கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு மது அருந்தலாமா?

ஆன்டிபாடிகள் உருவாக ஆல்கஹால் தடையாக இருக்காது என்பதை உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள் பெரும்பாலும் ஒப்புக்கொள்கிறார்கள்.

you can take your Covid-19 vaccine and have a drink too

you can take your Covid-19 vaccine and have a drink too : ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸிற்கான தடுப்பு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் தற்போது வரை அனைவர் மனதிலும் எழும் சந்தேகம் என்னவென்றால் தடுப்பூசி போடும் போதோ, போட்ட பிறகோ, அல்லது அதற்கு முன்போ மது அருந்தலாமா என்பது தான்.

நீங்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்டீர்கள் என்பதற்காக மது அருந்தாமல் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. கொரோனா தொற்றுக்கு எதிராக வழங்கப்படும் தடுப்பூசியின் திறனை மது பயனற்றதாக மாற்றாது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இது தொடர்பாக தெளிவாக தன்னுடைய அறிக்கையில் அறிவித்தது. இது தொடர்பாக நீங்கள் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கேள்வி பதில் பக்கத்தில் காணலாம். [https://www.mohfw.gov.in/covid_vaccination/vaccination/faqs.html] இந்த பக்கத்தில் நீங்கள் இதனை சரிபார்க்கலாம்.

மது மற்றும் தடுப்பூசி பற்றிய கேள்விக்கு அமைச்சகம் “நிபுணர்களின் கூற்றுப்படி, மது தடுப்பூசியின் செயல்திறனை பாதிக்கும் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை” என்று கூறியுள்ளது.

குடி மற்றும் தடுப்பூசி குறித்து மற்ற நாட்டின் ஒழுங்குமுறை நிறுவனங்கள் கூறுவது என்ன?

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அமைப்பு அல்லது இங்கிலாந்தின் பொது சுகாதாரத்துறையோ கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் போதோ, அதற்கு முன்போ, அல்லது தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கு பின்போ குடிக்கலாமா என்பது தொடர்பாக எந்தவிதமான அதிகாரப்பூர்வ ஆலோசனைகளையும் வழங்கவில்லை.

இங்கிலாந்தின் சுயாதீன கட்டுப்பாட்டாளரான எம்.எச்.ஆர்.ஏ “கோவிட் -19 தடுப்பூசிகளின் செயல்திறனில் குடிப்பது தலையிடுகிறது என்பதற்கு தற்போது எந்த ஆதாரமும் இல்லை. இது குறித்து அக்கறை கொண்ட எவரும் தங்களின் மருத்துவரிடம் பேச அறிவுறுத்துகிறோம்” என்று கூறியுள்ளது.

தடுப்பூசி அனுபவத்திலிருந்து எழும் சான்றுகள் எதைக் காட்டுகின்றன?

ப்ளூம்பெர்க் சேகரித்த தரவுகளின்படி, மார்ச் 31 வரை 141 நாடுகளில் 574 மில்லியனுக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. அமெரிக்கர்கள் 148 மில்லியன் டோஸைப் பெற்றனர், இது அந்நாட்டு மக்கள் தொகையில் 23% ஆகும். இங்கிலாந்தில் 35 மில்லியன் டோஸ் வழங்கப்பட்டது, இது கிட்டத்தட்ட 26 சதவிகிதம். இந்தியாவில், 62 மில்லியன் டோஸ் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது.

இப்படியான சூழலில் , மதுவால் தடுப்பூசியின் செயல்திறன் குறைந்துவிட்டது என்பதற்கான எந்த அறிக்கையும் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆன்டிபாடிகள் உருவாக ஆல்கஹால் தடையாக இருக்காது என்பதை உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள் பெரும்பாலும் ஒப்புக்கொள்கிறார்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: You can take your covid 19 vaccine and have a drink too

Next Story
பல அழுத்தங்களின் விளைவாக பாகிஸ்தானின் அறிவுப்பூர்வ மாற்றத்தின் முதல்படி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express