FIFA World Cup 2018: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று மொத்தம் மூன்று போட்டிகள் நடைபெற உள்ளது.
ஜூன் 19, 2018 - செவ்வாய்
கொலம்பியா vs ஜப்பான் - 05.30 p.m.
போலந்து vs செனகல் - 08.30 p.m.
ரஷ்யா vs எகிப்து - 11.30 p.m.
மேலும் படிக்க: நேற்றைய உலகக் கோப்பை போட்டிகளின் முடிவுகள்: குயிக் ரீகேப்
இன்று மாலை 05.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில், கொலம்பியா மற்றும் ஜப்பான் அணிகள் மோதுகின்றன.
தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள கொலம்பியா 6-வது முறையாக உலக கோப்பையில் விளையாட இருக்கிறது. போலந்து, செனகல் அணிகள் கொலம்பியாவுக்கு சவாலாக விளங்கும். செனகலுடன் மோதும் ஆட்டம் அந்த அணியின் நாக் அவுட் சுற்றை நிர்ணயம் செய்யலாம். அந்த அணி சிறப்பான நிலையில் இருப்பதால் ‘நாக்அவுட்’ சுற்றுக்கு முன்னேறுவதில் சிரமம் இருக்காது என்றே கருதப்படுகிறது.
ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் அந்த அணியின் நட்சத்திர வீரராக உள்ளார். கடந்த உலக கோப்பையில் அவரது ஆட்டத்தால் தான் கால் இறுதிக்கு முன்னேறியது. உருகுவேக்கு எதிரான 2-வது சுற்றில் 2 கோல்கள் அடித்து முத்திரை பதித்தார்.
1962 உலக கோப்பையில் கொலம்பியா அறிமுகம் ஆனது. அதை தொடர்ந்து 1990, 1994, 1998, 2014 ஆண்டு போட்டிக்கு தகுதி பெற்றது. இதில் கடந்த முறை கால் இறுதிக்கு நுழைந்ததே அந்த அணியின் சிறப்பாகும்.
இரவு 08.30 மணிக்கு தொடங்கும் போட்டியில், போலந்து அணியும், செனெகல் அணியும் மோதுகின்றன.
2017ல் நடந்த தகுதிச் சுற்றுப் போட்டிகளில் போலந்து அணி, மோன்டேனேகரோ, ரோமானியா, கஜகஸ்தான், அர்மேனியா உள்ளிட்ட அணிகளை வீழ்த்தியது. ஆனால், மெக்சிகோ, டென்மார்க் ஆகிய அணிகளுடன் தோற்றது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நட்பு ரீதியிலான போட்டியில் நைஜீரியாவிடம் 0-1 என்று தோற்ற போலந்து, தென் கொரியாவை 3-2 என வீழ்த்தியது. 1970 – 1980,90 காலக்கட்டங்களில் ஆதிக்கம் செலுத்தியது போல் மீண்டும் போலந்து அணி விஸ்வரூபம் எடுக்க வேண்டும் என்பதே அந்நாட்டு ரசிகர்களின் பேராவலாக உள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2018/06/s396-300x217.jpg)
லீக் சுற்றில் நிச்சயம் போலந்து டாப் பொஷிசனுக்கு வரும் என கணிக்கப்படுகிறது.
இரவு 11.30 மணிக்கு தொடங்கும் போட்டியில், ரஷ்யா அணியும், எகிப்து அணியும் மோதுகின்றன.
கடந்த 14ம் தேதி நடந்த உலகக் கோப்பை முதல் போட்டியில் சவுதி அரேபியா அணியை 5-0 என்ற கோல் கணக்கில் துவம்சம் செய்தது ரஷ்யா. அதேசமயம், கடந்த 15ம் தேதி உருகுவே அணிக்கு எதிரான ஆட்டத்தில் எகிப்து 1-0 என்று தோற்றது. இதனால், இன்றைய போட்டியில் எகிப்து கட்டாயம் வென்றாக வேண்டிய கட்டத்தில் உள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2018/06/s399-300x217.jpg)