Advertisment

FIFA World Cup 2018, Costa Rica vs Serbia: செர்பியா 1-0 என கோஸ்டா ரிகாவை வென்றது

FIFA World Cup 2018 Live Score, Costa Rica vs Serbia: கோஸ்டா ரிகா vs செர்பியா இடையிலான ஆட்டத்தின் லைவ் ஸ்கோர் இங்கே:

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
FIFA World Cup 2018, Costa Rica vs Serbia: செர்பியா 1-0 என கோஸ்டா ரிகாவை வென்றது

FIFA World Cup 2018 Live Score, Costa Rica vs Serbia: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் செர்பியாவின் முதல் ஆட்டம் இன்று(ஜூன் 17) முதல் போட்டியாக நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு போட்டி தொடங்கியது.

Advertisment

FIFA World Cup 2018 Day 4 Live Steaming: ஃபிபா உலகக் கோப்பையில் இன்று 4-ம் நாள் ஆட்டங்கள் நடக்கின்றன. செர்பியா தனது முதல் ஆட்டத்தில் கோஸ்டா ரிகாவுடன் மோதுகிறது. செர்பியா அணியின் ‘அட்டாக்’ பலவீனமாக காட்சி அளித்தாலும்கூட, ஒட்டு மொத்தமாக அதன் வலிமையை குறைத்து மதிப்பிட முடியாது.

செர்பியா அணியில் நேமஞ்சா மேட்டிக், பிரானிஸ்லவ் இவானோவிக் கடும் போட்டி கொடுப்பார்கள். அதேசமயம் கோஸ்டா ரிகா அணி அதிர்ச்சி வைத்தியம் அளிக்கத்தக்க அணிதான்! அதன் கடந்தகால வரலாறு அதை உணர்த்துகிறது.

FIFA World Cup 2018 Live Score, Costa Rica vs Serbia: கோஸ்டா ரிகா vs செர்பியா இடையிலான ஆட்டத்தின் லைவ் ஸ்கோர் இங்கே:

7:25 PM : கடைசி 5 நிமிடங்களில் யாரும் கோல் போடவில்லை. செர்பியா 1-0 என கோஸ்டா ரிகாவை வென்றது.

7:20 PM : இடையிடையே ஆட்டம் தாமதமானதை ஈடுகட்ட கடைசி 5 நிமிட அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. இன்னமும் 1-0 என செர்பியா முன்னிலை வகிக்கிறது.

7:05 PM: செர்பிய வீரர் டாடிக், கோல் அடிக்கும் வாய்ப்பை பெற்றார். ஆனால் அவரது ஷாட் வலுவற்றதாக அமைந்தது. கோஸ்டா ரிகா வீரர்கள் எளிதாக தடுத்தனர். 2-0 என முன்னிலை பெறும் வாய்ப்பை செர்பியா இழந்தது.

6:50 PM : செர்பிய கேப்டன் தனக்கு கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பை பயன்படுத்தி இந்த கோலை அடித்தார். அவர் அடித்த வேகத்தை கோஸ்டா ரிகா வீரர்களால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.

6:45 PM : செர்பிய அணியின் கேப்டன் அலெக்சாண்டர் கொலெரவ் முதல் கோல் அடித்து அசத்தினார். இதனால் செர்பியா 1-0 என முன்னிலை பெற்றது.

6:20 PM : முதல் பாதியில் இரு தரப்புக்கும் கோல் கிடைக்கவில்லை. செர்பிய நடுகள வீரர்கள் பெரும்பாலான நேரங்களில் பந்தை தங்கள் வசம் வைத்துக்கொண்டு நேரத்தை கடத்திவிட்டார்கள். அதே சமயம் கோஸ்டா ரிகா வீரர் யுரேனா கோல் அடிக்க எடுத்த முயற்சிகளை திறமையாக தடுத்தனர்.

6:10 PM : கோஸ்டா ரிகா வீரார் யுரேனாவுக்கு அற்புதமான ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் வலுவாக அடித்த பந்து, கோல் வலைக்கு மேலே பறந்துவிட்டது.

6:05 PM : முதல் 30 நிமிடங்களில் கோல் எதுவும் விழவில்லை. செர்பிய ரசிகர்கள், ‘ஏதாவது செய்யுங்கள்’ என தங்கள் மொழியில் கத்துகிறார்கள்.

6:00 PM: செர்பிய நட்சத்திர வீரர் இவனோவிக் 104-வது முறையாக அந்த அணிக்காக களம் இறங்குகிறார். வேறு யாரும் அந்த அணிக்கு இவ்வளவு போட்டிகளில் விளையாடியது இல்லை.

5:50 PM: கோஸ்டா ரிகா இதற்கு முன்பு கலந்துகொண்ட 4 உலகக் கோப்பை போட்டிகளில் 3 போட்டிகளில் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

5:45 PM : இரு அணிகளும் முதல் கால் மணி நேரம் கடும் போட்டியை கொடுக்கிறார்கள். பந்து இரு தரப்பு கைவசமும் சரிசமமாக சுழல்கிறது.

5:30 PM : இரு அணி வீரகளும் ஷேக் ஹேண்ட் கொடுத்துக்கொண்டு, ஆட்டத்தை தொடங்கினார்கள்.

 

Fifa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment