மூட்டு வலி சரியாக டாக்டர் பொற்கொடி தனது யூடியூப் பக்கத்தில் ஒரு எளிய வைத்தியத்தை பற்றி கூறுகிறார். இதனை தினமும் சுடுதண்ணீரில் கலந்து குடித்தால் மூட்டு வலியிலிருந்து விடுபடலாம் என்றும் மூட்டு வலி இனி வராமலும் தடுக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.
Advertisment
ஐம்பது அறுபது வயதில் தான் மூட்டு வலி வந்தது. ஆனால் தற்போதைய சூழலில் உணவு பழக்கம், அன்றாட வாழ்க்கை முறை போன்றவற்றால் சிறுவயதிலேயே மூட்டு வலி வர ஆரம்பித்துள்ளது.
இதிலிருந்து விடுபட பொற்கொடி டாக்டர் ஐந்து பொடிகளை பரிந்துரைக்கிறார். இவற்றை சுடுதண்ணீரில் கலந்து குடித்தால் நமக்கு மூட்டு வலி பிரச்சனை இருக்காது என்றும் கூறுகிறார் அவற்றைப் பற்றி பார்ப்போம்.
முருங்கை பொடி
முடக்கத்தான் கொடி
பிரண்டை பொடி
நெல்லிக்காய் பொடி
கடுக்காய் பொடி
Advertisment
Advertisements
இந்த ஐந்து பொடிகளையும் நன்றாக கலந்து கொள்ளவும். காற்றுபுகாத ஒரு டப்பாவில் வைத்து தினமும் பயன்படுத்தலாம். இவற்றை தினமும் ஒரு ஸ்பூன் சுடுதண்ணீர் அல்லது மோரில் கலந்து குடிக்கலாம்.
இவற்றை தினமும் எடுத்துக் கொள்வதால் எலிம்பு அடர்த்தி அதிகரிக்கும். இதனால் உறுதித் தன்மை அதிகரிக்கும். உடம்பில் எலும்பு சேறும் இடங்களில் உள்ள வலிகளை போக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.