பழைய ஆண்டிற்கு விடைகொடுத்து, புதிய ஆண்டை வரவேற்க தயாராகும் போது, மது அருந்துவதும், விருந்து வைப்பதும் தான் பிரதானமாக உள்ளது.
ஆனால் விருந்து மற்றும் களியாட்டத்தில் நிறைவுறும் அந்த இரவு பெரும்பாலும் நம்மில் பலருக்கு அடுத்த நாள் ஒரு பயங்கரமான ஹேங்கொவரை விட்டுச்செல்கிறது.
மேலும் புத்தாண்டின் முதல் நாளை சோர்வான நிலையில் கழிக்க விரும்புவது யார்?. ஹேங்கொவர் நிவர்த்தியாக சில வீட்டு வைத்தியங்களைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம்.
உண்மையில் புத்தாண்டு தினத்தன்று கூகுள் தேடலில் "ஹேங்ஓவர் க்யூர்" முதலிடத்தில் உள்ளது. மேலும், ஹேங்கொவர் என்பது மகிழ்ச்சியை கெடுக்கும் மோசமான உணர்வுகளில் ஒன்றாகும்.
அந்த வகையில், ஹேங்கொவரில் இருந்து உங்களை விடுவிக்க நீங்கள் தேர்வுசெய்யக்கூடிய சில சிறந்த வீட்டு வைத்தியங்கள் இங்கே உள்ளன.
- தண்ணீர் அருந்துங்கள்
ஆல்கஹால் பெரும்பாலும் டையூரிடிக் ஆக செயல்படுகிறது. இது, சிறுநீரின் அதிகரித்த உற்பத்தியை ஊக்குவிக்கும் ஒரு பொருள். இதன் பொருள் நீங்கள் தொடர்ந்து தண்ணீர் குடிக்காவிட்டால் அது உங்களை நீரிழப்புக்கு ஆளாக்கும்.
பெரும்பாலும் ஒரு இரவு குடித்த பிறகு, நீங்கள் அதிக தாகத்தை உணர்கிறீர்கள். இது உங்கள் உடல் நீரிழப்பு மற்றும் உங்களுக்கு ஒரு பெரிய ஹேங்கொவர் இருப்பதற்கான அறிகுறியாகும். எனவே நீங்கள் தேவைக்கு தண்ணீர் அருந்த வேண்டும்.
2) ஆப்பிள், வாழைப் பழங்கள்
பழ சாலட் அல்லது பச்சை பழங்கள், குறிப்பாக ஆப்பிள்கள் மற்றும் வாழைப்பழங்கள் போன்றவை ஹேங்கொவர் சிகிச்சையில் மிகவும் நல்லது.
வாழைப்பழத்தை ஒரு துளி தேனுடன் குலுக்கி சாப்பிடுங்கள். அவை குடிப்பதால் நீங்கள் இழந்த அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை மீட்டெடுக்க உதவும். ஆப்பிள்கள் தலைவலியைத் தணிக்க உதவும்,
3) இஞ்சி சாப்பிடுங்கள்
இஞ்சி சாறு ஹேங்கொவர்களுக்கும் சிறந்த மருந்தாகும். இஞ்சி ஆல்கஹால் செரிமானத்திற்கு உதவுகிறது, இதனால் வயிற்றை மென்மையாக்குகிறது மற்றும் நிவாரணம் அளிக்கிறது.
அடிக்கடி குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவு மற்றும் வயிற்றுக்கும் இஞ்சி நல்லது ஆகும். குமட்டல் உணர்வையும் குறைக்கிறது. இஞ்சியை சிறுது சிறிதாக, சாறு ஆக சாப்பிட, குடிக்க முடியாதவர்கள் இஞ்சி தேநீர் அருந்தலாம்.
4) தக்காளி சாறு குடிக்கவும்
தக்காளி சாறு ஹேங்ஓவர் அறிகுறிகளை நிவர்த்தி செய்வதிலும் அதிசயங்களைச் செய்யும். தக்காளி சாற்றில் குளுக்கோஸ் உள்ளது, இது ஆல்கஹால் செரிமானத்திற்கு உதவும் ஒரு வகையான சர்க்கரை ஆகும்.
5) சத்தான உணவுகள்
நீங்கள் சாப்பிட விரும்பாவிட்டாலும், இரவு பிங்கிங்கிற்குப் பிறகு காலையில் சரியான காலை உணவை உட்கொள்வது அவசியம். இது, நீங்கள் குடிக்கும் போது இழந்த ஊட்டச்சத்துக்களை மீட்டெடுக்க உணவு உதவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/