FIFA World Cup 2018, Sweden vs South Korea: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், இன்று முதலாவது ஆட்டமாக 'F' பிரிவில் இடம்பெற்றுள்ள ஸ்வீடன் மற்றும் தென் கொரிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மாலை 5.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.
ஸ்வீடன், தென் கொரிய ரசிகர்கள் ஒன்றாக போஸ் கொடுக்கும் காட்சி
கடந்தாண்டு நடைபெற்ற போட்டிகளில், ஸ்வீடன் அணி சில பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. போர்ச்சுக்கலை 2-3 என்றும், பிரான்ஸ் அணியை 2-1 என்றும், இத்தாலியை 1-0 என்றும் வீழ்த்தி இருக்கிறது. அதேசமயம், இந்தாண்டு (2018) நடைபெற்ற உலகக் கோப்பை பயிற்சிப் போட்டிகளில் எஸ்டோனியா அணியிடம் 1-1 என டிரா, டென்மார்க் XI அணியிடம் 1-0 என வெற்றி, சிலி அணியிடம் 1-2 என தோல்வி, ரோமானியா அணியிடம் 1-0 என தோல்வி, டென்மார்க், பெரு அணியிடம் 0-0 என டிரா என்று சற்று பின்னடைவாக ஆட்டத்தையே ஸ்வீடன் வெளிப்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க - உலக சாம்பியன் ஜெர்மனியை வீழ்த்திய மெக்சிகோ
தென் கொரியாவை பொறுத்தவரையில், 2002ல் நடந்த உலகக் கோப்பையில் அரையிறுதி வரை முன்னேறிய முதல் ஆசிய அணி என்ற சாதனை படைத்தது. அரையிறுதியில், ஜெர்மனியிடம் தோல்வி அடைந்த தென் கொரியா, நான்காவது இடம் பிடித்தது. உலகக் கோப்பையில் அந்த அணியின் மிகச் சிறந்த செயல்பாடு இதுவே. இருப்பினும், பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் களமிறங்கும் தென் கொரியா, நடப்பு உலகக் கோப்பையில் காலிறுதி வரையாவது முன்னேறிவிட வேண்டும் என்ற முனைப்போடு உள்ளது.
FIFA World Cup 2018, Sweden vs South Korea: ஸ்வீடன் vs தென் கொரியா இடையிலான ஆட்டத்தின் ஸ்கோர் இங்கே,
இரவு 07.26 - இதோ, ஆட்டம் முடிந்தது!. கூடுதலாக நான்கு நிமிடங்கள் ஒதுக்கியும் தென் கொரியா கோல் அடிக்காததால், ஸ்வீடன் 1-0 என தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
/tamil-ie/media/media_files/uploads/2018/06/s391-300x217.jpg)
இரவு 07.13 - போட்டி முடிய இன்னும் 5 நிமிடங்களே உள்ளன.
இரவு 07.05 - கீழே படத்தில் இருப்பவர், பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி, ஸ்வீடன் அணிக்கு முதல் கோல் அடித்த ஆன்ட்ரியாஸ் கிரான்க்விஸ்ட்.
/tamil-ie/media/media_files/uploads/2018/06/s390-300x217.jpg)
மாலை 06.55 - 2006க்கு பிறகு, 12 வருடங்கள் கழித்து, ஸ்வீடன் தனது முதல் கோல்-ஐ உலகக் கோப்பையில் பதிவு செய்துள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2018/06/s389-300x217.jpg)
மாலை 06.53 - பெனால்டி வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஸ்வீடன் வீரர், கிரான்க்விஸ்ட், அற்புதமான கோல் ஒன்றை அடிக்க, ஸ்வீடன் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
மாலை 06.40 - தென் கொரியாவுக்கு கோல் அடிக்க நல்ல வாய்ப்பு கிட்டியது. ஆனால், ஸ்வீடன் வீரர்களால் அது தடுக்கப்பட்டது.
/tamil-ie/media/media_files/uploads/2018/06/s387-300x217.jpg)
மாலை 06.33 - இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது.
மாலை 06.18 - முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால், 0-0 என ஆட்டம் சமநிலையில் உள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2018/06/s388-300x217.jpg)
மாலை 06.05 - தென் கொரிய வீரர் பார்க் காயம். இதனால், பார்க் வெளியேற கிம் உள் நுழைந்துள்ளார்.
மாலை 05.55 - மெதுவாக ஆட்டத்தை தொடங்கிய ஸ்வீடன், தற்போது தாக்குதல் ஆட்டத்தை தொடங்கியுள்ளது. ஸ்வீடன் வீரர் ஜெர்க், கோல் கம்பத்தில் இருந்து 10 யார்டு தொலைவில் கோல் அடிக்க முயன்றார். ஆனால், அது கொரிய வீரர்களால் தடுக்கப்பட்டது.
/tamil-ie/media/media_files/uploads/2018/06/s386-300x217.jpg)
மாலை 05.45 - இரு அணிகளும் இதுவரை கோல் அடிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஏற்படுத்தவில்லை.
மாலை 05.32 - போட்டி தொடங்கியது. வீரர்களின் கால்களை நோக்கி பந்து....
மாலை 05.29 - இரு நாடுகளின் தேசிய கீதம் இசையமைக்கப்பட்டது ,
மாலை 05.25 - இரு அணிகளின் பிளேயிங் XI பட்டியல் இதோ,