சமையலில் சில டிப்ஸ்கள் தெரிந்தால் போதும் ஈஸியாக சமாளித்து விடலாம். அப்படிப்பட்ட சில சமையல் டிப்ஸ்கள் பற்றி பார்ப்போம்
டிப் 1: மீதமான பூரி அல்லது சப்பாத்தி மாவை ஃப்ரிட்ஜில் வைக்கும் போது மாவின் மேல் எண்ணெய் தடவி, காற்று போகாதவாறு மூடி வைத்தால் மாவு நிறம் மாறாமல் இருக்கும். மேலும் பூரி செய்வதற்கு மாவு பிசையும் போது அதனுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து பிசைந்தால், பூரி நீண்ட நேரம் உப்பலாக இருக்கும்.
டிப் 2: பால் காய்ச்சும் பாத்திரத்தின் மேல் ஒரு மரக் கரண்டியை வைத்தால் பால் பொங்கி கீழே வராது. தயிர் புளிக்கின்ற நிலை வரும்போது, அதில் ஒரு துண்டு தேங்காயை போட்டு வைத்தால் தயிர் அதிகமாக புளிக்காது.
டிப் 3: அரிசியில் பூச்சி வராமல் இருக்க, வர மிளகாய் அல்லது பிரியாணி இலையை அரிசியில் போட்டு வைக்கலாம். வீட்டில் செய்யும் ஊறுகாய் கெட்டுப் போகாமல் இருக்க சிறிதளவு குக்கிங் வினிகர் சேர்த்து கலந்து வைக்கலாம்.
டிப் 4: தோசை பொன்னிறமாக வர, இட்லி மாவுடன் சிறிதளவு கடலை மாவு சேர்த்து தோசை உற்றினால் தோசை மொறு மொறுன்னு, பொன்னிறமாக இருக்கும். மெதுவடை மொறு மொறு என்று இருக்க, உளுத்தம் பருப்புடன் சிறிதளவு பச்சரிசி சேர்த்து ஊற வைத்து அரைக்க வேண்டும்.
டிப் 5: பருப்பு வேக வைக்கும் போது பருப்புடன் சிறிதளவு நெய் சேர்த்து வேக வைத்தால் சாம்பார் ருசியாக இருக்கும். கீரை கடையல் செய்யும் போது கீரையின் நிறம் மாறாமல் இருக்க சிறிது எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“