scorecardresearch

FIFA World cup 2018: ரொனால்டோ கடைசி நிமிட ஹாட்ரிக் கோல்! ஸ்பெயினுடன் டிரா செய்த போர்ச்சுகல்

FIFA World cup 2018: ஆட்டம் முடிய 2 நிமிடமே இருக்கும் தருவாயில், கிடைத்த ஃபிரீ-கிக் வாய்ப்பை ரொனால்டோ சரியாக பயன்படுத்தி கொண்டு கோல் அடித்து அசத்தினார்.

FIFA World Cup 2018: Cristiano Ronaldo hat-trick helps Portugal
FIFA World Cup 2018: Cristiano Ronaldo hat-trick helps Portugal

ஆசைத்தம்பி

FIFA World cup 2018: ரஷ்யாவில் நேற்று (ஜூன் 15) நடந்த மூன்றாவது மற்றும் இறுதி லீக் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ள போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதின.

ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் தொடங்கிய இந்த ஆட்டத்தில், 3-வது நிமிடத்திலேயே போர்ச்சுகல் அணிக்கு ஒரு அற்புதமான ஃபெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதனை போர்ச்சுகல் கேப்டனும், நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ கோலாக மாற்ற, மூன்றாவது நிமிடத்திலேயே அந்த அணி 1-0 என முன்னிலைப் பெற்றது.

அதைத் தொடர்ந்து, ஆட்டத்தின் 24-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் நட்சத்திர வீரர் தியாகோ கோஸ்டா கோல் அடிக்க, ஆட்டம் 1-1 என சமனானது. அதன்பின் 44-வது நிமிடத்தில் ரொனால்டோ மீண்டும் ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதிநேர ஆட்ட முடிவில் போர்ச்சுகல் அணி 2-1 என முன்னிலை பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற 2-வது பாதிநேர ஆட்டத்தின் 55-வது நிமிடத்தில் ஸ்பெயினின் தியாகோ கோஸ்டா மீண்டும் இரண்டாவது கோல் அடித்தார். இரு அணியின் நட்சத்திர வீரர்களின் அபார ஆட்டத்தால், 2-2 என மீண்டும் சமமானது பிறகு, 58-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் நாச்சோ ஒரு கோல் அடிக்க, ஸ்பெயின் அணி 3-2 என முன்னிலை பெற்றது.

ரசிகர்களுக்கு டென்ஷன் எகிறிக் கொண்டிருக்க, ஆட்டம் முடிய 2 நிமிடமே இருக்கும் தருவாயில், கிடைத்த ஃபிரீ-கிக் வாய்ப்பை ரொனால்டோ சரியாக பயன்படுத்தி கொண்டு கோல் அடித்து அசத்தினார். இது அவரது ஹாட்ரிக் கோல் ஆகும். இதனால் ஆட்டம் மீண்டும் 3-3 என சமனானது. அதைத்தொடர்ந்து வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் இரு அணியும் மேலும் கோல் அடிக்காததால், பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டி 3-3 என சமனில் முடிந்தது. இதனால் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. ஒரே போட்டியில் மூன்று கோல்கள் அடித்ததன் மூலம், 2018 உலகக் கோப்பையில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் ரொனால்டோ முதலிடம் பிடித்துள்ளார்.

இதற்கு முன்பு நேற்று நடைபெற்ற மற்ற இரு லீக் போட்டியில், உருகுவே 1-0 என எகிப்து அணியையும், ஈரான் 1-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோ அணியையும் வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Stay updated with the latest news headlines and all the latest Fifa news download Indian Express Tamil App.

Web Title: Fifa world cup 2018 cristiano ronaldo hat trick helps portugal hold spain in a six goal thriller