ஆசைத் தம்பி
FIFA World Cup 2018: ஃபிபா உலகக் கோப்பையில் நேற்று (ஜூன் 24) நடைபெற்ற போட்டிகள் குறித்த அலசல் இங்கே,
நேற்று மாலை 05.30 மணிக்கு நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ‘G’ பிரிவில் இடம்பிடித்துள்ள இங்கிலாந்து மற்றும் பனாமை அணிகள் மோதின.
பலம் வாய்ந்த இங்கிலாந்து தொடக்கம் முதலே கோல்களை வரிசை கட்டியது. ஆட்டத்தின் 8-வது நிமிடத்தில் ஸ்டோன்ஸ் முதல் கோலை பதிவு செய்தார். 22-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி கேப்டன் ஹேரி கேன் கோல் அடித்தார். 36-வது நிமிடத்தில் லிங்கார்டு கோல் அடித்தார். 40-வது நிமிடத்தில் ஸ்டோன்ஸ் மேலும் ஒரு கோல் அடித்தார். 45-வது நிமிடத்தில் ஹேரி கேன் மீண்டும் கோல் அடித்தார். இதனால் இங்கிலாந்து முதல் பாதி நேரத்தில் 5-0 என முன்னிலைப் பெற்றது.
24, 2018????????????@HKane helped set fire to the #ENG record books today.
Becoming @England's third #WorldCup hat-trick scorer, alongside @GaryLineker & @TheGeoffHurst, being just one of the milestones.
READ MORE ????https://t.co/AffBO7alHD pic.twitter.com/LIzsOZq94n
— FIFA World Cup ???? (@FIFAWorldCup)
????????????@HKane helped set fire to the #ENG record books today.
— FIFA World Cup (@FIFAWorldCup) June 24, 2018
Becoming @England's third #WorldCup hat-trick scorer, alongside @GaryLineker & @TheGeoffHurst, being just one of the milestones.
READ MORE ????https://t.co/AffBO7alHD pic.twitter.com/LIzsOZq94n
2-வது பாதி நேரத்திலும் இங்கிலாந்து கையே ஓங்கியது. 62-வது நிமிடத்தில் ஹேரி கேன் மேலும் ஒரு கோல் அடித்தார். ஹேரி கேனின் ஹாட்ரிக் கோலால் 62-வது நிமிடத்தில் இங்கிலாந்து 6-0 என முன்னிலைப் பெற்றது. 62-வது நிமிடத்தில் கோல் அடித்ததும் ஹேரி கேன், லிங்கார்டு உள்பட முன்னணி வீரர்கள் வெளியேறினார்கள்.
அதன்பின், 78-வது நிமிடத்தில் பனாமா அணி தனது முதல் கோலை பதிவு செய்தது. ஃப்ரீ கிக் பயன்படுத்தி அடித்த பந்தை, கோல் எல்லைக்குள் பலோய் காலால் உதைத்து கோலாக்கினார்.
அதன்பின் இரு அணிகளும் கோல் அடிக்காததால் இங்கிலாந்து 6-1 என வெற்றி பெற்றது. முதல் ஆட்டத்தில் 2-0 என வெற்றி பெற்றிருந்ததால், இரண்டு வெற்றியுடன் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது இங்கிலாந்து.
உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியை ‘An inexperienced squad’ என்றே வல்லுனர்கள் அழைக்கின்றனர். கேப்டன் உட்பட பெரும்பாலான வீரர்கள் அதிக அனுபவமில்லாத வீரர்களாக உள்ளனர். இருப்பினும், ஏற்கனவே உலக கோப்பை தகுதி சுற்றில் அணியை வழிநடத்திய அனுபவம், 24 வயதான கேப்டன் ஹேரிக்கு உள்ளது. இளம் வீரர்கள் கொண்ட அணி என்றாலும், முதல் இரு போட்டிகளிலும் மிகச் சிறப்பாக விளையாடியுள்ளது இங்கிலாந்து.
கேப்டனின் அணுகுமுறை தான் வியப்பை ஏற்படுத்துகிறது. 'இந்த உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணி தைரியமாகவும், ஆக்ரோஷமாகவும் களமிறங்க வேண்டும். நாங்கள் தொடக்கம் முதலேயே இந்தத் தொடரில் ஆதிக்கம் செலுத்த விரும்புகிறோம். கடினமான தருணங்கள் ஏற்படலாம். ஏற்றம் இறக்கம் உண்டாகலாம். பெரிய தொடர்களுக்கு செல்லும் போது நாம் தாக்குதலான கால்பந்தாட்டத்தை ஆட வேண்டும். முதலில் முதல் போட்டியை வெல்ல வேண்டும். அடுத்ததாக இரண்டாவது போட்டியை டார்கெட் செய்ய வேண்டும். அப்படியே படிப்படியே சென்று கோப்பையை தட்ட வேண்டும்' என்று முன்னதாக ஒரு பேட்டியில் அவர் கூறியிருந்தார்.
அதன்படி, முதல் சுற்றை கம்பீரமாக கடந்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது இங்கிலாந்து.
இரவு 08.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில், 'H' பிரிவில் இடம் பிடித்துள்ள ஜப்பான் மற்றும் செனகல் அணிகள் மோதின.
ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் செனகல் அணியின் சாடியோ மானே ஒரு கோல் அடித்தார். இதற்கு பதிலடியாக ஆட்டத்தின் 34-வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் டகாஷி இனுல் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் 1-1 என சமனிலை வகித்தன.
24, 2018Four goals shared between @jfa_samuraiblue and @FootballSenegal in Ekaterinburg.
Good game, that.#JPNSEN pic.twitter.com/EJDfRXUjS2
— FIFA World Cup ???? (@FIFAWorldCup)
Four goals shared between @jfa_samuraiblue and @FootballSenegal in Ekaterinburg.
— FIFA World Cup (@FIFAWorldCup) June 24, 2018
Good game, that.#JPNSEN pic.twitter.com/EJDfRXUjS2
இதையடுத்து, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 71-வது நிமிடத்தில் செனகல் அணியின் மூசா வேக் ஒரு கோல் அடிக்க 2-1 என செனகல் மீண்டும் முன்னிலை பெற்றது. ஆனால், ஜப்பான் அணியின் கைசுகே ஹோண்டா 78-வது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க ஆட்டம் சமனிலை பெற்றது. அதன்பின், ஆட்டம் முடியும் வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.
கூடுதலாக கிடைத்த நிமிடங்களிலும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதனால், அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பில் ஜப்பான் தொடர்ந்து நீடிக்கிறது.
ஆசிய கண்டத்தில் இருந்து பங்கேற்று இருக்கும் அணிகளில், நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பில் நீடிக்கின்ற ஒரே அணி ஜப்பான் தான்.
இரவு 11.30 மணிக்கு நடந்த போட்டியில் H பிரிவில் இடம் பிடித்துள்ள போலந்து மற்றும் கொலம்பியா அணிகள் மோதின.
ஏற்கனவே, ஜப்பான் அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்திருந்த கொலம்பியா அணி, நேற்றைய போட்டியில் கட்டாயம் வெல்ல வேண்டிய நெருக்கடியில் இருந்தது.
ஆட்டத்தின் 40-வது நிமிடத்தில் கொலம்பியா அணியின் யெரி மினா ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் கொலம்பியா அணி 1-0 என முன்னிலை வகித்தது.
இதையடுத்து, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் கொலம்பியா அணியின் சார்பில் ராடமல் பால்கோ 70-வது நிமிடத்திலும், ஜுவான் குவாட்ராடோ 75-வது நிமிடத்திலும் ஒரு கோல் அடித்தனர். இதனால் கொலம்பியா அணி 3-0 என முன்னிலை பெற்றது.
கொலம்பியா அணியினரின் அதிரடி ஆட்டத்தின் முன்னால் போலந்து வீரர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. கூடுதலாக கிடைத்த நிமிடங்களிலும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இறுதியில், போலந்து அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கொலம்பியா அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் கொலம்பியா அணி 3 புள்ளிகள் பெற்றது.
இந்த வெற்றியின் மூலம், நிம்மதி பெருமூச்சு விட்டுள்ள கொலம்பிய அணி, தொடர்ந்து உலகக் கோப்பை ரேஸில் நீடிக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் வெல்வதன் மூலம், ஜப்பான் உடனான தோல்வியை மறந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.