Advertisment

FIFA World Cup 2018: இன்றைய (ஜூன் 20) போட்டிகள், ரொனால்டோ மேஜிக் நடக்குமா?

FIFA World Cup 2018: ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய ( ஜூன் 20, 2018 - புதன்) ஆட்டங்களின் பட்டியல் இங்கே:

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
FIFA World Cup 2018: இன்றைய (ஜூன் 20) போட்டிகள், ரொனால்டோ மேஜிக் நடக்குமா?

ஆசைத்தம்பி

Advertisment

FIFA World Cup 2018: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று மொத்தம் மூன்று போட்டிகள் நடைபெற உள்ளது. ரொனால்டோ மேஜிக் இன்றும் நடக்குமா?

FIFA World Cup 2018: ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய ( ஜூன் 20, 2018 - புதன்) ஆட்டங்களின் பட்டியல் இங்கே:

1.போர்ச்சுகல் vs மொரோக்கோ - 05.30 p.m.

2.உருகுவே vs சவுதி அரேபியா - 08.30 p.m.

3.ஈரான் vs ஸ்பெயின் - 11.30 p.m.

FIFA World Cup 2018: இன்று மாலை 05.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில், போர்ச்சுகல் மற்றும் மொரோக்கோ அணிகள் மோதுகின்றன.

கிரிஸ்டியானோ ரொனால்டோ…. இன்றைய கால்பந்து உலகின் டாப் வீரர்களில் ஒருவர் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கோடிக்கணக்கான கால்பந்து ரசிகர்களின் ஹீரோ. ஏன்! பல சர்வதேச கால்பந்து வீரர்களின் ஹீரோவும் கூட.

ஆனால், உலகக் கோப்பை கைப்பற்ற ரொனால்டோ மட்டும் போதுமா? கடந்த இரு ஆண்டுகளில் போர்ச்சுகல் விளையாடியுள்ள போட்டிகளை கூர்ந்து கவனித்தால், பெரும்பாலும் பெரிய அணிகளுடன் தோல்வியையே தழுவியுள்ளது. அதேசமயம், சிறிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் பெரும்பாலும் வெற்றிப் பெற்றுவிடுகிறது.

கடந்த 15ம் தேதி நடந்த ஸ்பெயின் அணிக்கு எதிரான ஆட்டத்தில் போர்ச்சுகல் 3-3 என டிரா செய்திருந்தது. மூன்று கோல்களையும் ரொனால்டோவே அடித்திருந்தார். ஒரு அணியாக இணைந்து செயல்படும் பட்சத்தில் அரையிறுதி வரை முன்னேறலாம். இன்றைய போட்டியை பொறுத்தவரை, போர்ச்சுகல் கண்டிப்பாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரவு 08.30 மணிக்கு தொடங்கும் போட்டியில், உருகுவே அணியும், சவுதி அரேபியா அணியும் மோதுகின்றன.

உலகக் கோப்பையின் முதல் போட்டியில் ரஷ்யாவுக்கு எதிராக 5-0 என மோசமாக தோற்றது சவுதி அரேபிய அணி. இதனால், இன்றைய போட்டியில் கட்டாயம் வெல்ல வேண்டிய நெருக்கடியில் அந்த அணி உள்ளது. அதேபோல், எகிப்து அணிக்கு எதிராக தனது முதல் போட்டியில் ஆடிய உருகுவே, 1-0 என வெற்றிப் பெற்றது. இரவு 11.30 மணிக்கு தொடங்கும் போட்டியில், ஈரான் அணியும், ஸ்பெயின் அணியும் மோதுகின்றன.

மொரோக்கோ அணிக்கு எதிரான தனது முதல் போட்டியில் ஈரான் 1-0 என்ற கோல் கணக்கில் வென்றிருந்தது. சேம் சைட் கோல் உதவியுடன் அப்போட்டியில் ஈரான் வென்றது. ஸ்பெயினைப் பொறுத்தவரை ரொனால்டோ என்ற ஒற்றை மனிதனால், முதல் போட்டியில் தங்களது வெற்றியை பறிகொடுத்தது ஸ்பெயின். இன்று ஈரான் அணியில் அப்படியொரு ரொனால்டோ இல்லை என்பது ஸ்பெயினுக்கு கூடுதல் வசதி!.

 

Fifa Christiano Ronaldo Aasai Tambi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment