FIFA World Cup 2018, England vs Belgium: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், இன்று நடக்கும் மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன. இரவு 07.30 மணிக்கு இப்போட்டி தொடங்கியது.
1986-ம் ஆண்டு உலகக் கோப்பையில் 4-வது இடத்தை பிடித்ததே பெல்ஜியம் அணியின் சிறந்த நிலையாக இருக்கிறது. அந்த உலகக் கோப்பையில் அரை இறுதியில் அர்ஜென்டினாவிடம் 0-2 என்ற கணக்கில் தோற்று இருந்தது. உலகக் கோப்பையை பொறுத்தவரை இதுவரை சாம்பியன் ஆனதில்லை. கடந்த 2014ம் உலகக் கோப்பையில் காலிறுதிக்கு முன்னேறி, 6வது அணியாக தொடரை நிறைவு செய்தது பெல்ஜியம். ஹசார்ட், டி ப்ருய்ன், லுகாகு, வெர்டோங்கன், கோர்டுவா ஆகிய வீரர்கள் பெல்ஜியம் அணியில் சிறப்பான ஃபார்மில் உள்ளனர். இது தவிர மரோனே ஃபெலைனி, ஆக்சல் விட்ஸல், வின்சென்ட் கொம்பேணி, நேசர் சட்லி போன்ற சிறந்த வீரர்களும் உள்ளனர்.
மேலும் படிக்க - ஃபிபா உலகக் கோப்பை 2018: அடக்கி வாசிக்கும் இங்கிலாந்து, வெற்றியுடன் நாடு திரும்பும் முனைப்பில் பெல்ஜியம்
கடந்த 64 வருட கால்பந்து வரலாற்றில், இங்கிலாந்து அணி 17 முறை உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் 1966ல் நடந்த உலகக் கோப்பைத் தொடரில் மட்டும் இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது. அந்த இறுதிப் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றது. அதைத் தவிர, 1990ல் நடந்த உலகக் கோப்பையில் நான்காம் இடம் பிடித்தது. ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் இங்கிலாந்து அணியின் மிகச் சிறந்த செயல்பாடுகள் இந்த தொடர்களில் மட்டும் தான் அரங்கேறியது.
இந்தநிலையில், தற்போது மூன்றாவது இடத்திற்கான போட்டியில் வெல்லும் முனைப்புடன் உள்ளது இங்கிலாந்து. இங்கிலாந்து கேப்டன் ஹேரிகேன் இதுவரை 6 கோல்கள் அடித்து தங்க ஷூ வெல்லும் வாய்ப்பில் முன்னணியில் இருக்கிறார்.
FIFA World Cup 2018, England vs Belgium: இங்கிலாந்து vs பெல்ஜியம் இடையிலான போட்டியின் லைவ் ஸ்கோர் இங்கே,
இரவு 09.21 - ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் கூடுதலாக 3 நிமிடம் வழங்கப்பட்டது. ஆனால், இதிலும் இங்கிலாந்து கோல் அடிக்காததால், பெல்ஜியம் 2-0 என அபார வெற்றிப் பெற்றுள்ளது.
இரவு 09.11 - ஆட்டத்தின் 82வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் ஹசார்ட், இங்கிலாந்து கோல் கீப்பரை ஏமாற்றி, கோல் அடிக்க 2-0 என முன்னிலை பெற்றது பெல்ஜியம்.
இரவு 09.01 - 69வது நிமிடத்தில் கிடைத்த மிக எளிதான கோல் வாய்ப்பை இங்கிலாந்தின் டையர் வீணடித்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2018/07/S664-300x217.jpg)
இரவு 08.50 - பெல்ஜியம் அணியின் நட்சத்திர வீரர் லுகாகுவிற்கு பதில் மாற்று வீரர் களம் இறக்கப்பட்டார்.
இரவு 08.45 - பெல்ஜியம் வீரர் ஹசார்ட் இரண்டாவது முறையாக இங்கிலாந்து எல்லைக்குள் சென்று கோல் அடிக்க முடியாமல் ஏமாற்றம் தந்தார்.
இரவு 08.33 - இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது.
இரவு 08.17 - இரு நிமிடம் கூடுதலாக வழங்கப்பட்ட முதல் பாதி முடிவடைந்தது. இதில், பெல்ஜியம் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இரவு 08.05 - பெல்ஜியம் அணிக்கு முதல் கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், கோல் கிடைக்கவில்லை.
இரவு 07.50 - பெல்ஜியம் அணி தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இரு அணிகளும் சில கோல் வாய்ப்புகளையும் தவற விட்டுள்ளன.
இரவு 07.35 - பெல்ஜியம் வீரர் தாமஸ் மியூனர் முதல் கோல் அடித்தார். இதனால், 1-0 என பெல்ஜியம் முன்னிலை பெற்றுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2018/07/s663-300x217.jpg)
இரவு 07.30 - மூன்றாம் இடத்துக்கான ஆட்டம் தொடங்கியது.
இரவு 07.25 - இரு அணிகளின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
இரவு 07.10 - இரு அணி வீரர்களின் பட்டியல்