நாக்கில் வச்ச உடேன கரையும் அல்வா... வெறும் தேங்காய் போதும்!
வெறும் 10 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில், சுவையான தேங்காய் அல்வாவை வீட்டிலேயே எளிதாகத் தயாரிக்கலாம். இதன் சுவை உங்களை நிச்சயம் ஆச்சரியப்படுத்தும். இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆசை வரும்போது, உடனடியாக இந்த அல்வாவைச் செய்து மகிழலாம்.

திடீரென இனிப்பு சாப்பிட ஆசைப்படுகிறீர்களா? ஆனால் அதிக நேரம் சமையலறையில் செலவிட விருப்பமில்லையா? அப்படியானால், இன்ஸ்டன்ட் தேங்காய் அல்வா ரெசிபி உங்களுக்கானதுதான்! வெறும் 10 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில், சுவையான தேங்காய் அல்வாவை வீட்டிலேயே எளிதாகத் தயாரிக்கலாம். இதன் சுவை உங்களை நிச்சயம் ஆச்சரியப்படுத்தும்.
Advertisment
தேவையான பொருட்கள்:
அரை மூடி தேங்காய் (சில்லு சில்லாகக் கீறியது), 2 ஸ்பூன் பொட்டுக்கடலை, 2 ஏலக்காய் , முக்கால் கப் பொடித்த வெல்லம், தேவையான அளவு நெய் மற்றும் முந்திரி.
செய்முறை: முதலில், அரை மூடி தேங்காயைச் சில்லு சில்லாகக் கீறி மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். அதனுடன் 2 ஸ்பூன் பொட்டுக்கடலை, வாசனைக்காக 2 ஏலக்காய் மற்றும் முக்கால் கப் பொடித்த வெல்லம் சேர்த்து, நன்கு நைஸாக அரைத்துக்கொள்ளவும். ஒரு கடாயில் சிறிது நெய் சேர்த்து, முந்திரியைப் பொன்னிறமாக வறுத்து எடுத்து தனியே வைத்துக்கொள்ளவும். அதே கடாயில், நாம் அரைத்து வைத்துள்ள தேங்காய்க் கலவையைச் சேர்க்கவும். கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். சுமார் ஐந்து நிமிடங்களிலேயே கலவை நன்கு வெந்து, கெட்டியாகத் திரண்டு வரும். கலவை நன்கு திரண்டு வந்ததும், நாம் வறுத்து வைத்துள்ள முந்திரியைச் சேர்த்து ஒருமுறை கிளறி இறக்கினால், சுவையான தேங்காய் அல்வா தயார்!
Advertisment
Advertisements
இந்த தேங்காய் அல்வா செய்வதற்கு மிகக் குறைந்த நேரமே ஆகும். ஆனால் அதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும். இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆசை வரும்போது, உடனடியாக இந்த அல்வாவைச் செய்து மகிழலாம்.