/tamil-ie/media/media_files/uploads/2020/08/image-67.jpg)
Link found between poor liver tests and Covid-19 outcomes
கொரோனா நோயாளிகளிடம், அசாதாரண கல்லீரலை உறுதி செய்யும் விகிதம் அதிகளவில் இருப்பதாக புதிய ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. இது முந்தைய ஆய்வுகளிலும் சுட்டிக் காட்டப்பட்டது தான் என்றாலும், இந்த பாதிப்பு விகிதங்கள் மிக அதிகமாக இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
சீனாவில் மேற்கொள்ளப் பட்ட முந்தைய ஆய்வில், கொரோனா தொற்று நோயாளிகளில் சுமார் 15% பேர் அசாதாரண கல்லீரலைக் கொண்டிருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது . யேல் கல்லீரல் மையம் ( Yale Liver Center), கடந்த மார்ச் - ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் யேல் நியூ ஹேவன் ஹெல்த் (Yale New Haven Health) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1,827 கொரோனா நோயாளிகளிடம் மேற்கொண்ட புதிய ஆய்வில், அசாதாரண கல்லீரல் பாதிப்பு விகிதம் 41.6% முதல் 83.4% வரை இருப்பதைக் கண்டறிந்துள்ளது.
ஜர்னல் ஆப ஹெபடாலஜி என்ற நாளிதழில் இந்த ஆய்வுக் கட்டுரை வெளியானது . நோயாளிகளுக்கு கல்லீரல் நொதிகள் அதிக அளவு இருப்பது (கல்லீரல் சேதமடையும் போது வெளியாகும் புரதங்கள்) தீவிர சிகிச்சை பிரிவு , மெக்கானிக்கல் வெண்டிலேட்டர் மற்றும் இறப்பு உள்ளிட்ட விளைவுகளுடன் தொடர்புடையவை என்றும் கண்டறியப்பட்டது.
(Source: Yale University)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.