/tamil-ie/media/media_files/uploads/2018/06/FIFA-Argentina-football..............jpg)
FIFA World Cup 2018 Live Score, Argentina vs Iceland
FIFA World Cup 2018 Live Score, Argentina vs Iceland:ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முன்னாள் சாம்பியன் அர்ஜெண்டினா எதிர்பார்ப்பு மிக்க அணி!
FIFA World Cup 2018 சாம்பியன் கோப்பை வெல்லும் போட்டியில் இருக்கும் முக்கிய அணிகளில் ஒன்று அர்ஜெண்டினா. அதனுடன் மோதும் ஐஸ்லாந்தும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் அணிதான்!
ஃபிபா உலகக் கோப்பை போட்டியின் டி பிரிவில் முதல் ஆட்டம் இது. இரு முறை உலக சாம்பியன், 2014-ல் 2-வது இடம் என கலக்கிய அணி அர்ஜெண்டினா. இந்த அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸிக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் பட்டாளம் உண்டு.
ஐஸ்லாந்து சிறிய நாடு என்றாலும், அந்த அணி இரு ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பிய சாம்பியன்ஷிப் வென்றதை மறந்துவிட முடியாது. இந்தப் போட்டியிலும் தாக்கத்தை உருவாக்கும் முனைப்புடன் அந்த அணி களம் இறங்கியிருக்கிறது.
FIFA World Cup 2018 Live Score, Argentina vs Iceland: அர்ஜெண்டினா-ஐஸ்லாந்து இடையிலான ஆட்டத்தின் லைவ் ஸ்கோர்:
8:35 PM: ஆட்ட நேர இறுதி வரை அர்ஜெண்டினா நட்சத்திர வீரர் மெஸ்ஸியை குறி வைத்து மேற்கொண்டு கோல் அடிக்க விடாமல் தடுத்தது ஐஸ்லாந்து. இதனாலேயே ஆட்டம் டிராவில் முடிந்தது.
8:30 PM : ஃபிபா உலகக் கோப்பை 2018 போட்டியின் முதல் அதிர்ச்சி முடிவாக வலுவான அர்ஜெண்டினா அணி தோல்வியை தழுவியிருக்கிறது. அர்ஜெண்டினாவுடன் டிரா செய்ததை ஐஸ்லாந்து வெற்றிக்கு இணையாக கருதுகிறது.
8:25 PM : ஆட்ட நேர இறுதி வரை இரு அணிகளும் மேற்கொண்டு கோல் போடவில்லை. இதனால் 1-1 என ஆட்டம் டிரா ஆனது.
8:00 PM: அர்ஜெண்டினா நட்சத்திர வீரர் மெஸ்ஸி, ஒரு பெனால்டி கிக் வாய்ப்பை வீணடித்தார்.
7:30 PM : முதல் பாதியில் அர்ஜெண்டினா வீரர்கள் தொடர்ந்து பெனால்டி அப்பீல்களை கேட்டபடியே இருந்தனர். ஐஸ்லாந்து வீரர்களின் உயரம், அனைவரையும் மிரள வைத்தது.
Iceland fans, doing what Iceland fans do ????#ARGISLpic.twitter.com/Igx5K1m3o6
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) 16 June 2018
7:20 PM : முதல் பாதி முடிந்த நிலையில் அர்ஜெண்டினாவும், ஐஸ்லாந்தும் 1-1 என சமநிலையில் இருந்தன.
STATS // #ARGISLpic.twitter.com/K3MvpYIMxE
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) 16 June 2018
6:55 PM : அடுத்த 5-வது நிமிடத்தில் ஐஸ்லாந்து வீரர் ஃபிப்போகாஸன் பரபரப்பான ஆட்டத்தில் ஒரு கோல் அடித்து 1-1 என சமநிலையை எட்ட வைத்தார்.
An incredible achievement from @Mascherano ????#ARGISLpic.twitter.com/WAuMVJQWtu
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) 16 June 2018
6:50 PM : அர்ஜெண்டினாவின் செர்ஜியோ அகரோ முதல் கோல் அடித்து 1-0 என லீட் உருவாக்கினார். அகரோவுக்கு இது 86-வது சர்வதேச கோல்! உலகக் கோப்பையில் முதல் கோல்!
6:45 PM : மாலை 6.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் முதல் 15-வது நிமிடத்தில் ஐஸ்லாந்து அணிக்கு கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த அணியின் ஜார்னஸன் வாய்ப்பை வீணடித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.