/indian-express-tamil/media/media_files/2025/02/09/VPCETIYjLH2LPp3R1z5P.jpg)
சர்க்கரை சாப்பிடாமல் இருந்தாலே உடல் எடையை குறைக்க முடியும்
சர்க்கரையை குறைப்பது நம் உடலில் நல்ல மாற்றத்தை கொண்டுவரும் என மருத்துவர் வேணி கூறுகிறார். மேலும் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் அற்புதமான யோகாசனங்கள் பற்றி மருத்துவர் வேணி நியூரோ டாக்டர் தமிழ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
சர்க்கரையில் கலோரிகள் அதிகம் மற்றும் குறைந்த ஊட்டச்சத்து மதிப்பை வழங்குவதால், எடை அதிகரிப்புக்கு முக்கிய பங்காகும். சர்க்கரையைக் குறைப்பதன் மூலம், உங்கள் ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளலைக் குறைக்கலாம் மற்றும் உடல் எடை குறையவும் உதவும்.
அதேபோல சர்க்கரை சாப்பிடும் போது அதிகரித்த பசி மற்றும் அதிகப்படியான உணவு சாப்பிட தூண்டும். எனவே சர்க்கரை சாப்பிடுவதை குறைப்பது பசியை கட்டுப்படுத்த உதவும்.
எனவே இனிப்பாக உள்ள சர்க்கரை, வெல்லம், பனங்கற்கண்டு, நாட்டுச்சர்க்கரை போன்ற எதையும் எடுத்துக் கொள்ளக்கூடாது.
2 வாரங்களில் வேகமாக உடல் எடை குறைய | Weight Loss Tips in Tamil | Dr Veni| RockFort Neuro Centre
அதுமட்டுமின்றி சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால் முகம் பளபளப்பாக இருக்கும்.இது முகப்பரு, அரிப்பு, தோல் அழற்சி மற்றும் முன்கூட்டிய வயதானது போன்ற தோல் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இதனால் பிரகாசமாகவும், சருமம் இளமையாகவும் மாறும்.
மேலும் காலை வெறும் வயிற்றில் சுடுதண்ணீர் குடித்துவிட்டு உணவு சாப்பிடுவது நல்லது. வயிறு நிறைவாக இருக்கும் அதனால் குறைந்த உணவை சாப்பிடுவோம்.
அதேபோல மதிய உணவிற்கு நிறைய காய்கறிகளை எடுத்து கொள்ளலாம். நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் எடை இழப்புக்கு உதவும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.