FIFA world cup 2018: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் கால் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ், உருகுவே அணிகள் இன்று மோதிக் கொள்கின்றன.
பிரான்ஸ் vs உருகுவே:
உருகுவே அணி லீக் ஆட்டங்களில் 3 முறை வெற்றி பெற்று 2 ஆவது சுற்றுக்கு முன்னேறியதை அனைவரும் அறிவோம். அதே போல் பலம் வாய்ந்த போர்ச்சுக்கல் அணியை அசால்ட்டாக வீழ்த்தி உருகுவே அணி கால் இறுதிக்கும் முன்னேறியது. இதுவரை உருகுவே அணி இரண்டு முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது.
உருகுவே அணியில் இடம் பெற்றிருக்கும் கேப்டன் டியுகோ கோடின், ஜோஸ் கிமென்ஸ், மராட்டின் கக்காரெஸ் ஆகியோர் எதிரணிக்கு கண்களாலே பயத்தை தருவார்கள். பலம் வாய்ந்த ஆட்டக்காரர்களை பெற்றுள்ள இந்த அணிக்கு பிரான்ஸ் அணி எப்படி பதில் அளிக்க போகிறது என்பது தான் இன்றைய ஆட்டத்தின் எதிர்ப்பார்ப்பு. உருகுவேயின் இரும்புக் கோட்டையைத் தகர்ப்பது பிரான்ஸ் அணிக்கு சற்று கடினமாக விஷயம் தான் என்கின்றனர் வல்லுநர்கள்.
பிரான்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரான கிளியான் மாப்பே அபாரமாக ஆடி வருவது மற்ற அணி வீரர்களை அச்சுறுத்தியுள்ளது.
அவரது மிரட்டலான ஆட்டம் இந்த ஆட்டத்திலும் தொடரும் என்பது உறுதி.உருகுவேயின் டிபன்ஸ் கோட்டையை அவரால் தகர்க்க முடியும் என்று பிரான்ஸ் அணி நம்புகிறது. இதற்கான விடை இன்று இரவு 7.30 மணிக்கு ரஷ்யாவின் நிஸ்னி நோவ்குரோட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் தெரிந்து விடும்.
FIFA world cup 2018: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய இரண்டாவது கால் இறுதி ஆட்டத்தில் ஆட்டத்தில் பிரேசில், பெல்ஜியம் அணிகள் மோதிக் கொள்கின்றன.
பிரேசில் vs பெல்ஜியம்:
ரஷ்யாவில் நடைப்பெற்று வரும் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் பரபரப்பை எட்டியுள்ளது. இன்று நடைபெறும் இரண்டாவது கால் இறுதிச் சுற்றில் பிரேசில் அணி பெல்ஜியம் எதிர்த்து விளையாடவுள்ளது. இதில் பிரேசில் அணி 5 முறை உலகக் கோப்பையை வென்றுள்ள அணி என்பது கூடுதல் பலம்.
லீக் ஆட்டங்களிலும் அசுரத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரேசில் அணி நாக்-அவுட் சுற்று ஆட்டத்தில் மெக்சிகோவை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி இருந்தது. உலகிலேயே அதிக விலைமதிப்புமிக்க கால்பந்து வீரர் நெய்மர் பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையில் இன்று களத்தில் இறங்குகிறார்.
ய்மரின் தலைமையில் அரை இறுதிக்கு முன்னேறும் முனைப்பில் பிரேசில் அணி அதிதீவிர பயிற்சியுடன் களமிறங்குகிறது. இந்த அணியை களத்தில் சமாளிப்பது பெல்ஜியம் அணிக்கு சற்று கடினமான ஒன்று தான் என்று வல்லுநர்கள் கணித்துள்ளனர். பிரேசில் அணியில் இடம் பெற்றிருக்கும் ஜோவா மிரண்டா, தியாகோ சில்வா,டக்ளஸ் கோஸ்டா, ரெனடா அகஸ்டோ, பிலிப் லூயிஸ் ஆகியோர் புதிய யுக்தியுடன் களம் காண காத்திருக்கின்றனர்.
பெல்ஜியம் அணியை பொருத்தவரையில் அணியின் பயிற்சியாளர் ராபர்ட்டோ மார்ட்டினஸ் ஜெயிப்பது உறுதி என்று கருத்து தெரிவித்துள்ளார். பிரேசில் அணி பலம் வாய்ந்தது என்பதை ஒப்புக் கொண்ட ராபர்ட்டோ, பெல்ஜியம் அணி இந்த கால் இறுதி வாய்ப்பை கண்டிப்பாக சரியான நேரத்தில் பயன்படுத்தி வெற்றி காண்போம் என்று கூறியுள்ளார்.
இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி பெல்ஜியம் அணி பிரேசிலை வீழ்த்துமா அல்லது வழக்கம் போல் பிரேசில் அணி பெல்ஜியத்தை தூசி போல் தட்டி விடுமா என்பது இன்று இரவு 11.30 மணிக்கு கஸானில் தொடங்கும் ஆட்டத்தில் தெரிந்து விடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.