FIFA World Cup 2018: அர்ஜென்டினா நிலைமையை எண்ணிப் பார்த்து உஷாராக களமிறங்கும் பிரேசில்!

FIFA World Cup 2018: இன்று  (ஜூன் 22) நடக்கவுள்ள போட்டிகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

By: Updated: June 22, 2018, 01:12:04 PM

FIFA World Cup 2018: இன்று  (ஜூன் 22) நடக்கவுள்ள போட்டிகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

ஃபிபா உலகக் கோப்பை 2018: மாலை 5.30 தொடங்கும் முதல் போட்டியில் பலம் வாய்ந்த பிரேசில் அணியும், கோஸ்டா ரிகா அணியும் மோதுகின்றன.

தனது முதல் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து அணியுடன் மோதிய பிரேசில் 1-1 என போராடி டிரா செய்தது. இதுவரை பிரேசில் பங்கேற்ற 20 உலகக் கோப்பைத் தொடரின் முதல் ஆட்டங்களில் 16 முறை வெற்றியை பதிவு செய்துள்ளது. அத்தகைய வலிமையான அணியை அன்றைய ஆட்டத்தில் டிராவில் முடிக்கவைத்து, பிரேசில் தொடர் சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது ஸ்விட்சர்லாந்து. அன்றைய ஆட்டத்தில் பிரேசில் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான நெய்மர் மீதே எதிரணியினரின் குறி இருந்தது. அவரை இறுதி வரை கோல் அடிக்க விடாமல், கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டனர்.

நிச்சயம் இன்றைய போட்டியிலும், நெய்மர் மீதே கோஸ்டா ரிகா குறி வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. முடிந்தால், அவருக்கு காயம் ஏற்படுத்தும் வகையில் தாக்குதல் ஆட்டத்தைக் கூட வெளிப்படுத்தலாம். ஏனெனில், ஏற்கனவே நெய்மர் காயத்தால் அவதிப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், நேற்று மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி, குரோஷியாவிடம் 3-0 என தோல்வி அடைந்து, ஏறக்குறைய தொடரில் இருந்து வெளியேறும் நிலையில் உள்ளது. குரோஷியாவிடம், அர்ஜென்டினா இப்படி மோசமாக தோற்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இதனை மனதில் வைத்து, கோஸ்டா ரிகாவை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், மிகுந்த எச்சரிக்கையுடன் பிரேசில் அணி இன்று களமிறங்க உள்ளது.

இரவு 08.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் நைஜீரியா, ஐஸ்லாந்து அணிகள் மோதுகின்றன.

தனது முதல் போட்டியில் அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த ஐஸ்லாந்து, இன்றும் நைஜீரியாவுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தும் என உறுதியாக நம்பலாம். உயரம் தான் ஐஸ்லாந்து அணியின் மிகப்பெரிய பிளஸ். அர்ஜென்டினா அணிக்கு எதிராக டிரா செய்த பிறகு, ‘உயரமான ஐஸ்லாந்து அணிக்கு ஏற்றவாறு அர்ஜென்டினா பயிற்சியாளர் ஸ்டிராடஜி அமைக்கவில்லை’ என்று கால்பந்து முன்னாள் ஜாம்பவான் மாரடோனா பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆக, நைஜீரியா மிக கவனமாக ஆட வேண்டியது அவசியம். அதேசமயம், சேம் சைட் கோல் அடிப்பதில் கில்லியாக திகழ்ந்து வருகிறது நைஜீரியா. 2014 உலக கோப்பையின் கால் இறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் பிரான்சுக்கு எதிராக சேம் சைட் கோல் அடித்த நைஜீரியா, நடப்பு உலக கோப்பையிலும் தனது முதல் போட்டியில் குரோஷியா அணிக்கு எதிராக சேம் சைட் கோல் போட்டதன் மூலமாக, உலகக் கோப்பை வரலாற்றின் தொடர்ச்சியாக 2 சுய கோல் போட்ட முதல் அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது.

இரவு 11.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து, செர்பியா அணிகள் மோதுகின்றன.

பிரேசிலையே அலற விட்ட சுவிட்சர்லாந்து நிச்சயம், செர்பியா அணிக்கு கடும் சவால் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுவிட்சர்லாந்தின் தடுப்பாட்டம் அபாரமாக உள்ளது. அதனை மீறி, கோல் அடிக்க செர்பியா அணி கடுமையாக போராட வேண்டியிருக்கும். அதேசமயம், தனது முதல் போட்டியில் கோஸ்டா ரிகா அணியை செர்பியா வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Fifa News by following us on Twitter and Facebook

Web Title:Fifa world cup 2018 todays match list

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X