பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில், 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் இன்றிரவு 8.30 மணிக்கு தொடங்கியது.
இரவு எட்டு மணிக்கு தொடக்க விழாவுடன் உலகக் கோப்பை தொடர் தொடங்கியது. இங்கிலாந்தின் பிரபல பாப் பாடகர் ராப்பி வில்லியம்ஸ் இசை விருந்து அளித்தார். அப்போது பிரேசில் முன்னாள் வீரர் ரொனால்டோ பந்தை உதைத்து போட்டியை தொடங்கி வைத்தார். அதன்பின் ஜிம்னாஸ்டிக்ஸ் கலைஞர்களின் சாகசமும் நடைபெற்றது.
தொடக்க போட்டியில் ரஷ்யாவும், சவுதி அரேபியா அணியும் மோதின.
இரவு 10.20 - ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் ரஷ்யா மற்றொரு கோல் அடிக்க, முடிவில் 5-0 என கோல் கணக்கில் அபாரமாக வென்றுள்ளது ரஷ்ய அணி.
இரவு 10.20 - ரஷ்யாவின் டெனிஸ் 4வது கோல் அடித்தார்.
இரவு 10.00 - ரஷ்யாவின் சயூபா 3வது கோல் அடித்தார். இதன் மூலம் 3-0 என ரஷ்யா முன்னிலை.
இரவு 09.39 - இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது.
இரவு 09.26 - முதல் பாதி நேரம் முடிந்தது. 2-0 என ரஷ்யா முன்னிலை.
இரவு 09.21 - ரஷ்ய வீரர் டெனிஸ் செரிஷேவ் இரண்டாவது கோல் அடித்தார். இதனால், 2-0 என ரஷ்யா முன்னிலை.
இரவு 08.56 - ரஷ்ய வீரர் ஆலன் ஜகோவிற்கு காயம் ஏற்பட்டதால், அவர் போட்டியில் இருந்து வெளியேறினார்.
இரவு 08.48 - 2018 உலகக் கோப்பையின் முதல் கோலை ரஷ்யா அடித்தது. ரஷ்யாவின் யூரி கசின்ஸ்கி அந்த அற்புதமான கோலை அடித்தார். அவர் கோல் அடித்தவுடன் ஒட்டுமொத்த அரங்கமும் அதிர்ந்தது.
இரவு 08.29 - இரு நாடுகளின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.