சண்டே அதுவுமா சிக்கன் இல்லாமல் சாப்பிட முடியவில்லையா? சிக்கனும் செய்ய தெரியவில்லையா? அப்போ கவலை வேண்டாம். சோம்பேறி சிக்கன் ஈஸியாக சுவையாக எப்படி செய்வது என்று 2 மினிட்ஸ் செஃப் இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 2
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கவும். எண்ணெய் சூடானதும், நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
நறுக்கிய தக்காளியைச் சேர்த்து நன்கு குழையும் வரை வதக்கவும். மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும். மசாலா வாசனை வரும் வரை வதக்கவும்.
சுத்தம் செய்த சிக்கனை சேர்த்து, மசாலாவுடன் நன்கு கலக்கவும். அடுப்பை சிம்மில் வைத்து, கடாயை மூடி, சிக்கன் அதன் சொந்த நீரில் வேக விடவும். இடையில் ஒரு முறை கிளறி விடவும்.
சிக்கன் வெந்ததும், கரம் மசாலா சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அடுப்பை அணைக்கவும். இப்போது சுவையான சோம்பேறி சிக்கன் தயார். சாதம், சப்பாத்தி அல்லது தோசையுடன் பரிமாறலாம்.