Advertisment

FIFA World Cup 2018, Denmark vs Australia: 1-1 என டிராவானது ஆட்டம்!

FIFA World Cup 2018, Denmark vs Australia Live Updates: கொலம்பியா vs ஜப்பான் இடையிலான ஆட்டத்தின் ஸ்கோர் இங்கே,

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
FIFA World Cup 2018, Denmark vs Australia: 1-1 என டிராவானது ஆட்டம்!

FIFA World Cup 2018, Denmark vs Australia: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், இன்று முதலாவது ஆட்டமாக குரூப் 'C'ல் இடம்பெற்றுள்ள டென்மார்க் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மாலை 5.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.

Advertisment

தனது முதல் லீக் போட்டியில் ஃபிரான்ஸுடன் விளையாடிய ஆஸ்திரேலியா, 2-1 என்ற கோல் கணக்கில் தோற்று இருந்தது. இதனால், இன்றைய டென்மார்க் அணியுடனான போட்டியில் கட்டாயம் வெற்றிப் பெற வேண்டிய நிலையில் ஆஸ்திரேலிய அணி உள்ளது. உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஆஸ்திரேலியா-டென்மார்க் இடையிலான இன்றைய ஆட்டத்தில் எந்த அணி வெற்றிப் பெறும் என்பதை 'ஜபியகா' என்ற ஆடு மூலம் கணிக்கப்பட்டது. ரஷ்யாவின் சமராவில் உள்ள விலங்குகள் சரணாலயத்தில் பராமரிக்கப்படும் இந்த ஆடு, இந்த போட்டி டிராவில் முடியும் என்று கணித்துள்ளது.

மேலும் படிக்க - உலகக் கோப்பையில் இன்று மெஸ்ஸி ஷோ

கிரிக்கெட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு அடி வாங்கி வரும் ஆஸ்திரேலியா, இன்றைய வெற்றியின் மூலம் குறைந்தபட்சம் கால்பந்து ரசிகர்களையாவது திருப்திப்படுத்துமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

FIFA World Cup 2018, Denmark vs Australia:  டென்மார்க் vs ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டத்தின் ஸ்கோர் இங்கே,

இரவு 07.25 - இரு அணிகளும் இரண்டாம் பாதியில் கோல் அடிக்காததால், ஆட்டம் 1-1 என சமனில் முடிந்தது.

இரவு 07.10 - இரு அணிகளும் முன்னிலைக்காக கடுமையாக போராடி வருகின்றன. ஆனால், கோல் தான் விழுவனா என்கிறது!.

மாலை 06.52 - இரண்டாம் பாதியில் அவ்வப்போது ஆஸ்திரேலியாவுக்கு கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தாலும், அதனை கோலாக அந்த அணியால் மாற்ற முடியவில்லை.

மாலை 06.38 - இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது.

மாலை 06.23 - முதல் பாதி ஆட்டம் முடிந்தது. இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன. VAR தொழில்நுட்பம் மூலம் கோல் அடிக்கும் வாய்ப்பை பெற்று தப்பித்தது ஆஸ்திரேலியா.

மாலை 06.10 - அற்புதமான ஃபெனால்டி வாய்ப்பு கிடைத்த நிலையில், ஆஸ்திரேலிய வீரர் மில் ஜெடிநெக் அதனை கோலாக மாற்ற, ஆஸ்திரேலியா தற்போது 1-1 என ஆட்டத்தை சமன் செய்துள்ளது.

publive-image

publive-image கோல் அடித்த ஆஸ்திரேலிய வீரர் மில்

மாலை 06.02 - ஆஸ்திரேலிய வீரர்கள் தாக்குதலான ஆட்டத்தை தொடுத்தனர். ஆனால், டென்மார்க்கின் தடுப்பை அவர்களால் உடைக்க முடியவில்லை.

மாலை 05.53 - டென்மார்க் வீரர் சிஸ்டோவுக்கு கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால்,  டென்மார்க் கோல் கீப்பரை தாண்டி அவர் அடித்த பந்து செல்லவில்லை. போதிய நேரம் எடுத்து அவர் பந்தை அடித்த போதும், அது கோலாகவில்லை.

மாலை 05.42 - அடடா! ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே டென்மார்க் வீரர் க்ரிஸ் எரிக்சன் கோல் அடிக்க, டென்மார்க் தற்போது 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

publive-image டென்மார்க் வீரர் எரிக்சன் கோல் அடித்த போது

மாலை 05.35 - இதோ ஆட்டம் தொடங்கியது,

publive-image

மாலை 05.29 - இருநாடுகளின் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது.

publive-image இரு நாடுகளின் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது

Fifa 2018
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment