யூடியூப்பை தொடர்ந்து கவனித்து வருபவர்களா நீங்கள்….ஏதாவது மாற்றம் தெரிகிறதா?….

2019ம் ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான 3 மாதங்களில், சர்வதேச அளவில் 5.8 மில்லியன் அளவிலான வீடியோக்களை நீக்கியுள்ளதாக கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

youtube videos removed, youtube videos removed explained, why youtube videos removed, indian express news
youtube videos removed, youtube videos removed explained, why youtube videos removed, indian express news

2019ம் ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான 3 மாதங்களில், சர்வதேச அளவில் 5.8 மில்லியன் அளவிலான வீடியோக்களை நீக்கியுள்ளதாக கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

வீடியா இணையதளங்களின் முன்னோடியாக விளங்கும் யூடியூப் நிறுவனம், அனைத்து வகையான வீடியோக்களின் தொகுப்பாக இயங்கி வருகிறது. இந்த யூடியூப் இணையதளங்களில் குழுவாகவும், தனித்தனியாகவும் பலர் தங்களது வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். யூடியூப் தற்போது கூகுள் நிறுவனத்தின் கைவசம் உள்ளது. சமீபத்தில் கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 3 மாதங்களில் 5.8 மில்லியன் வீடியோக்கள், யூடியூப் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக, அமெரிக்காவிலிருந்து 1.1 மில்லியன் வீடியோக்களும், இந்தியா இந்த பட்டியலில்ல 7.5 லட்சம் வீடியோக்களுடன் 3ம் இடத்தில் உள்ளது.

தனிநபர் பயன்பாட்டாளர்களை யூடியூப் நிறுவனம் டிரஸ்டட் பிளாக்கர்ஸ் என்று வகைப்படுத்தியுள்ளது. அதனடிப்படையில், 10.9 மில்லியன் வீடியோக்கள் ரிப்போர்ட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் மட்டுமே அதிகளவில் ரிப்போர்ட் செய்யப்பட்டுள்ளது. அதன் எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை. இந்த பட்டியலில் இந்தியாவை தொடர்ந்து தென் கொரியா, அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் உள்ளன.

நீக்கப்பட்ட 5.8 மில்லியன் வீடியோக்களில், 5.3 மில்லியன் வீடியோக்கள், ஆட்டோமேட்டட் பிளாக்கிங் சிஸ்டத்தினால் ரிப்போர்ட் செய்யப்பட்டுள்ளன. தனிநபர் யூடியூப் பயனாளர்களே, 3 லட்சம் அளவிலான வீடியோக்களை நீக்கிவிட்டனர். ரிப்போர்ட் செய்யப்பட்டதன் அடிப்படையில் 2 லட்சம் வீடியோக்களும், என்ஜிஓக்களின் ரிப்போர்ட்களின் படி 12 ஆயிரம் வீடியோக்களும், அரசு துறைகளின் ரிப்போர்ட்களின் படி 36 வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நீக்கத்திற்கான காரணம்

நீக்கப்பட்ட வீடியோக்களில் 52 சதவீதம், எதற்கும் உபயோகமில்லாத குப்பைகள் (spam) அல்லது தவறான பாதைக்கு வழிகோலுவதாக உள்ளது. குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக 16 சதவீத வீடியோக்களும், ஆபாசம் தொடர்பாக 14 சதவீதம், மற்றும் வன்முறை தொடர்பாக 10 சதவீத வீடியோக்களும் நீக்கப்பட்டுள்ளன.

இந்த வீடியோக்கள் மட்டுமல்லாது, 2 மில்லியன் யூடியூப் சேனல்களும் நீக்கப்பட்டுள்ளன. இவற்றில் 89 சதவீதம் ஸ்பாம் அல்லது தவறான உள்ளடக்கங்களினால் நீக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமல்லாஐ 540 மில்லியன் கமெண்ட்களும் நீக்கப்பட்டுள்ளன. இவற்றில் 59 சதவீதம் ஸ்பாம் மற்றும் தவறான உள்ளடகங்களாலும், 25 சதவீதம் வன்முறையை தூண்டும் மற்றும் அநாகரீகமான கருத்துகள் போன்றவைகளினால் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Youtube videos removed youtube videos removed explained

Next Story
2020 CD3 மினி மூன் என்றால் என்ன?What is 2020 CD3, a mini-moon
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com