சுவையான பன்னீர் புர்ஜி எப்படி லஞ்ச் பாக்ஸ்க்கு வெறும் 20 நிமிடத்தில் செய்வது என்று பார்ப்போம். பிள்ளைகள் இதை மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். இதை எப்படி செய்வது என்று ஃபூடிஸ்ரூஃப் இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
பட்டர் பூண்டு (பொடியாக நறுக்கியது) சில்லி ஃப்ளேக்ஸ் வெங்காயம் (பொடியாக நறுக்கியது) ஆர்கனோ ஸ்க்ராம்பிள்ட் பன்னீர் சமைத்த சாதம் மிளகு உப்பு சோயா சாஸ் கொத்தமல்லி இலைகள்
செய்முறை:
Advertisment
Advertisements
ஒரு கடாயில் பட்டர் சேர்த்து உருகியதும், பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் சில்லி ஃப்ளேக்ஸ் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும். வதக்கிய வெங்காயத்துடன் ஆர்கனோ மற்றும் ஸ்க்ராம்பிள்ட் பன்னீர் சேர்த்து நன்கு கலக்கவும்.
இப்போது, சமைத்த சாதம், மிளகு, உப்பு, சோயா சாஸ் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் சேர்த்து நன்கு கிளறவும். சுவையான பன்னீர் புர்ஜி ஹெர்ப் ஃப்ரைட் ரைஸ் தயார்.
பெரி பெரி சாஸ் செய்முறை - தேவையான பொருட்கள்:
எண்ணெய் பட்டர் பூண்டு (பொடியாக நறுக்கியது) வெங்காயம் (பொடியாக நறுக்கியது) கோதுமை மாவு அல்லது மைதா கொதிக்கவைத்த பால் ஆர்கனோ சில்லி ஃப்ளேக்ஸ் பெரி பெரி மசாலா
செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெய் மற்றும் பட்டர் சேர்த்து உருகியதும், பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதனுடன் கோதுமை மாவு அல்லது மைதா சேர்த்து நன்கு கலக்கவும்.
பின்னர், கொதிக்கவைத்த பால், ஆர்கனோ, சில்லி ஃப்ளேக்ஸ் மற்றும் பெரி பெரி மசாலா சேர்த்து கட்டி இல்லாமல் நன்கு கிளறவும். சுவையான பெரி பெரி சாஸ் தயார்.