Advertisment

ஃபிபா உலகக் கோப்பை 2018: நாக் அவுட் சுற்றிற்கு தகுதி பெறுமா ஜெர்மனி?

செர்பியா அணியை எளிதில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்பதே வல்லுனர்களின் கணிப்பாக உள்ளது. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஃபிபா உலகக் கோப்பை 2018: நாக் அவுட் சுற்றிற்கு தகுதி பெறுமா ஜெர்மனி?

கொரியா ரிபப்ளிக் vs ஜெர்மனி - 07:30 p.m.

Advertisment

மெக்சிகோ vs சுவீடன் - 07:30 p.m.

செர்பியா vs பிரேசில் - 11:30 p.m.

சுவிட்சர்லாந்து  vs கோஸ்டா ரிகா - 11:30 p.m.

FIFA World Cup 2018: ஃபிபா உலகக் கோப்பையில் இன்று(ஜூன் 27) நடைபெறவுள்ள போட்டிகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

இன்று மொத்தம் நான்கு போட்டிகள் நடைபெற உள்ளன. இரவு 7.30 மணிக்கு இரண்டு போட்டிகளும், இரவு 11.30 மணிக்கு இரண்டு போட்டிகளும் நடைபெற உள்ளன.

தென் கொரியா vs ஜெர்மனி:

'F' பிரிவில் இடம்பெற்றுள்ள தென் கொரியா மற்றும் ஜெர்மனி அணிகள் மோதும் இப்போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பது ஏற்படுத்தியுள்ளது. தனது பிரிவில் கடைசி இடத்தில் உள்ள தென் கொரிய அணி, இரண்டு போட்டியில் விளையாடி, இரண்டிலும் தோற்றுள்ளது. ஜெர்மனியை பொறுத்தவரை இரு போட்டிகளில் ஆடி, ஒன்றில் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் அடைந்துள்ளது. இதனால் இன்றைய போட்டியில் கட்டாயம் ஜெர்மனி வென்றாக வேண்டிய நிலையில் உள்ளது.

மெக்சிகோ vs சுவீடன்:

இரவு 07.30 மணிக்கு மற்றொரு போட்டியில், அதே F பிரிவில் இடம்பெற்றுள்ள மெக்சிகோ மற்றும் சுவீடன் அணிகள் மோதுகின்றன. முதல் போட்டியில் உலக சாம்பியன் ஜெர்மனியை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது மெக்சிகோ. இரண்டு போட்டிகளில் ஆடி, இரண்டிலும் வெற்றிப் பெற்று தனது பிரிவில் முதலிடத்தில் உள்ளது. சுவீடன் அணி, இரு போட்டிகளில் ஆடி, ஒரு வெற்றி, ஒரு தோல்வி என பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது. நாட் அவுட் சுற்றுக்கு முன்னேற வேண்டுமெனில், இன்று மெக்சிகோ அணியை கட்டாயம் வீழ்த்த வேண்டும்.

 செர்பியா vs பிரேசில்:

E பிரிவில் இடம்பெற்றுள்ள செர்பியா மற்றும் பிரேசில் அணிகள் மோதும் இப்போட்டி இரவு 11.30 மணிக்கு தொடங்குகிறது. முன்னாள் உலக சாம்பியன் பிரேசில், இதுவரை இரண்டு போட்டிகளில் ஆடி, ஒரு வெற்றியும், டிராவும் பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் செர்பியா அணியை எளிதில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்பதே வல்லுனர்களின் கணிப்பாக உள்ளது.

சுவிட்சர்லாந்து vs கோஸ்டாரிகா:

இரவு 11.30 தொடங்கும் மற்றொரு போட்டியில் E பிரிவில் இடம்பெற்றுள்ள சுவிட்சர்லாந்து மற்றும் கோஸ்டா ரிகா அணிகள் மோதுகின்றன. இரண்டு போட்டியில் ஆடியுள்ள சுவிட்சர்லாந்து, ஒரு வெற்றி, ஒரு டிராவுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. நாக் அவுட் சுற்றிற்கு முன்னேற அந்த அணிக்கு நல்ல வாய்ப்புள்ளது. ஆனால், கோஸ்டா ரிகா அணி இரண்டு போட்டிகளில் ஆடி, இரண்டிலும் தோற்றுள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment