FIFA World Cup 2018: ஃபிபா உலகக் கோப்பையில் இன்று(ஜூன் 28) நடைபெறவுள்ள போட்டிகள் குறித்து இங்கே பார்க்கலாம்.
It's the final day of the group stages!
Here's the plan...#WorldCup pic.twitter.com/SMK8UO6njP
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) June 28, 2018
ஜப்பான் vs போலந்து
இரவு 07.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில், H பிரிவில் இடம்பெற்றுள்ள ஆசிய அணியான ஜப்பானும், போலந்தும் மோதுகின்றன. அந்த பிரிவில் இடம்பெற்றுள்ள ஜப்பான் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டு போட்டிகளில் இதுவரை ஆடியுள்ள ஜப்பான் ஒரு வெற்றியும், டிராவும் பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் வெற்றிப் பெற்றால், நாக் அவுட் சுற்றிற்கு தகுதிப் பெற்றுவிடும். போலந்து அணி ஏற்கனவே இரண்டு போட்டிகளில் ஆடி இரண்டிலும் தோற்றுள்ளது.
செனகல் vs கொலம்பியா
இரவு 07.30 மணிக்கு தொடங்கும் மற்றொரு போட்டியில், H பிரிவில் இடம்பெற்றுள்ள செனகல் மற்றும் பலம் வாய்ந்த கொலம்பியா அணிகள் மோதுகின்றன.
இரண்டு போட்டிகளில் ஆடி ஒரு வெற்றி, ஒரு டிராவுடன் இரண்டாம் இடத்தில் செனகல் அணி உள்ளது. கொலம்பியா 3 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. இப்போட்டியில் வெற்றிப் பெறும் அணி, நாக் அவுட் சுற்றிற்கு முன்னேறி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து vs பெல்ஜியம்
இரவு 11.30 நடைபெறும் போட்டியில், இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன. ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை இப்போட்டி ஏற்படுத்தியுள்ளது. G பிரிவில் இடம் பெற்றுள்ள இவ்விரு அணிகளும், தலா 6 புள்ளிகளுடன் முதல் இரு இடங்களில் உள்ளது. இரு அணிகளும் இதுவரை தோல்வியை சந்திக்கவில்லை. இருப்பினும், இரு அணிகளும் ஏற்கனவே நாக் அவுட் சுற்றுக்கு தகுதிப் பெற்று விட்டன. இதனால் ஹாட்ரிக் வெற்றியை பெறப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
பனாமா vs துனீசியா
இரவு 11.30 மணிக்கு நடைபெறவுள்ள மற்றொரு போட்டியில், பனாமா மற்றும் துனீசியா அணிகள் மோதுகின்றன. G பிரிவில் உள்ள இவ்விரு அணிகளும், கடைசி இரு இடத்தில் உள்ளன. வெற்றி, தோல்வியால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. இருப்பினும், வெற்றியுடன் நாடு திரும்ப இரு அணிகளும் முயற்சி கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.
இன்றுடன் அனைத்து முதல் சுற்று போட்டிகளும் முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது. நாளை மறுநாள் (ஜூன் 30) முதல் நாக் அவுட் சுற்றுப் போட்டிகள் தொடங்குகின்றன. இதில், தோற்கும் அணி உடனடியாக பெட்டி கட்டி ஊருக்கு கிளம்ப வேண்டியதுதான்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.