ரொனால்டோவின் ஹாட்ரிக் கோல்: ரஜினியின் பன்ச் டயலாக்குடன் ஒப்பிட்ட மலையாள வர்ணனையாளர்!

அந்த வீடியோ இப்போது செம வைரல்

ரஷ்யாவில் கடந்த ஜூன் 15ம் தேதி நடந்த மூன்றாவது மற்றும் இறுதி லீக் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ள போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதின.

இதில், ஆட்டம் முடிய 2 நிமிடமே இருக்கும் தருவாயில், ஸ்பெயின் அணி 3-2 என்று முன்னிலையில் இருந்தது. அப்போது, கிடைத்த ஃபிரீ கிக் வாய்ப்பை போர்ச்சுகல் கேப்டனும், நட்சத்திர வீரருமான ரொனால்டோ சரியாக பயன்படுத்தி, அற்புதமாக கோல் அடித்து போட்டியை டிராவக்கினார். அப்போட்டியில் இது அவரது ஹாட்ரிக் கோல் ஆகும். இதனால் ஆட்டம் 3-3 என சமனானது. அதைத்தொடர்ந்து வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் இரு அணியும் மேலும் கோல் அடிக்காததால், பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டி 3-3 என சமனில் முடிந்தது. இதனால் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், பெங்காலி, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் இந்தயாவில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில், இப்போட்டியின் மலையாள வர்ணனையாளர், ரொனால்டோவின் ஹாட்ரிக் கோல்-ஐ, மலையாளத்தில் வர்ணனை செய்யும் போது, திடீரென சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மாஸ் பன்ச் டயலாக்கை பயன்படுத்த, அந்த வீடியோ இப்போது செம வைரல். பன்ச் டயலாக்கிற்கு மட்டுமல்ல.. பார்வையாளர்களை பரவசப்படுத்தும் அவரது குரலுக்காகவும் தான்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Fifa news in Tamil.

×Close
×Close