FIFA World Cup 2018 Day 2 Live Updates: 21வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா, ரஷ்யாவில் நேற்று தொடங்கியது. இதில், தொடக்க போட்டியில் ரஷ்ய அணி, 5-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபிய அணியை பந்தாடியது.
இந்நிலையில், இரண்டாம் நாளான இன்று மொத்தம் மூன்று போட்டிகள் நடைபெறுகின்றன. இதில், முதலில் மாலை 5.30 மணிக்கு எகிப்தும், உருகுவே அணிகளும் மோதுகின்றன. இரவு 8.30 மணிக்கு நடைபெறும் இரண்டாவது போட்டியில், மொரோக்கோ vs ஈரான் அணிகள் மோதுகின்றன. இரவு 11.30 மணிக்கு தொடங்கும் மூன்றாவது போட்டியில் பலம் வாய்ந்த போர்ச்சுகல் vs ஸ்பெயின் அணிகளும் மோதுகின்றன.
எகிப்து கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் முகமது சாலாவிற்கு, கடந்த 27ம் தேதி நடைபெற்ற ரியல் மாட்ரிட் அணிக்கெதிரான யூரோ சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் காயம் ஏற்பட்டது. இந்த காயத்திற்காக மூன்று வாரங்கள் சாலா ஓய்வு எடுக்க வேண்டியிருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர். இந்நிலையில், இன்றைய போட்டியில் சாலா விளையாடுவார் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், அவரது பெயர் ஆடும் லெவனில் இடம் பெறவில்லை.
எகிப்து vs உருகுவே அணிகளுக்கு இடையேயான போட்டியின் Updates இங்கே காணலாம்.
இரவு 07.30 - போட்டிக்கான இறுதி விசில் ஊதப்பட்டது. கிமெனஸ்ஸின் அற்புதமான கோலால் உருகுவே அணி 1-0 என வெற்றிப் பெற்றது.
இரவு 07.20 - ஆட்டம் முடிய இன்னும் சில நிமிடங்களே இருந்த நேரத்தில், உருகுவே அணியின் கிமெனஸ் அற்புதமான, அழுத்தமான, வலிமையான கோல் ஒன்றை எகிறி அடித்தார். ஒருவழியாக, உருகுவே 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இரவு 07.15 - உருகுவே வீரர் எடின்சன் கேவன் கோல் கம்பத்தை நோக்கி அற்புதமான ஷார்ட் ஒன்றை அடித்தார். ஆனால், அதை மக அற்புதமாக எகிப்து கோல் கீப்பர் எல்ஷேனவி தடுத்தார். இன்னமும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.
மாலை 06.58 - உருகுவே அணியில் நான்டெஸ் மற்றும் டி அரெஸ்கேட்டா ஆகிய வீரர்கள் காயம் அடைந்ததால், அவர்களுக்கு பதிலாக சான்ஜெஸ் மற்றும் ரோட்ரிக்ஸ் மாற்று வீரர்களாக களம் இறக்கப்பட்டுள்ளனர்.
மாலை 06.47 - எகிப்து வீரர் ஹேம்ட் காயம் அடைந்ததால், அவருக்கு பதில் சாம் மோர்சி மாற்று வீரராக களம் இறங்கியுள்ளார்.
மாலை 06.32 - இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது.
மாலை 06.25 - முதல் பாதி முடிவடைந்தது. உருகுவே எல்லையில் மிகச் சிறப்பாக நுழைந்த எகிப்து, கோல் அடிக்கும் அருமையான வாய்ப்பை தவற விட்டது. இருப்பினும், உருகுவே தடுப்பை மீறி எகிப்து ஆடிய விதம் பாராட்டைப் பெற்றது. முதல் பாதியின் முடிவில் 0-0 என இரு அணிகளும் சம நிலையில் உள்ளன.
மாலை 06.15 - முதல் பாதி முடிவடையும் தருவாயிலும் இரு அணிகளும், வீரியம் இல்லாத ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றன. வாய்ப்பு கிடைத்தும், இரு அணிகளும் கோல் அடிப்பதை வீணடித்துள்ளன.
மாலை 06.00 - கிடைத்த ஒரு அற்புதமான ஃப்ரீ ஹிட் வாய்ப்பை உருகுவே அணியின் லூயிஸ் சாரஸ் வீணடித்தார்.
மாலை 05.46 - உருகுவே அணியின் எடின்சன் கவானி, எகிப்து தடுப்புகளை மீறி, கோல் அடிக்க முயன்றார். ஆனால், ஷாட்டின் வேகம் குறைவாக இருந்ததால், பெரிய ரிஸ்க் இன்றி, எகிப்து கோல் கீப்பர் எல்ஷேனவி அதை தடுத்துவிட்டார். டார்கெட் ஜஸ்ட் மிஸ்...
மாலை 05.31 - எகிப்து vs உருகுவே இடையிலான ஆட்டம் தொடங்கியது.
மாலை 05.27 - இருநாடுகளின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.