Zomato (ஜொமேட்டோ) குருகிராமில் 10 நிமிடங்களில் உணவை டெலிவரி செய்ய சோதனை செய்யும் ஒரு முன்னோடி திட்டத்தை செயல்படுத்த உள்ளது. ‘Zomato இன்ஸ்டன்ட்; எனப்படும் அதன் விரைவான டெலிவரி அமைப்பு எப்படி வேலை செய்யும்? நிறுவனம் ஏன் விரைவான உணவு வர்த்தகத்தில் இறங்குகிறது? உணவை வழங்குவதற்கு 10 நிமிடங்கள் மிகக் குறைவான நேரமில்லையா?
விரைவு வணிக நிறுவனமான Blinkit (பிளின்கிட்) உடன் இணைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சில நாட்களுக்கு பிறகு, ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் ஸ்டார்ட்அப் நிறுவனமான ஜொமேட்டோ (Zomato) விரைவாக 10 நிமிடங்களில் உணவை டெலிவரி செய்யத் தொடங்க உள்ளது.
‘ஜொமேட்டோ (Zomato) இன்ஸ்டன்ட்’ என்று அழைக்கப்படும் ஒரு திட்டத்தை ஜொமேட்டோ நிறுவனம் குருகிராமில் வேகமாக உணவு விநியோகம் செய்வதற்கான ஒரு மாதிரி திட்டத்தை பரிசோதனை செய்யும் விதமாக ஒரு பரிசோதனை திட்டத்தை இயக்க உள்ளது.
ஜொமேட்டோவின் விரைவான டெலிவரி முறை எப்படி வேலை செய்யும்?
அதிக தேவை உள்ள வாடிக்கையாளர் சுற்றுப்புறங்களுக்கு அருகாமையில் அமைந்துள்ள ‘ஃபினிஷிங் ஸ்டேஷன்’ நெட்வொர்க்கில் இருந்து விரைவான டெலிவரிகளை இந்த நிறுவனம் செய்யும். தொடக்கத்தில், இந்த முக்கிய திட்டத்தின் ஒரு பகுதியாக குருகிராமில் இதுபோன்ற நான்கு நிலையங்கள் அமைக்கப்படும்.
ஜொமேட்டோவின் ஃபினிஷிங் ஸ்டேஷன்கள், ஜெப்டோ (Zepto) மற்றும் பிளின்கிட் (Blinkit) போன்ற விரைவான வர்த்தக நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் டார்க் ஸ்டோர் மாதிரியைப் போலவே தெரிகிறது. இது இந்த நிறுவனங்களுக்கு செயல்பாட்டுச் சங்கிலியின் மீது அதிக கட்டுப்பாட்டையும் செல்வாக்கையும் வழங்குகிறது.
தேவை முன்கணிப்பு மற்றும் ஹைப்பர்லோகல் விருப்பங்களின் அடிப்படையில், ஒவ்வொரு ஃபினிஷிங் ஸ்டேஷன்களிலும் 20-30 பொருட்கள் இருக்கும். அவை கொடுக்கப்பட்ட வட்டாரத்தில் அதிகம் விற்கப்படும். இந்த கிடங்குகளில் டிஷ்-லெவல் டிமாண்ட் முன்கணிப்பு அல்காரிதம்கள் மற்றும் இன்-ஸ்டேஷன் ரோபோட்டிக்ஸ் ஆகியவை பொருத்தப்பட்டிருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளருக்கான விலையை சுமார் 50 சதவீதம் குறைக்க இந்த மாடல் உதவும் என்றும், அதே நேரத்தில் அதன் உணவக கூட்டாளர்கள் மற்றும் டெலிவரி பணியாளர்களின் முழுமையான வருமானம் அப்படியே இருக்கும் என்றும் ஜொமேட்டோ கூறியுள்ளது.
ஜொமேட்டோ விரைவு உணவு வர்த்தகத்தில் ஏன் இறங்குகிறது?
நிறுவனத்தின் இணை நிறுவனர் தீபிந்தர் கோயல் கூறுகையில், ஜொமேட்டோவின் இன்ஸ்டன்ட் திட்டம் தொடங்குவதற்கான ஒரு காரணம், ஜொமேட்டோ வழங்கும் 30 நிமிட சராசரி டெலிவரி நேரம் மிகவும் மெதுவாக உள்ளது. மேலும், அது விரைவில் காணாமல் போகும். நாங்கள் இல்லை என்றால் அதைவிட விரைவாக வேறு யாராவது செய்வார்கள்” என்று கூறினார்.
மிக வேகமாக டெலிவரி செய்யும் நேரத்தின்படி உணவகங்களை வரிசைப்படுத்துவது ஜொமேட்டோ செயலியில் அதிகம் பயன்படுத்தப்படும் அம்சங்களில் ஒன்றாகும் என்றும் கோயல் கூறினார். "வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைகளுக்கு விரைவான பதில்களை அதிகளவில் கோருகின்றனர். அவர்கள் திட்டமிட விரும்பவில்லை, காத்திருக்கவும் விரும்பவில்லை.
அறிவிப்பு: Zomatoவில் விரைவில் 10 நிமிட உணவு டெலிவரி செய்யப்படும்.
உணவு தரம் - 10/10
டெலிவரி பார்ட்னர் பாதுகாப்பு - 10/10
விநியோக நேரம் - 10 நிமிடங்கள்
உணவை வழங்குவதற்கு 10 நிமிடங்கள் மிகக் குறைவான நேரமல்லவா?
சாலை நிலைமைகள், போக்குவரத்து, வானிலை போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு க்யூ-காமர்ஸ் நிறுவனங்கள் ஹைப்பர்லோகல் ஸ்டோர்களில் இருந்து செயல்படத் தொடங்கினாலும், இந்த அம்சங்கள் இந்தியாவில் இந்த 10 நிமிட டெலிவரி திட்டத்திற்கும் மிகப்பெரிய சவாலாக இருக்கலாம்.
விரைவான டெலிவரி வாக்குறுதியை நிறைவேற்ற, டெலிவரி பணியாளர்களை விரைவாக டெலிவரி செய்ய எந்த அழுத்தத்தையும் கொடுக்காது. தாமதமாக டெலிவரி செய்தால் அபராதம் விதிக்காது என்று Zomato கூறியுள்ளது. டெலிவரி செய்ய உறுதியளிக்கப்பட்ட நேரம் குறித்து டெலிவரி தொழிலாளர்களுக்கு தெரிவிக்கப்படாது என்றும் அது கூறியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.