FIFA World Cup 2018 Live Score, Portugal vs morocco: போர்ச்சுகல் vs மொராக்கோ லைவ் ஸ்கோர் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸில் காணலாம்.
FIFA World Cup, Portugal vs morocco: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் நடந்து வருகிறது. இன்று (ஜூன் 20) முதல் ஆட்டமாக மாலை 5:30 மணிக்கு போர்ச்சுகல் அணியும், மொராக்கோ அணியும் மோதுகின்றன.
FIFA 2018: ரொனால்டோவின் ஹாட்ரிக் கோல்: ரஜினியின் பன்ச் டயலாக்குடன் ஒப்பிட்ட மலையாள வர்ணனையாளர்!
கடந்த 15ம் தேதி நடந்த ஸ்பெயின் அணிக்கு எதிரான ஆட்டத்தில் போர்ச்சுகல் 3-3 என டிரா செய்திருந்தது. மூன்று கோல்களையும் ரொனால்டோவே அடித்திருந்தார். இன்று மொராக்கோவை எளிதாக போர்ச்சுகல் ஊதித் தள்ளிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் திடீரென மொராக்கோ எழுச்சி பெற்றுவிட்டால்? பார்க்கலாம்!
Portugal vs Morocco Live Score FIFA World Cup 2018 Live Streaming: போர்ச்சுகல் vs மொராக்கோ லைவ் ஸ்கோர் இங்கே:
7:26 PM: இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கோல் போடவில்லை. முடிவில் போர்ச்சுகல் 1-0 என வெற்றி பெற்றது.
6:55 PM: மொராக்கோ அணிக்கு ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கோல் ஆக்க முடியவில்லை.
6:20 PM : முதல் பாதியில் போர்ச்சுகல் 1-0 என முன்னிலை பெறுகிறது.
6:00 PM: போர்ச்சுகல்லுக்கு ஒரு ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. ரொனால்டோ அடித்த பந்தை மொராக்கோ கோல் கீப்பர் தடுத்துவிட்டார்.
5:42 PM: மொராக்கோ அணி தனது எதிர் தாக்குதல் ஆட்டத்தை கடைபிடிக்கிறது. போர்ச்சுகல் அணிக்கு ஈடுகொடுக்கும் வகையில் விளையாடி வருகிறார்கள்.
Just the 85 international goals for @Cristiano now... ????#PORMAR pic.twitter.com/2Y9tVpes1G
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) 20 June 2018
5:35 PM: ஆட்டத்தின் 4-வது நிமிடத்திலேயே இரு டிபெண்டர்களை ஏமாற்றிவிட்டு போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்தார். இதனால் போர்ச்சுகல் 1-0 என முன்னிலை பெற்றது.
5:20 PM: போர்ச்சுக அணியை ஒப்பிடுகையில் மொராக்கோ பலவீனமான அணிதான். ஆனால் இந்த உலகக் கோப்பையில் ஏற்கனவே சிறு அணிகள் அதிர்ச்சி வைத்தியம் அளித்து வருவதையும் பார்த்திருக்கிறோம்.
#PORMAR // Formations...#WorldCup pic.twitter.com/hm2SGyS07i
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) 20 June 2018
5:15 PM : போர்ச்சுகல் அணியில் தொடக்க 11 வீரர்கள் பட்டியலில் மாற்றம் இல்லை. இரு அணிகளின் தொடக்க 11 வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.