உலகக் கோப்பை கால்பந்து தொடரில், இன்று நடைபெறவுள்ள இரண்டு நாக் அவுட் போட்டிகளில், ரஷ்யா – ஸ்பெயின் அணிகளும், குரோஷியா – டென்மார்க் அணிகளும் மோதுகின்றன.
Ahem…. As we were saying…. ????
Who’s ready to do it all again?
Today’s fixtures: #ESPRUS 17:00#CRODEN 21:00#WorldCup pic.twitter.com/P1iQKPnhS1
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) July 1, 2018
இரவு 07.30 மணிக்கு தொடங்கும் முதல் ஆட்டத்தில் ஸ்பெயின் அணி, போட்டியை நடத்தும் ரஷ்யாவை எதிர்கொள்கிறது. 2010-ம் ஆண்டு சாம்பியனான ஸ்பெயின் அணி, லீக் சுற்றில் போர்ச்சுகல்(3-3), மொராக்கோவுடன் (2-2) டிராவும், ஈரானுடன் (1-0) வெற்றியும் கண்டது.
ஸ்பெயின் அணியில் இதுவரை 3 கோல்கள் அடித்துள்ள டியாகோ கோஸ்டா மற்றும் இயாகோ ஆஸ்பாஸ், இனியஸ்டா, செர்ஜியோ ரமோஸ், இஸ்கோ உள்ளிட்டோர் நட்சத்திர வீரர்களாக விளங்குகின்றனர். கடைசியாக ஆடிய 23 சர்வதேச போட்டிகளில் (15 வெற்றி, 8 டிரா) தோல்வியே காணாத ஸ்பெயின் அணி, இன்றைய போட்டியிலும் ரஷ்யாவை வீழ்த்துவதில் முனைப்போடு உள்ளது.
ரஷ்ய அணியை பொறுத்தவரை, முதல் ஆட்டத்தில் 5-0 என்ற கோல் கணக்கில் சவுதிஅரேபியாவையும், 3-1 என்ற கோல் கணக்கில் எகிப்தையும் துவம்சம் செய்தது. தங்கள் அணி இந்த அளவுக்கு விளையாடும் என்று எதிர்பார்க்கவில்லை என்று அந்த நாட்டு அதிபர் புதின் வியந்து பாராட்டினார். ஆனால் கடைசி லீக்கில் 0-3 என்ற கோல் கணக்கில் உருகுவேயிடம் உதை வாங்கியது. நேற்றைய போட்டியில், போர்ச்சுகல் அணியை 2-1 என வீழ்த்தி உலகக் கோப்பையை விட்டு வெளியேற்றியது உருகுவே.
முதல்முறையாக நாக்-அவுட் சுற்றுக்கு வந்துள்ள ரஷ்ய அணியில், டெனிஸ் செர்ஷிவ், ஆர்டெம் டிஸ்யூபா, அலெக்சாண்டர் கோலோவின் ஆகிய வீரர்கள் தான் துருப்புச் சீட்டுகளாக உள்ளனர். ஆனால், பலம் வாய்ந்த ஸ்பெயினை எதிர்த்து வெற்றிப் பெறுவது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. இருப்பினும், குறிப்பிட்ட நாளில் சிறப்பாக விளையாடும் அணி வெற்றிப் பெறும் என்பதில் சந்தேகமில்லை.
இரவு 11.30 மணிக்கு தொடங்கும் இரண்டாவது ஆட்டத்தில் குரோஷியா – டென்மார்க் அணிகள் மோதுகின்றன.
லீக் சுற்றில் நைஜீரியா (2-0), அர்ஜென்டினா (3-0), ஐஸ்லாந்து (2-1) ஆகிய அணிகளுக்கு எதிரான அனைத்துப் போட்டியிலும் வென்ற குரோஷியா அணி, டென்மார்க் அணியை எதிர்கொள்கிறது.
சரியான கலவையில் அமைந்துள்ள குரோஷிய அணியில் கேப்டன் லுகா மோட்ரிச், இவான் ராகிடிச், இவான் பெரிசிச் ஆகியோர் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். 1998-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக ‘நாக்-அவுட்’ சுற்றை எட்டியுள்ள குரோஷிய அணி இந்த ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது.
டென்மார்க் அணி, தடுப்பாட்டத்தில் சிறந்து விளங்கக்கூடிய ஒரு அணியாகும். லீக் சுற்றில் பெருவை (1-0) தோற்கடித்து, ஆஸ்திரேலியா (1-1), பிரான்சுடன்(0-0) டிரா செய்தது. இந்த உலக கோப்பையில் 2-வது சுற்றுக்கு முன்னேறிய அணிகளில் குறைந்த கோல்கள் (2 கோல்) அடித்த அணி டென்மார்க் தான். கடைசியாக ஆடிய 18 சர்வதேச போட்டிகளில் தோல்வி பக்கமே செல்லாத அணியாக டென்மார்க் விளங்குகிறது.
இதனால், இப்போட்டி ரசிகர்களுக்கு மெகா விருந்து படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.