Advertisment

France vs Croatia FIFA World Cup 2018 Final: 4-2 என்ற கோல் கணக்கில் உலகக் கோப்பையை வென்றது பிரான்ஸ்!

FIFA World Cup 2018, France vs Croatia Live Streaming: பிரான்ஸ் vs குரோஷியா இடையிலான போட்டியின் லைவ் ஸ்கோர் இங்கே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
France vs Croatia FIFA World Cup 2018 Final: 4-2 என்ற கோல் கணக்கில் உலகக் கோப்பையை வென்றது பிரான்ஸ்!

FIFA World Cup 2018, France vs Croatia Live Streaming: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் மற்றும் குரோஷியா அணிகள் மோதுகின்றன. இரவு 08.30 மணிக்கு இப்போட்டி தொடங்கியது.

Advertisment

பிரான்ஸை பொறுத்தவரை, இதுவரை ஒரேயொரு முறை மட்டுமே ஃபிபா உலகக் கோப்பையை வென்றுள்ளது. அதேசமயம், UEFA ஐரோப்பிய சாம்பியன்ஷிப்ஸ் பட்டத்தை இரு முறையும், ஒரு முறை ஒலிம்பிக் பட்டதையும், இருமுறை ஃபிபா கான்ஃபெடரேஷன்ஸ் கோப்பையையும் வென்றுள்ளது. ஃபிபா அங்கீகரிக்கும் மூன்று முக்கிய தொடர்களிலும் கோப்பை வென்ற நான்கு அணிகளுள் பிரான்ஸும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. 1930ம் ஆண்டு முதன்முறை உலகக் கோப்பை தொடர் தொடங்கப்பட்ட போது, அதில் பங்கேற்ற நான்கு ஐரோப்பிய அணிகளில் பிரான்ஸும் ஒன்று. ஆறு முறை தகுதிச் சுற்றோடு வெளியேறி இருக்கிறது. குறிப்பாக, இதுவரை நடந்த அனைத்து உலகக் கோப்பைத் தொடரிலும் தவறாமல் பங்கேற்ற மூன்று அணிகளில் ஒன்றாக பிரான்ஸும் திகழ்கிறது. இந்நிலையில், பிரான்ஸ் அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.

மேலும் படிக்க: வியாசர்பாடியில் பெரிய திரையில் ஒளிபரப்பு செய்யப்படும் இறுதிப் போட்டியின் நேரலை

குரோஷியா அணியைப் பொறுத்தவரை, 1998-ம் ஆண்டு பிரான்ஸில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில், அரை இறுதி வரை முன்னேறி இருந்ததே அந்த அணியின் சிறந்த செயல்பாடாகும். அந்த ஆட்டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியிடம் தோல்வி கண்டது. இதன் பின்னர் பங்கேற்ற 4 உலகக் கோப்பை தொடர்களிலும் குரோஷிய அணி முதல் சுற்றுடன் வெளியேறியிருந்த நிலையில், தற்போது நடப்பு உலகக் கோப்பையில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

சமபலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால், ரசிகர்களுக்கு மெகா விருந்து காத்திருக்கிறது.

FIFA World Cup 2018, France vs Croatia Live Streaming: பிரான்ஸ் vs குரோஷியா இடையிலான போட்டியின் லைவ் ஸ்கோர் இங்கே,

இரவு 10.30 - அதேசமயம், குரோஷியா அணி வீரர்கள் மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதனர்.

இரவு 10.24 - இதோ, 4-2 என்ற கோல் கணக்கில் இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்றது பிரான்ஸ்.

இரவு 10.20 - இரண்டாம் பாதி ஆட்டம் முடிந்தது. கூடுதலாக ஐந்து நிமிடங்கள் தரப்பட்டது.

இரவு 10.12 - நான்கு கோல் அடித்தும், பிரான்ஸ் அட்டாக்கிங் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இரவு 09.57  - குரோஷியா வீரர் மன்ட்சுகி கோல் அடிக்க, பிரான்ஸ் 4-2 என முன்னிலையில் உள்ளது.

இரவு 09.53 - ஆட்டத்தின் 65வது நிமிடத்தில் பிரான்ஸின் எம்பாப்வே கோல் அடித்தார். இதனால் பிரான்ஸ் 4-1 என முன்னிலை பெற்றுள்ளது.

இரவு 09.48 - ஆட்டத்தின் 59வது நிமிடத்தில், பிரான்ஸ் அணியின் போக்பா அட்டகாசமாக கோல் அடிக்க, பிரான்ஸ் 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இரவு 09.43 - இரு அணிகளும் தொடர்ந்து அட்டாக்கிங் ஆட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. ஆட்டத்தின் 53வது நிமிடத்தில், குரோஷியாவிற்கு கோல் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், பிரான்ஸ் கேப்டனும், கோல் கீப்பருமான லோரிஸ் அதனை அபாரமாக தடுத்தார்.

இரவு 09.33 - இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது.

இரவு 09.18 - உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் முதல் பாதி முடிந்தது. இதில், பிரான்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

publive-image

இரவு 09.08 - குரோஷியா வீரர் பெரிசிச் கையில் பந்து பட்டதால், பிரான்ஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை கச்சிதமாக பயன்படுத்திய கிரீஸ்மேன் கோல் அடிக்க, பிரான்ஸ் அணி 2-1 என முன்னிலை பெற்றது.

இரவு  09.00 - அடுத்த கோல்... ஆனால், இம்முறை அடித்தது குரோஷியா. அந்த அணியின் பெரிசிச் ப்ரீ கிக் வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமனில் உள்ளது.

இரவு 08.50 - கோல்ல்ல்ல்ல்.... பிரான்ஸ் அணியின் கிரீஸ்மேனுக்கு ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. இதில், அவர் அற்புதமாக கோல் அடிக்க பிரான்ஸ் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

publive-image பிரான்ஸின் முதல் கோல்

இரவு 08.40 - இரு அணிகளும் டிபன்ஸ், அட்டாக்கிங் என சரிசமமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன.

இரவு 8.30 - உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் மெர்சலான ஆட்டம் தொடங்கியது.

இரவு 8.25 - இரு அணி வீரர்களும் மைதானத்திற்குள் வந்தனர். இரு அணிகளின் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது.

Fifa Fifa 2018
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment