர்ஸ்
சோஃபி எக்லெஸ்டோன் (1.80 கோடி), தீப்தி ஷர்மா (2.60 கோடி), தஹ்லியா மெக்ராத் (1.40 கோடி), ஷப்னிம் இஸ்மாயில் (1.00 கோடி), அலிசா ஹீலி (70 லட்சம்), அஞ்சலி சர்வானி (55 லட்சம்), ராஜேஸ்வரி கயக்வாட் (40 லட்சம்), பார்ஷவி சோப்ரா (10 லட்சம்), ஸ்வேதா செஹ்ராவத் (40 லட்சம்), எஸ் யஷஸ்ரீ (10 லட்சம்), கிரண் நவ்கிரே (30 லட்சம்), கிரேஸ் ஹாரிஸ் (75 லட்சம்), தேவிகா வைத்யா (140 லட்சம்), டி. ஹேமலதா (30 லட்சம்), லாரன் பெல் (30 லட்சம்), லட்சுமி யாதவ் (10 லட்சம்), சிம்ரன் ஷேக் (10 லட்சம்).
பலம்:
பந்துவீச்சு: ஷப்னிம் இஸ்மாயில் மற்றும் தஹ்லியா மெக்ராத் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் முதல் தீப்தி ஷர்மா, ராஜேஸ்வரி கயக்வாட் மற்றும் சோஃபி எக்லெஸ்டோன் போன்ற சுழற்பந்து வீச்சாளர்கள் வரை யுபி வாரியர்ஸ் நம்பமுடியாத பந்துவீச்சு திறமைகளை குவித்துள்ளனர். அவர்கள் பரஷ்வி சோப்ரா மற்றும் அஞ்சலி சர்வானி போன்ற சிறந்த திறமைகளை கொண்டுள்ளனர்.
பலவீனம்
பேட்டிங்: யுபி வாரியர்ஸ் சில தரமான ஆல்-ரவுண்டர்களைக் கொண்டிருந்தாலும், அலிசா ஹீலி யு.பி.க்காக அதிக ரன்களை எடுக்க வேண்டும். ஒரு சில நம்பகமான பேட்டர்கள் (டேவிட் வார்னர் மற்றும் ரஷீத் கான் காலத்தைச் சேர்ந்த சன்ரைசர்ஸ் மாடல்) மீது ரன் குவிக்கும் கடமைகளுடன் கூடிய பவுலிங் ஹெவி யூனிட்டிற்கு யு.பி. சென்றால், அவர்கள் தலையில் அவர்களே ஆணி அடித்து போட்டிக்கு செல்லவதாக இருக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.