Pranav Mukul
Zomato’s IPO and what it means for India’s consumer Internet biz : ஆன்லைன் உணவக கண்டுபிடிப்பு மற்றும் உணவு விநியோக தளமான ஸொமாட்டோ புதன்கிழமை 8,250 கோடி ரூபாய் ஆரம்ப பொது சலுகைக்கு (ஐபிஓ) இந்திய செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு (செபி) உடன் ஒரு சிவப்பு-ஹெர்ரிங் ப்ரெஸ்பெக்டஸை தாக்கல் செய்தது, அதில் பல ஆண்டுகளில் ஒரு இந்திய நுகர்வோர் இணைய நிறுவனம் வழங்கிய முதல் பெரிய சலுகை இது என்று கூறப்பட்டிருந்தது.
ஆரம்ப பொது சலுகைக்கு, ஏன் கொரோனா காலக்கட்டத்தில் முன்மொழிகிறது ஸொமாட்டோ?
தொற்றுநோய் சேவைத் துறையை, குறிப்பாக விருந்தோம்பல் (Hospitality) பிரிவை கடுமையாக தாக்கியுள்ள நிலையில், ஸொமாட்டோ போன்ற நுகர்வோர் இணைய நிறுவனங்கள் கடந்த ஆண்டு ஆரம்ப ஊரடங்கிற்கு பிறகு வணிகத்தில் முன்னேற்றம் கண்டன.
நிறுவனத்தின் அறிவிப்பு படி மொத்த ஆர்டர் மதிப்பு ரூ. 2,684.91 கோடியில் இருந்து (ஜனவரி - மார்ச் 2020 ) ரூ. 1093.63 கோடியாக ( ஏப்ரல் - ஜூன் 2020) குறைந்துள்ளது. பிறகு அக்டோபர் முதல் டிசம்பர் கால கட்டங்களில் ரூ. 2981 கோடியாக உயர்ந்தது. இது கடந்த ஆண்டு இருந்த அதே காலாண்டு மதிப்பைக் காட்டிலும் கூடுதலானது.
மேலும், 2020-21 நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்கள் ஸொமாட்டோ வணிகத்தின் யூனிட் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணப்பட்டது. 2019-20 உடன் ஒப்பிடும்போது கமிஷன்கள் மற்றும் விநியோக கட்டணங்கள் அதிகரித்து, தள்ளுபடிகள் பெரிதும் வீழ்ச்சி அடைந்துள்ளது தெரிய வந்துள்ளது
ஸொமாட்டோவின் ஐபிஓ எப்போது அறிவிக்கப்படும்?
அதன் டி.ஆர்.எச்.பி செபியில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டதால், பத்திரங்கள் கண்காணிப்புக் குழு தாக்கல் செய்வதை மதிப்பாய்வு செய்வதற்கு இரண்டு வாரங்கள் வரை ஆகும். இருப்பினும், அந்த செயல்முறை முடிந்ததும், சலுகைகள் தொடர்பான அறிவிப்புகளை வழங்குவது சந்தை நிலைமைகளைப் பொறுத்தது.
இந்திய நுகர்வோர் இணைய நிறுவனங்கள் இதற்கு முன் பொதுவில் சென்றதா?
ஆம். நுகர்வோருக்கான இணையத்தில் இருக்கும் நிறைய நிறுவனங்கள் பொதுவில் சென்றுள்ளது. ஸோமாட்டோவின் முதலீட்டார்களில் ஒன்றான இன்வெஸ்ட்டர் எட்ஜும் இதில் அடங்கும். இது இந்த ஐபிஓ மூலம் ரூ .750 கோடிக்கு அதன் பங்குகளில் ஒரு பகுதியை ஒதுக்குகிறது.
இது தவிர, ஆன்லைன் பயண முகவர் நிறுவனங்களான MakeMyTrip.com மற்றும் yatra.com ஆகியவை அமெரிக்காவில் பட்டியலிடப்பட்டுள்ளன, அதே நேரத்தில் இ-காமர்ஸ் நிறுவனங்களான இன்பீபீம் மற்றும் இண்டியாமார்ட் மற்றும் சமீபத்தில் ஈஸி ட்ரிப் ப்ளானர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் பொதுவில் சென்றன.
புதிதாக தொழில் துவங்கும் நிறுவனங்களும் இம்முறையை இந்தியாவில் பின்பற்றுகின்றனவா?
அழகுசாதன நிறுவனமான நைகா, தளவாட நிறுவனம் டெல்லிவரி, மற்றும் ஆன்லைன் காப்பீட்டு ஒருங்கிணைப்பாளர் பாலிசிபஜார் உள்ளிட்ட நிறுவனங்கள் நிதி திரட்ட ஐபிஓவை பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil