குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது என்பதே பெரிய கலை தான். அப்படி சில நேரங்களில் உணவு கொடுத்தும் குழந்தைகள் சாப்பிட மறுத்து விடுவார்கள். அப்படி இருக்கும் குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் முறை பற்றி போர்ப்போம்.
டி.வி., செல்போன் பார்த்துக் கொண்டே குழந்தைகளுக்கு உணவு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். குழந்தை களுக்கு கொடுக்கும் உணவில் பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள், உலர் பழ வகைகள், வேகவைத்த பயறு வகைகள், முட்டை, தயிர் போன்றவற்றை சேர்த்து சுழற்சி முறையில் முறையில் கொடுக்கலாம்.
பெரும்பாலும் வீட்டில் தயாரித்த உணவை குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது. ஒவ்வொரு உணவையும் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து வைத்து அதன் சிறப்பை அவர்களுக்கு புரிய வைத்து உணவு கொடுக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு ஒரு வயது பூர்த்தி ஆன பின்னர் அனைத்து உணவுகளையும் கொடுக்கலாம். குறிப்பாக பற்கள் முளைக்க ஆரம்பித்ததும் அவர்களாக எடுத்துச் சாப்பிட வைக்கும் பழக்கத்தையும் சொல்லி கொடுக்கலாம்.
குழந்தைகளின் பசியை தூண்டும் 5 பொருட்கள் | Dr. Sivaraman speech about Children's snacks in Tamil
கொஞ்சம் விவரம் தெரிந்த குழந்தைகளுக்கு உணவு உற்பத்தியாவது எப்படி என சொல்லித் தந்து, அதன் மேல் மதிப்பை ஏற்படுத்தி, உணவை வீணாக்காமல் சாப்பிட கற்று கொடுக்க வேண்டும். குழந்தைகளை கவரும் வகையில் உணவு தயாரிக்க வேண்டும்.
நமது பாரம்பரிய உணவுகளான தினை முறுக்கு, கம்பு தட்டை, பருத்திப்பால், கேழ்வரகுப் பால் போன்றவைகளை குழந்தைகளுக்கு பழக்கப்படுத்துவது நல்லது. அப்படியும் குழந்தைகள் சாப்பிட மறுத்தால் இந்த ஒரு டெக்னிக் ஃபாலோ பண்ணுங்கள்.
சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், சீரகம் ஆகிய 5 பொருட்களை கொண்டு சூரணம் செய்து குழந்தைகளுக்கு கொடுத்து வர வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளும் நீங்கி நல்ல பசி எடுக்கும்.
தேவையான பொருட்கள்
சுக்கு-20 கிராம்
மிளகு - 20 கிராம்
திப்பிலி - 20 கிராம்
ஏலக்காய் - 20 கிராம்
சீரகம் - 20 கிராம்
செய்முறை
அனைத்தையும் காயவைத்து ஒன்றாக இடித்து பொடியாக்கி சலித்து வைத்துக்கொள்ளவும். இதனை தேன் அல்லது நெய்யில் கலந்து காலை, மாலை இருவேளை சாப்பிட கொடுக்கலாம். இதனால் நல்ல பசி எடுக்கும்.
பெரியவர்களும் சாப்பிட்டு வர வாயு, பித்தம், செரியாமை, பொருமல், பசியின்மை, மயக்கம், மூல வாயு, கிறுகிறுப்பு, வெட்டை ஆகிய பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.