FIFA World Cup 2018 Live Score, Germany vs Mexico: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு உலக சாம்பியன் ஜெர்மனி அணியும், மெக்சிகோ அணியும் மோதுகின்றன. இரவு 8.30 மணிக்கு இப்போட்டி தொடங்கியது.
ஜெர்மனி அணிக்கு மானுவல் நியுர் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜோச்சிம் லோ தலைமை பயிற்சியாளராக உள்ளார். இந்த உலகக் கோப்பைக்கு தயாராகும் விதத்தில் ஜெர்மனி அணி, ஆஸ்திரிய அணிக்கு எதிராக விளையாடிய பயிற்சிப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் தோற்றுள்ளது. அதுமட்டுமின்றி, கடைசியாக விளையாடிய ஐந்து நட்பு கால்பந்து போட்டியில் ஒன்றில் கூட ஜெர்மனி வெற்றிப் பெறவில்லை. இங்கிலாந்துக்கு எதிராக 0-0, பிரான்ஸ் 2-2, ஸ்பெயின் 1-1 என டிரா செய்த ஜெர்மனி, பிரேசிலிடம் 1-0 எனவும், ஆஸ்திரியாவுடன் 2-1 என்றும் தோற்றுள்ளது.
மெக்சிகோவை பொறுத்தவரை, கடந்த ஆறு உலகக் கோப்பைத் தொடரிலும் குரூப் ஸ்டேஜை தாண்டிய மூன்று அணிகளில் அந்த அணியும் ஒன்று. பிரேசில் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளும் கடந்த ஆறு உலகக் கோப்பைத் தொடரிலும் குரூப் ஸ்டேஜை தாண்டியுள்ளன.
ஆண்ட்ரஸ் கார்டாடோ தலைமையில் களமிறங்கும் மெக்சிகோ அணி, உலகக் கோப்பைக்கு ரஷ்யாவுக்கு புறப்படுவதற்கு முன், நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் 30க்கும் மேற்பட்ட பாலியல் தொழில் செய்யும் பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். அவர்களுடன் பல மெக்சிகோ வீரர்கள் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால், அந்த அணியின் பெயர் பெரிதும் டேமேஜ் ஆனது. அந்தப் பெயரை முதல் போட்டியிலேயே தகர்க்கும் மிகப்பெரிய பொறுப்பு உள்ளது.
FIFA World Cup 2018 Live Score, Germany vs Mexico: ஜெர்மனி vs மெக்சிகோ இடையிலான ஆட்டத்தின் லைவ் ஸ்கோர் இங்கே,
இரவு 10.32 - மெக்சிகோ அணி உலக சாம்பியன் ஜெர்மனி அணியை 1-0 என வீழ்த்தி அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது.
இரவு 10.25 -
???? @HirvingLozano70 Appreciation Tweet ???? pic.twitter.com/pua6Vx6Ysx
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) June 17, 2018
இரவு 10.10 - ஜெர்மனி அணியில் வெர்னருக்கு பதிலாக பிராண்ட் களம் இறக்கப்பட்டுள்ளார்.
How are you feeling, #MEX fans? #WorldCup pic.twitter.com/Qzkh0G5wtZ
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) June 17, 2018
இரவு 10.00 - மெக்சிகோ அணி கோல் அடிப்பதை காட்டிலும், ஜெர்மனி கோல் அடிப்பதை அரண் போல் நின்று தடுத்து வருகிறார்கள்.
இரவு 09.47 - இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய சிறிது நிமிடத்திலேயே மெக்சிகோ அணிக்கு இரண்டாவது கோல் அடிக்க நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால், மெக்சிகோ அதனை தவற விட்டுள்ளது.
இரவு 09.40 - இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது.
The Luzhniki Stadium, though. ????#GERMEX pic.twitter.com/nPYLmbqH5G
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) June 17, 2018
இரவு 09.18 - முதல் பாதி ஆட்டம் முடிந்தது. மெக்சிகோ 1-0 என முன்னிலை வகிக்கிறது.
Happiest moment for Mexico fans. pic.twitter.com/PyXgXJFLoJ
— Mulato Sumi (@amulacattygmail) June 17, 2018
இரவு 09.06 - மெக்சிகோவின் லொசானோ அற்புதமான கோல் அடித்தார். ஆட்டத்தின் 35வது நிமிடத்தில் இந்த கோல் விழுந்தது. இதனால், மெக்சிகோ 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. ஜெர்மனி அணியின் பதட்டம் மேலும் அதிகமாக்கப்பட்டுள்ளது.
What a moment for @HirvingLozano70.#GERMEX 0-1 pic.twitter.com/cmfrL4tM86
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) June 17, 2018
இரவு 09.00 - ஜெர்மனி வீரர் கிம்மிச்-க்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
இரவு 08.46 - ஜெர்மனி அணிக்கு ஒரு அருமையான கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது கோல் தான் என்று ஒரு நொடி ரசிகர்கள் நினைக்க, மெக்சிகோ அணி அதை சிறப்பாக தடுத்தது.
Football on a Sunday afternoon. Lovely. #GERMEX pic.twitter.com/fyytuLKYlJ
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) June 17, 2018
இரவு 08.36 - இதோ! உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மாபெரும் போட்டி தொடங்கியது.
We've been looking forward to this one since the #WorldCupDraw in December...
Let's go!
TV listings ???? https://t.co/xliHcxWvEO
Live Blog ???? https://t.co/Y0E34tfD2P#GERMEX pic.twitter.com/aPcytB5Jmo
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) June 17, 2018
இரவு 08.30 - இரு நாடுகளின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.