/tamil-ie/media/media_files/uploads/2018/06/s468.jpg)
FIFA World Cup 2018, Belgium vs Tunisia: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், இன்று முதலாவது ஆட்டமாக பெல்ஜியம் மற்றும் துனீசியா அணிகள் மோதுகின்றன. மாலை 5.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.
#BEL vs #TUN#KOR vs #MEX #GER vs #SWE
Matchday 10, are you ready? pic.twitter.com/JLdIaGIBVl
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) 23 June 2018
இந்த உலகக் கோப்பையில் பெல்ஜியம் அணி தான் சாம்பியன் பட்டம் வெல்லும் என்பது பெரும்பாலான வல்லுனர்களின் கருத்தாக உள்ளது. எப்போதுமே சிறந்த அணியைக் களமிறக்கும் பெல்ஜியம், இந்த முறை முழுமையான அணியாகவும் இருக்கிறது. பெரும்பாலான வீரர்கள் ப்ரீமியர் லீக் தொடரில் முத்திரை பதித்தவர்கள். ஹசார்ட், டி ப்ருய்ன், லுகாகு, வெர்டோங்கன், கோர்டுவா என எல்லோருமே ஸ்டார் பிளேயர்கள். பயிற்சியாளர் ராபர்டோ மார்டினஸ் அந்த அணியின் மிகப்பெரிய நம்பிக்கையாக இருப்பவர் என்றே கூறலாம்.
மேலும் படிக்க - இன்றைய ஆட்டங்கள் முழு விவரம்
ப்ரீமியர் லீக் அணிகளுக்கு மேனேஜராக இருந்தபோது, சுமாரான பிளேயர்களையும் சிறந்த டெக்னிக்கல் வீரர்களாக மாற்றியவர் ராபர்டோ. பெல்ஜியம் அணியிடம் இதுவரை இல்லாத சிறந்த பெர்ஃபாமன்சை இவரது பயிற்சியின் கீழ் எதிர்பார்க்கலாம்.
பெரும்பாலான தொடர்களில் தவறாமல் கலந்து கொண்டாலும், கோப்பை என்பது மட்டும் கனவாகவே இருப்பதால், இம்முறை நிச்சயம் அதனை ருசித்து விட வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக உள்ளது பெல்ஜியம்.
FIFA World Cup 2018, Belgium vs Tunisia: பெல்ஜியம் vs துனீசியா இடையிலான ஆட்டத்தின் ஸ்கோர் இங்கே,
இரவு 07.28 - ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் துனீசியா அணிக்கு மற்றொரு ஆறுதல் கோல் கிடைத்தது. இறுதியில் 5-2 என பெல்ஜியம் அபார வெற்றிப் பெற்றது.
இரவு 07.25 - கோல் 5... ரொம்ப நேரமாக கோல் அடிக்க முயற்சி செய்து மிஸ் ஆகிக் கொண்டிருந்த பெல்ஜியம் வீரர் மிச்சி பட்ஷுவாய்-க்கு இப்போது ஒரு அருமையான கோல் கிடைத்துள்ளது.
இரவு 07.10 - அருமையான கோல் வாய்ப்பை பெல்ஜியம் மிஸ் செய்த ஃபீலிங்ஸில் அந்நாட்டு ரசிகை.
மாலை 06.57 - இன்று பெல்ஜியம் அணிக்கு இரண்டு கோல்கள் அடித்த ரொமேலு லுகாகுவிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஃபெலைனி களம் இறக்கப்பட்டுள்ளார். ஹாட்ரிக் கோல் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெல்ஜியம் பயிற்சியாளர் ராபர்டோ இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார்.
மாலை 06.46 - இதோ, நான்காவது கோல். இன்று பெல்ஜியம் அணிக்கு முதல் கோல் அடித்த ஈடன் ஹசார்ட், இப்போது தனது இரண்டாவது கோலை அடிக்க, பெல்ஜியம் 4-1 என முன்னிலை வகிக்கிறது.
#BEL #BEL #BEL #BELTUN pic.twitter.com/pCaijcyRwY
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) 23 June 2018
மாலை 06.36 - இதோ, இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது.
மாலை 06.30 - இன்று இரண்டு கோல்கள் அடித்ததன் மூலம், இந்த உலகக் கோப்பையில் பெல்ஜியம் வீரர் ரொமேலு லுகாகுவின் மொத்த கோல்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. இதன் மூலம், ஒரே உலகக் கோப்பையில் அதிக கோல் அடித்த பெல்ஜியம் வீரர் எனும் பெருமையை அவர் பெற்றுள்ளார்.
மாலை 06.25 - முதல் பாதியில் 3-1 என பெல்ஜியம் முன்னிலை பெற்றுள்ளது.
மாலை 06.22 - பெல்ஜியம் அணியின் ரொமேலு லுகாகு மீண்டும் அற்புதமான கோல் அடிக்க, பெல்ஜியம் 3-1 என முன்னிலை.
மாலை 06.15 - துனீசியா அணிக்காக கோல் அடுத்த ப்ரோன் காயம் காரணமாக ஆட்டத்தில் இருந்து வெளியேற, மற்றொரு துனீசியா வீரர் பென் யோசெஃப் காயத்தில் சிக்கி, ஸ்ட்ரெட்சரில் எடுத்துச் செல்லப்பட்டார்.
மாலை 06.07 - இரு அணிகளுக்கும் அடுத்தடுத்து சில கோல் வாய்ப்புகள் கிடைத்தும் அவை தவறவிடப்பட்டன. குறிப்பாக, துனீசியா அணியின் பால் பாஸ் கொஞ்சம் தடுமாறுகிறது.
மாலை 05.53 - அடக்கடவுளே! உடனே, பதில் கோல் அடித்த துனீசியா. அந்நாட்டு வீரர் ப்ரோன் முதல் கோல் அடித்துள்ளார். இதனால், ஆட்டம் 2-1 என்று உள்ளது. NEVER GIVE UP
மாலை 05.50 - இரண்டாவது கோல்... பெல்ஜியமின் ரொமேலு லுகாகு அற்புதமான கோல் அடிக்க, பெல்ஜியம் 2-0 என முன்னிலை.
மாலை 05.40 - இதோ முதல் Goal.... கிடைத்த பெனால்டி வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திய பெல்ஜியம் வீரர் ஈடன் ஹசார்ட் முதல் கோல் அடித்தார். பெல்ஜியம் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
மாலை 05.35 - இதோ, முதல் Kick... ஆட்டம் தொடங்கியது.
மாலை 05.30 - இரு நாடுகளின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது உணர்ச்சிவசப்பட்ட துனீசியா அணியின் பயிற்சியாளர் நபில் கண்கலங்கினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.