Advertisment

ஃபிபா உலகக் கோப்பை 2018, இன்றைய போட்டிகள்: ரொனால்டோவிற்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

உலகக் கோப்பையில் இன்று நடைபெறவுள்ள போட்டிகள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஃபிபா உலகக் கோப்பை 2018, இன்றைய போட்டிகள்: ரொனால்டோவிற்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

FIFA World Cup 2018: ஃபிபா உலகக் கோப்பையில் இன்று(ஜூன் 25) நடைபெறவுள்ள போட்டிகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

Advertisment

இரவு 07.30 மணிக்கு இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது.

உருகுவே vs ரஷ்யா

'A' பிரிவில் இடம்பெற்றுள்ள ரஷ்யா மற்றும் உருகுவே அணிகள் இதுவரை இரண்டு போட்டிகளில் ஆடி, இரண்டிலும் வெற்றிப் பெற்றுள்ளது.

சவுதி அரேபியா vs எகிப்து

அதேசமயம், 'A' பிரிவில் விளையாடியுள்ள இரண்டு போட்டியிலும் தோல்வி அடைந்திருக்கும் சவுதி அரேபியா மற்றும் எகிப்து அணிகளும் இரவு 07.30 மணிக்கு மோதுகின்றன.

இரவு 11.30 மணிக்கு இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகிறது,

இதில் 'B' பிரிவில் இடம்பெற்றுள்ள ஈரான் மற்றும் போர்ச்சுகல் அணிகள் மோதுகின்றன. இதில், இரண்டு போட்டிகளில் ஆடியுள்ள ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி 1 வெற்றி, 1டிரா பெற்றுள்ளது. அதேசமயம் 2 போட்டிகளில் ஆடியுள்ள ஈரான், ஒரு வெற்றி, ஒரு தோல்வி பெற்றுள்ளது. இதனால், இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானதாகும்.

11.30 மணிக்கு தொடங்கும் மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் மற்றும் மொரோக்கோ அணிகள் மோதுகின்றன. இரண்டு போட்டிகளில் ஆடியுள்ள ஸ்பெயின் ஒரு வெற்றி, ஒரு டிரா பெற்றுள்ளது. மொரோக்கோ தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோற்றுள்ளது.

Christiano Ronaldo Fifa 2018 Portugal Vs Iran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment