/indian-express-tamil/media/media_files/2025/02/17/PH8RM1SCsfK47MpULSB3.jpg)
உடல் சூடு ஒரு பொதுவான உடல்நலப் பிரச்சினை, இது அசௌகரியம், சோர்வு மற்றும் பல்வேறு உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும். குறிப்பாக கோடைக்காலத்தில் அல்லது அதிக வெப்பமான சூழலில் இருப்பவர்களுக்கு உடல் சூடு அதிகமாக உணரப்படலாம். உடல் சூட்டைத் தணிப்பதற்கும், உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதற்கும் டாக்டர் நித்யா ஹெல்த் கஃபே தமிழ் யூடியூப் பக்கத்தில் இரண்டு கீரை வகைகள பரிந்துரைக்கிறார்.
வெயில் காலத்தில் சருமம் வறண்டு போவதும், அரிப்பு ஏற்படுவதும் பலருக்கும் தொல்லை தரும் விஷயம். குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த சருமப் பிரச்சனைகள் தீவிரமடையக்கூடும். அதிக உடல் எடை கொண்டவர்களுக்கு கழுத்து, அக்குள் மற்றும் வயிறு போன்ற பகுதிகளில் அரிப்பு உண்டாகலாம். மேலும், சிலருக்கு உணவு ஒவ்வாமையின் காரணமாக தோலில் தடிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
உடல் சூட்டினால் பெண்களுக்கு அந்தரங்கப் பகுதிகளில் அரிப்பு மற்றும் வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். அதேபோல், ஆண், பெண் இருபாலருக்கும் பிறப்புறுப்புகளில் பூஞ்சைத் தொற்று உருவாக வாய்ப்புள்ளது. இந்த பிரச்சனைகளுக்கு முறையான சிகிச்சை மேற்கொள்வது அவசியம்.
மணத்தக்காளி கீரை: மணத்தக்காளி கீரை இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் கொண்டது. உடலில் சேரும் தீங்கு விளைவிக்கும் கழிவுகள் மற்றும் நச்சுக்கள் உடல் சூட்டை அதிகரிக்கக்கூடும். மணத்தக்காளி கீரையை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம், இந்த நச்சுக்களை வெளியேற்றி இரத்தத்தை சுத்தப்படுத்து என்கிறார்.
இதனால் உடல் சூடு குறையும் மற்றும் உடல் புத்துணர்ச்சி பெறும். மேலும், மணத்தக்காளி கீரை சரும பிரச்சனைகளுக்கும் சிறந்த மருந்தாக விளங்குகிறது. உடல் சூட்டினால் ஏற்படும் அரிப்பு, தடிப்புகள் மற்றும் இதர சரும உபாதைகளுக்கு இது ஒரு இயற்கையான தீர்வாக அமைகிறது. இதை கூட்டு, பொரியல் அல்லது சூப் போன்ற வடிவங்களில் உட்கொள்ளலாம்.
2. வல்லாரை கீரை: வல்லாரை கீரை இரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இது சருமத்தை தெளிவாக்குவதோடு மட்டுமல்லாமல், உடலுக்கு குளிர்ச்சியையும் அளிக்கிறது. உடல் சூட்டினால் ஏற்படும் சரும வறட்சி, எரிச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு வல்லாரை ஒரு சிறந்த நிவாரணியாக செயல்படுகிறது.
மேலும், இது ஞாபக சக்தியை மேம்படுத்தவும், நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தவும் உதவுகிறது. வல்லாரையை துவையல், சட்னி அல்லது ரசம் போன்ற உணவு வகைகளில் சேர்த்துக்கொள்ளலாம். இந்த கீரைகள் இயற்கையான முறையில் உங்கள் உடல் சூட்டைத் தணித்து, ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.