எஸ் பேங்க் விவகாரம் – யாருக்கெல்லாம் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?…

YES bank crisis : எஸ் வங்கியை, ரிசர்வ் வங்கி கையகப்படுத்தியுள்ள நிலையில், ஏப்ரல் 3ம் தேதி வரையிலான காலகட்டத்தில் வங்கியின் வாடிக்கையாளர்கள், முதலீட்டாளர்கள் உள்ளிட்டோர் அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்ற முடிவு அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

yes bank, yes bank crisis, yes bank depositors, yes bank investors, yes bank news, indian express
yes bank, yes bank crisis, yes bank depositors, yes bank investors, yes bank news, indian express

எஸ் வங்கியை, ரிசர்வ் வங்கி கையகப்படுத்தியுள்ள நிலையில், ஏப்ரல் 3ம் தேதி வரையிலான காலகட்டத்தில் வங்கியின் வாடிக்கையாளர்கள், முதலீட்டாளர்கள் உள்ளிட்டோர் அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்ற முடிவு அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

எஸ் வங்கி திவால் ஆகிவிட்டதாகவும், வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, அதனை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. இந்த விவகாரத்தை கையாளும் பொருட்டு, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் தலைவர் நிர்வாக அதிகாரியாக செயல்படுவார் என்று மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், எஸ் வங்கியில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையால், வாடிக்கையாளர்கள், முதலீட்டாளர்கள், மியூச்சுவல் பண்ட் வைத்துள்ளோர் உள்ளிட்டோருக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என்பதை இனி காண்போம்..

டிபாசிட்தாரர்கள் கவனத்திற்கு..

எஸ் வங்கியில் பிக்சட் டிபாசிட், சேவிங்ஸ் அக்கவுண்ட் மற்றும் கரன்ட் அக்கவுண்ட் வாடிக்கையாளர்களுக்கு கடந்த பட்ஜெட்டின் போது அறிவிக்கப்பட்ட அறிவிப்பு நற்செய்தியாக அமைந்துள்ளது. அதாவது கடந்தாண்டு வரைங டிபாசிட்டுகளுக்கான இன்சூரன்ஸ் தொகை ரூ.1 லட்சமாக வழங்கப்பட்டு வந்த நிலையில் அது தற்போது ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, டிபாசிட்தாரர்கள் பயப்பட தேவையில்லை.

கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படுமா?

ஏப்ரல் 3ம் தேதி வரையில் ரூ.50 ஆயிரம் மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு மேலான ஈஎம்ஐக்களை சிறிதுகாலம் நிறுத்திவைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலம் தவறி செலுத்தப்படும் ஈஎம்ஐக்களால், கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படாது என்று வங்கி சார்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

மியூச்சுவல் எஸ்ஐபி பயனாளர்கள்

மியூச்சுவல் பண்ட் வைத்திருப்பவர்கள், ரூ.50 ஆயிரத்திற்கு அதிகமான தொகை என்றால், அதனை உடனடியாக ECS முறைக்கு மாற்றிக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்

முதலீட்டாளர்கள் கவனத்திற்கு

எஸ் வங்கியின் பங்குகள் சமீபகாலமாக பெரும் வீழ்ச்சியை சந்தித்து வந்தது முதலீட்டாளர்களை கவலை கொள்ள வைத்துள்ளது. இந்த வீழ்ச்சி, இன்னும் சில நாள்களுக்கு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வங்கியின் வீழ்ச்சியை தடுக்கும் பொருட்டு, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் அதிகாரியை விசாரணை அதிகாரியாக நியமித்து இந்த நிலையை மீட்டெடுக்க வழிவகை மேற்கொள்ளப்பட்டுள்ளது

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Yes bank yes bank crisis yes bank depositors yes bank investors yes bank news

Next Story
சாத்வி ப்ரக்யா சிங் தாக்கூர் கோட்ஸே குறித்து கூறியிருப்பது அவருடைய தனிப்பட்ட கருத்து!Loksabha election results 2019
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express