Advertisment

FIFA 2018: ஹிட்லர் ஆட்சிக்கு பிறகு ஜெர்மனி அணிக்கு நேரிட்ட சோகம்!

1938ம் ஆண்டுக்கு பிறகு, முதல் சுற்றோடு ஜெர்மனி வெளியேறுவது இதுவே முதன் முறையாகும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
FIFA 2018: ஹிட்லர் ஆட்சிக்கு பிறகு ஜெர்மனி அணிக்கு நேரிட்ட சோகம்!

FIFA 2018: Germany out of world cup

ஆசைத் தம்பி

Advertisment

FIFA World Cup 2018: ஃபிபா உலகக் கோப்பையில் நேற்று (ஜூன் 27) நடைபெற்ற போட்டிகள் குறித்த அலசல் இங்கே,

நேற்று இரவு 07.30 அணிக்கு நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி அணி, தென் கொரியா அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்துடன் ஜெர்மனி அணி களமிறங்கியது.

போட்டி தொடங்கியதில் இருந்தே ஜெர்மனி அணி கோல் போட தொடர்ந்து முயற்சித்தது. ஆனால் அனைத்து முயற்சிகளையும் தென் கொரிய கோல் கீப்பர் சோ ஹியூன் வூ அபாரமாக முறியடித்தார். இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியும் கோல் அடிக்கவில்லை.

தொடர்ந்து இரண்டாவது பாதிநேர ஆட்டமும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதிலும் இரு அணியும் கோல் அடிக்க முடியாமல் தவித்தது. ஜெர்மனியின் பல கோல் வாய்ப்புகள் தடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் கொரியா அணியின் கிம் யங்வான் கோல் அடித்து அணிக்கு ஜெர்மனிக்கு அதிர்ச்சி அளித்தார்.

அதன்பின் ஜெர்மனி அணி கோல்கீப்பரையே உள்ளே இறக்கி விளையாடியது. இதனால், கோல் கம்பத்தின் அருகே யாரும் இல்லை. இதை பயன்படுத்திக் கொண்ட தென் கொரியா, மீண்டும் ஒரு கோல் அடித்தது. இதனால் தென் கொரியா 2-0 என முன்னிலை பெற்றது. அதன்பின் ஜெர்மனி அணி மேற்கொண்டு கோல் அடிக்காததால் கொரியா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இதனால் 'F' பிரிவில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட உலக சாம்பியன் ஜெர்மனி, தொடரைவிட்டு வெளியேறியது. மூன்று போட்டிகளில் விளையாடி, இரண்டில் தோற்று 3 புள்ளிகளுடன் முதல் சுற்றோடு வெளியேறுகிறது ஜெர்மனி அணி.

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில், 1938ம் ஆண்டுக்கு பிறகு, முதல் சுற்றோடு ஜெர்மனி வெளியேறுவது இதுவே முதன் முறையாகும். அப்போது ஜெர்மனியை ஹிட்லர் ஆட்சி செய்துகொண்டிருந்தார். அந்த உலகக் கோப்பையில் 15 அணிகள் மற்றுமே பங்கேற்று இருந்தது. பலம் வாய்ந்த ஜெர்மனி அணி, ஹிட்லர் ஆட்சிக்கு பிறகு, இப்போது தான் முதல் சுற்றோடு வெளியேறி இருக்கிறது. இதனால், உலக சாம்பியன் அணியின் ரசிகர்கள் உச்சக்கட்ட சோகத்தில் உள்ளனர்.

தென் கொரிய அணி ஆறுதல் வெற்றியுடன் F பிரிவில் இருந்து வெளியேறியுள்ளது.

இரவு 07.30 மணிக்கு நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில், மெக்சிகோ அணி, ஸ்வீடனை எதிர்கொண்டது. மெக்சிகோ ஏற்கனவே நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியதால், வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்துடன் ஸ்வீடன் அணி களமிறங்கியது.

போட்டி தொடங்கியதில் இருந்தே இரு அணி வீரர்களும் கோல் போட தொடர்ந்து முயற்சித்தனர். ஆட்டம் தொடங்கியதுமே மெக்சிகோ வீரர் ஜீசஸ் கல்லார்டோ FOUL-க்கு உள்ளானார். ஆட்டம் தொடங்கிய 13-வது வினாடியிலே அவர் செய்த தவறுக்கு நடுவர் மஞ்சள் அட்டை காண்பித்தார்.

இதனால் கால்பந்து உலகக்கோப்பை வரலாற்றிலேயே மிகவும் குறைவான நேரத்திற்குள் மஞ்சள் அட்டை பெற்ற வீரர் என்ற மோசமான வரலாற்றை பதிவு செய்தார். முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியும் கோல் அடிக்கவில்லை.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டம் ஸ்வீடன் அணிக்கு சாதகமாக அமைந்தது. 50-வது நிமிடத்தில் ஸ்வீடன் அணியின் அகஸ்டின்சன் கோல் அடித்தார். இதனால் ஸ்வீடன் அணி 1-0 என முன்னிலை பெற்றது.

அதைத்தொடர்ந்து 62-வது நிமிடத்தில் ஸ்வீடன் அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதில் அந்த அணியின் கிரான்குவிஸ்ட் கோல் அடித்தார். இதனால் ஸ்வீடன் அணி 2-0 என முன்னிலை பெற்றது.

அதன்பின் 74-வது நிமிடத்தில் ஸ்வீடன் அணிக்கு ஒரு போனஸ் கோல் கிடைத்தது. மெக்சிகோ அணி வீரர் அல்வரேஸ் சேம் சைட் கோல் அடித்தார். அதன்பிறகு, மெக்சிகோ இறுதிவரை கோல் அடிக்காததால் ஸ்வீடன்  3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதனால் ‘F’ பிரிவு புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறிய ஸ்வீடன் அணி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது. மெக்சிகோ ஏற்கனவே நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி இருந்தது.

இரவு 11.30 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில், பிரேசில் மற்றும் செர்பியா அணிகள் பலப்பரீட்சை செய்தன. இந்தப் போட்டியில் வெற்றிப் பெறும் அணியே அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்பதால், பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே இப்போட்டி தொடங்கியது.

முதல் 30 நிமிடங்களில் இரு அணிகளும் ஆக்ரோஷமாக விளையாடின. முதல் பாதிநேர ஆட்டத்தின் 36-வது நிமிடத்தில் பிரேசில் அணியின் பாலின்ஹோ அற்புதமான கோல் ஒன்றை அடித்தார். இதனால் பிரேசில் அணி 1-0 என முன்னிலை பெற்றது.

செர்பியா அணியினர் முதல் பாதிநேர ஆட்டத்தில் கோல் அடிக்கவில்லை. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 68-வது நிமிடத்தில் பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் தியாகோ சில்வா கோல் அடித்தார். இதனால் பிரேசில் அணி 2-0 என முன்னிலை பெற்றது.

செர்பியா இறுதிவரை கோல் அடிக்காததால், பிரேசில் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று E பிரிவில் 7 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியது. இதனால், நாக்-அவுட் சுற்றுக்கு பிரேசில் முன்னேறியது. செர்பியா அணி 3 புள்ளிகள் மட்டுமே பெற்று முதல் சுற்றோடு வெளியேறியது.

நடப்பு உலக சாம்பியன் ஜெர்மனி உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய நிலையில், முன்னாள் உலக சாம்பியன் பிரேசில் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இரவு 11.30 நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில், ஈ’ பிரிவில்  இடம்பெற்றுள்ள சுவிட்சர்லாந்து, கோஸ்டா ரிகா அணிகள் பலப்பரீட்சை செய்தன.

கோஸ்டா ரிகா அணி ஏற்கனவே தொடரில் இருந்து வெளியேறி இருக்கும் நிலையில், சுவிட்சர்லாந்து அணிக்கு அடுத்த சுற்றுக்கு தகுதிப் பெற இப்போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இப்போட்டி தொடங்கியது முதல் இரு அணியும் தொடர்ந்து கோல் போட முயற்சித்தனர். முதல் பாதிநேர ஆட்டத்தின் 31-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணியின் ஜிமைலி முதல் கோல் அடித்தார். இதனால் சுவிட்சர்லாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றது. கோஸ்டா ரிகா அணியினர் முதல் பாதிநேர ஆட்டத்தில் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தில், சுவிட்சர்லாந்து 1-0 என முன்னிலை வகித்தது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 56-வது நிமிடத்தில் கோஸ்டா ரிகா வீரர் கெண்டால் வாஸ்டன் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமனானது. அதன்பின் பரபரப்பாக சென்ற ஆட்டத்தில், 88-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து வீரர் ஜோசிப் ட்ரெமிக் கோல் அடித்தார். இதனால் சுவிட்சர்லாந்து அணி 2-1 என முன்னிலை பெற்றது. அதைத்தொடர்ந்து கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில், சுவிட்சர்லாந்து அணியின் யான் சோமர் எதிரணிக்கு ஒரு சேம் சைட் கோல் அடிக்க, 2-2 என ஆட்டம் சமமானது.

இறுதியில் இப்போட்டி டிராவில் முடிந்தது. இரு அணிக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. வெற்றிப் பெறவில்லை என்றாலும், டிரா செய்ததால் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்த சுவிட்சர்லாந்து அணி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

Fifa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment