சர்க்கரை நோய் இருந்தால், அரிசி உணவு சாப்பிடக் கூடாது என்ற ஒரு பொதுவான கருத்து இருக்கிறது. ஆனால், சில வகை அரிசிகள் சர்க்கரையைக் கட்டுப்படுத்தப்கூடியதாக இருக்கிறது என்று டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார்.
சக்கரை நோயை கட்டுப்படுத்தக்கூடிய 13 அரிசி வகைகள் குறித்து தனது யூடியூப் சேனலில் டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார். சக்கரை நோயை கட்டுப்படுத்தக்கூடிய 13 அரிசி வகைகள் குறித்து டாக்டர் கார்த்திகேயன் கூறுகையில், “சர்க்கரை நோய் கட்டுப்படுத்துதல் குறித்த பல விஷயங்கள் இதுவரைக்கும் பேசி இருக்கிறேன். உடற்பயிற்சிகள் செய்து காண்பித்திருக்கிறேன், இந்த அரிசி வகைகளை தனித்தனியா நானே வீடியோவாக வெளியிட்டு இருக்கிறேன். ஆனால், இதை தொகுத்து தரும்போது உங்களுக்கு உபயோகமாக இருக்கும். 13 அரிசிகளில் முதலில் பார்லி அரிசி, அதிகமான நார்ச்சத்து கொண்டது, ஜீரணத்தை மேம்படுத்தக்கூடியது, செரிமானம் நல்லா ஆகும், குறிப்பாக காய்ச்சல் காலத்துல மட்டுமே இந்த பார்லி கஞ்சி உபயோகப்படுத்துகிறார்கள். ஆனால், வாரம் ஒருநாள் சர்க்கரை நோயாளிகள் இதை பயன்படுத்தினால் புரதம், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நமக்கு கிடைக்கும். நிறைய நன்மைகளை தரும்.
இரண்டாவது கேரளாவோட சிவப்பு அரிசி, இது நம்ம கலாச்சார முறையில பயன்பாட்டில் இல்லை என்றாலும் சிவப்பு அரிசி மிகவும் ஆரோக்கியமானது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு இதில் இருக்கக்கூடிய நார்ச்சத்து சர்க்கரை நோய் கட்டுப்படுத்த உதவும். அரிசில வேற என்ன நீங்க சமைச்சு சுவையா சாப்பிடணும்னு நினைச்சீங்கனாலும் அதை இந்த சிவப்பு அரிசியில் செஞ்சு சாப்பிடலாம். மற்ற அரிசிகளை ஒப்பிடும்போது, இதில் கார்போஹைட்ரே, மாவுச்சத்து சதவிகிதம் குறைவு.
மூன்றாவது அரிசி, சர்க்கரை நோயாளிகளைப் பொறுத்த வரைக்கும் என்னைக்குமே புழுங்கல் அரிசி பயன்படுத்துவது ரொம்ப நல்லது, பர்பாயில்டு, (Parboiled rice). பச்சரிசி வேண்டவே வேண்டாம், பச்சரிசி தான் பொதுவாக வேகமாக சக்கரை அளவை ஏற்றக்கூடியது. புழுங்கல் அரிசி தான் என்னைக்குமே பெஸ்ட். இந்த இடத்துல இன்னொரு முக்கியமான பாயிண்ட் சொல்கிறேன். அரிசி பொறுத்தவரைக்கும் அதனுடைய அளவுதான் முக்கியம். நாம் எவ்வளவு அளவு சாப்பிடுறோம் அப்படிங்கறதுதான் சர்க்கரை நோயாளிகளுக்கெல்லாம் முக்கியம். சர்க்கரை நோயாளிகள் அவங்களோட சக்கரை அளவுகளுக்கு ஏற்ப, சோறு ஒரு கப், அல்லது 1 1/2 கப் அப்படிங்கிற அளவுல சர்க்கரை அளவுகளை பொறுத்து கரெக்ட்டா சாப்பிடணும்.
அடுத்து நான்காவது அரிசி, குதிரைவாலி அரிசி. குதிரைவாலி அதிகமான நார்ச்சத்து கொண்டது. கிளைசெமிக் இன்டெக்ஸ் குறைவு, இதை எப்படி செய்து சாப்பிடலாம் அப்படிங்கறது குறித்த தனி வீடியோ நேத்துதான் வெளியிட்டேன்.
ஐந்தாவது கருப்பு கவுனி அரிசி, Black rice கருப்பு கவுனி அரிசி இன்னைக்கு நிறைய இடத்துல கிடைக்குது. ஆரோக்கியமான அரிசிகளில் ஒரு அரிசியாகப் பார்க்கப்படுகிறது. ஆந்த்தோசைனின் என்கிற முக்கியமான சத்து இந்த கருப்பு நிறத்துக்குள்ள ஒளிஞ்சிருக்கு, மேலும், ரத்த சக்கரை அளவுகளை ஏற்றக்கூடிய தன்மை இதற்கு கிடையாது. மெதுவாகத்தான் ஏற்றும். அதனால், வாரம் ஒருமுறை பயன்படுத்தலாம்.
அடுத்து ஆறாவது, கமுத் என்கிற ஒரு வகையான அரிசி. இது மற்ற அரிசிகளோடு ஒப்பிடும்போது, இது கொஞ்சம் புதிய வகை அரிசி தான். இதையும் நாம் பயன்படுத்தலாம்.
ஏழாவது இட்டீசு என்று சொல்லக்கூடிய ஒரு அரிசி, ஆங்கிலத்தில் ஜாப்ஸ் டியர்ஸ் என்று சொல்லலாம். இதற்கு நெற்பவளம் என்ற பெயர் உண்டு. இட்டீசு அரிசி ரொம்ப புகழ்பெற்ற ஒரு அரிசி. பல்வேறு சத்துக்கள், புரதம், தாது உப்புக்கள் நிறைந்தது. இதுவும் வாரம் ஒரு முறை பயன்படுத்த வேண்டிய அரிசி.
அடுத்து எட்டாவது திணை அரிசி, பாக்ஸ்டேய்ல் மில்லட், இதை மிளகாய் அரிசி என்று சொல்லலாம். இதை நான் அரிசி வகைகளுக்குள் சேர்த்துவிட்டேன். சில சிறுதானியங்கள் அரசி வகைகளில் அடங்கும். சிறுதானியப் பண்புகள் குறித்துான் நிறைய பேசியிருக்கிறேன். தனித்தனியாக இது குறித்து பேசி இருக்கிறேன், எப்படி சமைக்கலாம் என்று பேசியிருக்கிறேன்.
9வது இடத்தில் இருப்பது குயினோவா அரிசி, இது குறித்து நான் ஏற்கனவே பேசி இருக்கிறேன். சர்க்கரை நோயாளிகளுக்கு எளிதாக செரிமானம் ஆகக் கூடியது.
பத்தாவது ராகி என்கிற கேழ்வரகு, 11வது சாமை, 12வது கம்பு, இந்த சிறுதானியங்களை காலையில் சாம் சாப்பிடக்கூடிய அரிசி உணவுகளை மாற்றுவதற்குதான் சேர்த்து இருக்கிறேன். மாற்றி மாற்றி பயன்படுத்த வேண்டும். ஒரே வகையான அரிசி உணவை பயன்படுத்தக்கூடாது.
மேலும், இந்த அரிசி வகைகள் ஒரு பக்கம் எடுத்தாலும் சக்கரை நோய் கட்டுப்பாடு பொறுத்த வரைக்கும் ஒரு கப் அரிசி என்றால், இன்னொரு பக்கம் ஒரு கப் அளவுக்கு புரதம் இருக்க வேண்டும். குறிப்பாக அந்த புரதம் பருப்பு வகைகள் பாசிப்பருப்புக்கு ஒரு பிரதான பங்கு உண்டு. எனவே, புரதம் என்றால் இந்த பாசிப்பருப்பு ஒன்று தான், சிறுநீரக பிரச்னை இருந்தாலும் கொஞ்சமாக சேர்த்துக்கொள்ளக்கூடிய ஒரு பருப்பு. ஆரம்ப காலத்தில் இருந்தே பாசிப்பருப்பு ஒரு பக்கம் நம்ம சேர்த்துக்கிட்டே வரணும். சிறுநீரக கோளாறு இல்லாதவங்க எல்லா பருப்புகளுமே மாத்தி மாத்தி பயன்படுத்தலாம்.
சர்க்கரை நோயாளிகளுக்கு கண்டிப்பாக புரதம் நம்ம உணவுல மிஸ் ஆகவே கூடாது. சர்க்கரை நோயாளிகள் தினமும் 30 நிமிஷம் அதுக்கு மேல கூட தேவையில்லை தினமும் நடைபயிற்சி செல்லுங்கள். அதனுடன் இந்த உணவு முறையை பயன்படுத்தி வந்தீர்கள் என்றால், நம்ம சக்கரை அளவுகள் கட்டுபாட்டில் இருக்கும்” என்று டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார்.