உங்களின் பி.எஃப். பணமும், அதில் கிடைக்கும் வட்டிக்கு புதிய வரியும்!

ரூ .1,73,608 க்கு மேல் அடிப்படை மாத சம்பளம் உள்ள அனைத்து நபர்களுக்கும் ஒரு வருடத்தில் ரூ .2.5 லட்சத்துக்கு மேல் பி.எஃப் பங்களிப்பு இருக்கும்.

By: February 5, 2021, 2:05:07 PM

 Sandeep Singh , Aanchal Magazine

Your PF and new tax on interest : முதன்முறையாக, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு (இபிஎஃப்) வரி விதிக்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. ஒரு வருடத்தில் ரூ .2.5 லட்சத்திற்கு மேல் பங்களிப்பவர்களுக்கு மட்டுமே இந்த வரி. சமீபத்திய பட்ஜெட் திட்டங்களில், ரூ .2.5 லட்சத்திற்கு மேல் வருங்கால வைப்பு நிதிகளுக்கான அனைத்து பங்களிப்புகளில் கிடைக்கும் வட்டிக்கு வரி விலக்கு கிடைக்காது என்று அரசாங்கம் அறிவித்தது. இது ஈ.பி.எஃப்-க்கு வைத்திருக்கும் அனைத்து நபர்களுக்கும் கவலையை ஏற்படுத்தக்கூடும் என்றாலும் உண்மையில் இது ஒரு வருடத்தில் ரூ .2.5 லட்சத்துக்கு மேல் பி.எஃப். பங்களிப்பு செய்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.  இது அவர்களின் தற்போதைய கார்பஸையோ அல்லது மொத்த வருடாந்திர வட்டி விகிதத்தையோ பாதிக்காது.

ஏன் இந்த திட்டம்? இதன் அர்த்தம் என்ன?

சில ஊழியர்கள் அளவுக்கு அதிகமாக பி.எஃப்.-ல் முதலீடுசெய்து, வரி விலக்கில் இருந்து தப்பித்துக் கொள்வது மட்டும் அல்லாமல் அனைத்து மட்டங்களிலும், பங்களிப்பு, வட்டி விகிதம், மற்றும் பணத்தை திரும்ப பெறுதல், பலன் அடைகின்றனர் என்று அரசு கண்டறிந்ததாக பட்ஜெட் தாக்கல் செய்யும் போது கூறப்பட்டது. ஹை நெட்-வொர்த் இண்டிவிஜிவல் எனப்படும் அதிக அளவு சம்பாதிக்கும் தனிநபர்கள் தங்களின் பங்களில் இருந்து பெறும் அதிக அளவு பலனை தடுக்க இந்த முன்மொழிவு கூறப்பட்டுள்ளது. ஆண்டு ஒன்றுக்கு 2.5 லட்சத்திற்கும் மேலாக ஆண்டு பங்களிப்பிற்கு வரி விதிக்கப்படும். இது வருகின்ற ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது.

“இந்த நிதி உண்மையில் தொழிலாளர்களின் நலனுக்காகவே உருவாக்கப்பட்டது. இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்” என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். இது பெரிய அளவிலான நிதி செலுத்துபவர்களுக்கு மட்டுமே. ஏன் என்றால் அவர்களுக்கு வரி சலுகைகள் உள்ளன, மேலும் 8% வருமானம் உறுதி செய்யப்படுகிறது. சிலர் ரூ .1 கோடி வரை ஒவ்வொரு மாதமும் இதில் வரவு வைக்கின்றனர். ஒவ்வொரு மாதமும் இந்த நிதியில் ரூ .1 கோடி செலுத்தும் ஒருவருக்கு, அவருடைய சம்பளம் என்னவாக இருக்க வேண்டும்? எனவே, அவர் வரிச்சலுகைகள் மற்றும் 8% வருமானம் உறுதிசெய்ய, ரூ. 2 லட்சம் பெரும் ஒரு நபரின் நிலையோடு ஒப்பிட முடியாது என்று நாங்கள் நினைத்தோம் என்றார் அவர்.

எந்தெந்த இ.பி.எஃப். கணக்குகள் இதன் கீழ் வரும்? இதன் வரி மதிப்பு எவ்வளவாக இருக்கும்?

வருடாந்திர இ.பி.எஃப்., கிராஜூவிட்டி மற்றும் தானாக முன் வந்து வைக்கப்படும் இ.பி.எஃப்பும் கணக்கில் கொள்ளப்படும். மொத்த மதிப்பு 2.5 லட்சத்திற்கு அதிகமானால், வருகின்ற வட்டி விகிதத்திற்கு வரி விதிக்கப்படும். முக்கியமாக, ஊழியர்களின் பங்களிப்பு மட்டுமே வரிவிதிப்பு நோக்கங்களுக்காக கணக்கிடப்படும். முதலாளியின் பங்களிப்பு கணக்கீடுக்கு கருதப்படாது.

எவ்வாறு வரி விதிக்கப்படும்?

30% உயர் வரி அடைப்பில் உள்ளவர்களுக்கு, 2.5 லட்சம் வரையில் வட்டி வருவாய் இ.பி.எஃப். மூலம் கிடைக்கும் பட்சத்தில் அவர்களுக்கு வரி பிடித்தம் செய்யப்படும். அதாவது ஒவ்வொரு வருடமும் ஒருவர் ரூ. 3 லட்சம் இ.பி.எஃப். செலுத்துகிறார் என்றால் (வாலண்டரி பி.எஃப். உட்பட), , ரூ .2.5 லட்சத்துக்கு மேல் அவர் அளித்த பங்களிப்புக்கான வட்டி, அதாவது ரூ .50,000க்கு வரி விதிக்கப்படும். இந்த வருமானத்திற்கான வட்டியாக கிடைக்கும் ரூ. 4,250க்கு (ரூ. 50 ஆயிரத்தில் 8.5%) வரி விதிக்கப்படும். எனவே அவர் ரூ. 1,325-ஐ வரியாக செலுத்த வேண்டும். ஒருவரின் ஆண்டு பங்களிப்பு ரூ. 12 லட்சமாக இருப்பின் அவருக்கு ரூ.9.5 லட்சத்திற்கு கிடைக்கும் வட்டியில் வரி கணக்கிடப்படும். இது போன்ற சூழலில் அவர் ரூ. 25,200-ஐ வரியாக செலுத்த வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil 

இது நிரந்தரமாக இருக்குமா?

ஒரு வருடத்தின் கூடுதல் பங்களிப்புக்கான வட்டி வருமானத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் வரி விதிக்கப்படும். இதன் பொருள் என்னவென்றால், 2022ஆம் நிதியாண்டில் பி.எஃப்பில் உங்கள் வருடாந்திர பங்களிப்பு ரூ .10 லட்சம் என்றால், ரூ .7.5 லட்சம் வட்டி வருமானத்திற்கு நீங்கள் வரி செலுத்த வேண்டும். நிதியாண்டு 2022க்கு மட்டுமல்ல, அடுத்தடுத்த ஆண்டுகளுக்கும் வரி விதிக்கப்படும். நிதியாண்டு 23 க்கு பி.எஃப் பங்களிப்பு ஒரே மாதிரியாக இருந்தால், ரூ .15 லட்சத்திற்கான வட்டி வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும். மேலும், நீங்கள் கடந்த ஆண்டு 8.5% வட்டி சம்பாதித்திருந்தால், நீங்கள் மிக உயர்ந்த வரி அடைப்பில் விழுந்தால், அடுத்த ஆண்டு கூடுதல் பங்களிப்பில் 5.85% திறம்பட சம்பாதிப்பீர்கள் (வட்டி விகிதம் மாறாமல் இருந்தால்).

நீங்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்?

கடன் மற்றும் இக்விட்டி ம்யூச்சுவல் பண்டில் பெரிதும் விருப்பம் இல்லாதவர்கள், குறைந்த அளவு வரியை பங்களிப்பில் இருந்து பெற்ற வட்டிக்காக கட்ட தயாராக இருப்பவர்கள் தாராளமாக இந்த வாலண்ட்டரி காண்ட்ரிபூசனில் பணம் செலுத்தலாம். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளை விரும்புபவர்கள் , மறுபுறம், ஏஏஏ-மதிப்பிடப்பட்ட கடன் திட்டங்களுக்கு தயாராக இருப்பவர்கள் ஏ.ஏ.ஏ. ரேட்டட் திட்டங்களுக்கு செல்லலாம். ஈக்விட்டி திட்டங்களுக்கான நீண்ட கால மூலதன ஆதாய வரி (12 மாதங்களுக்குப் பிறகு) ரூ .1 லட்சத்துக்கு மேல் கிடைக்கும் லாபங்களுக்கு 10% ஆகவும், கடன் நிதிகள் மீதான நீண்ட கால வரி குறியீட்டு நன்மையுடன் 20% ஆகவும் உள்ளது. எனவே, வரி செயல்திறன் மற்றும் சிறந்த வருமானத்திற்காக, பங்களிப்பு வரம்பை மீறினால் வட்டி வருமானத்தில் ஓரளவு வரி விதிக்கப்படும் என்பதால் பி.எஃப்-க்கு தன்னார்வ பங்களிப்பை நிறுத்திக் கொள்ளலாம்.

மேலும், வட்டி விகிதங்கள் வீழ்ச்சியடைந்து வருவதால் அரசாங்கம் ஈபிஎஃப் மீதான வட்டி சலுகையை குறைக்கக்கூடும், எனவே உங்கள் கார்பஸ் குறைந்த வருவாயைப் பெறக்கூடும். 8.5% வட்டிக்கு வரி கிடையாது. அது 30% வரி விதிக்கத் தொடங்கியதும், வரிக்கு பிந்தைய வருமானம் 5.85% ஆகக் குறைகிறது. விகிதங்கள் 8% ஆகக் குறைந்துவிட்டால், வருமானம் 5.5% ஆகக் குறையும்.

இதனால் யார் பாதிக்கப்படுவார்கள்?

மாதத்திற்கு ரூ .20,833க்கு மேல் பி.எஃப். செலுத்தும் எவரும் பாதிப்படைவார்கள். அவரது சொந்த பங்களிப்பு ஆண்டுக்கு ரூ .2.5 லட்சத்தை விட அதிகமாக இருக்கும். ரூ .1,73,608 க்கு மேல் அடிப்படை மாத சம்பளம் உள்ள அனைத்து நபர்களுக்கும் ஒரு வருடத்தில் ரூ .2.5 லட்சத்துக்கு மேல் பி.எஃப் பங்களிப்பு இருக்கும், எனவே அவர்கள் அந்த கூடுதல் தொகையில் சம்பாதித்த வட்டிக்கு வரி செலுத்துவார்கள்.  தனிநபர்களின் அடிப்படை சம்பளம் மாதத்திற்கு ரூ .173,608 க்கும் குறைவாக இருந்தாலும், தன்னார்வ பி.எஃப் பங்களிப்பு செய்தால், அவர்களின் மொத்த பங்களிப்பு ரூ .2.5 லட்சத்திற்கு மேல் இருந்தால் மட்டுமே இந்த நடவடிக்கை அவர்களை பாதிக்கும். உதாரணமாக, ஒரு நபருக்கு மாதத்திற்கு ரூ .1.5 லட்சம் அடிப்படை சம்பளம் இருந்தால், அவர் பி.எஃப்-க்கு தனது சொந்த பங்களிப்பாக ரூ .216,000 பங்களிப்பார். இருப்பினும், அவர் பி.எஃப்-க்கு தன்னார்வ பங்களிப்பாக ஆண்டுக்கு கூடுதலாக ரூ .60,000 செலுத்தினால், ரூ. 26000க்கான வட்டிக்கு வரி கட்ட வேண்டும்.

இது உங்கள் இருக்கும் கார்பஸின் வட்டி வருமானத்தை பாதிக்குமா?

மார்ச் 31, 2021 வரையில் இதனால் எந்த பாதிப்பும் இருக்காது, இது ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து தான் நடைமுறைக்கு வருகிறது என்பதால், 2.5 லட்சத்திற்கும் மேல் பங்களிப்பு செய்யும் நபர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

எத்தனை பேர் அதிக அளவு முதலீடு செய்கின்றனர்?

கிடைத்த தரவுகளின் படி, 4.5 கோடி பங்களிப்பாளார்களில் 1.23 லட்சம் கணக்குகள் எச்.என்.ஐ பங்களிப்புகளுக்கு கீழ் வருகிறது. மதிப்பீடுகளின்படி, 2018-19 நிதியாண்டிற்கான இந்த எச்.என்.ஐ கணக்குகளின் மொத்த பங்களிப்பு 62,500 கோடி ரூபாய் (சராசரியாக ரூ .50.8 லட்சம்). பி.எஃப் பங்களிப்புகளுக்கான வரி விலக்கு ஒரு வரம்புக்கு மேலே அகற்றுவதற்கான முடிவு பங்களிப்பாளர்களிடையே சமத்துவத்தின் கொள்கையின் அடிப்படையாக உள்ளது என்று ஒருவர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:Your pf and new tax on interest

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X