சூப்பரான சத்துக்கள் கிடைக்கும் ஐந்து காய்கறிகளை எப்படி சாப்பிட வேண்டும் என்று டாக்டர் கார்த்திகேயன் தனது யூடியூப் பக்கத்தில் கூறி இருப்பதாவது,
Advertisment
1. கேரட் - கேரட்டில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. கேரட்டை வேக வைத்து தான் சாப்பிட வேண்டும். இதனை வேகவைத்து சாப்பிட்டால் தான் சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும்.
2. பீட்ரூட் - வேகவைத்து கேரட்டோடு சேர்த்து சாப்பிடுவதால் ரத்தம் அதிகரிக்கும் ரத்த நாளங்கள் நன்றாக இருக்கும்.
3. காலிபிளவர் - காலிபிளவரை பீட்ரூட்டுடன் சேர்த்து சாப்பிடும் போது ரத்த நாளங்கள் நன்றாக இருக்கும். இது ரத்தத்துக்கு மிகவும் நல்லது. ரத்த அழுத்தம் உள்ளவர்கள் காலிஃப்ளவரை சேர்த்துக் கொள்ளலாம்.
Advertisment
Advertisements
4. காளான் - இதில் புரதச்சத்து அதிகமாக உள்ளது. முட்டை சாப்பிடவே மாட்டேன் என்று சொல்பவர்கள் காளானை சாப்பிடலாம்.
5. சர்க்கரை வள்ளி கிழங்கு - இதுவும் உடலுக்கு நன்மை. இதில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது.
மேற்கூறிய ஐந்து காய்கறிகளையும் எடுத்து சுத்தம் செய்து வைக்கவும். பின்னர் இவற்றை ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
கேரட்டின் தோல் பகுதிகளை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதேபோல காளான், காலிஃபிளவர், பீட்ரூட், சர்க்கரைவள்ளி கிழங்கு அனைத்தையும் எடுத்து கொள்ளவும். இதில் சிறிது மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து சாப்பிடலாம். இதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் அப்படியே கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.