பலவிதமான தென்னிந்திய குழம்பு வகைகளுக்குத் தேவையான மணம், நிறம் மற்றும் சுவையை தரும் குழம்பு மிளகாய்த்தூள் 5 ஸ்டார் ஹோட்டல் ஸ்டைலில் எப்படி செய்வது என்று செஃப் வெங்கடேஷ் பட் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
பலவிதமான தென்னிந்திய குழம்பு வகைகளுக்குத் தேவையான மணம், நிறம் மற்றும் சுவையை தரும் குழம்பு மிளகாய்த்தூள் 5 ஸ்டார் ஹோட்டல் ஸ்டைலில் எப்படி செய்வது என்று செஃப் வெங்கடேஷ் பட் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட் 5 ஸ்டார்ஹோட்டல்களில்பயன்படுத்தப்படும்சுவையானகுழம்புமிளகாய்த்தூள்வீட்டிலேயேஎப்படி தயாரிப்பது என்றுதனதுயூடியூப்பக்கத்தில்கூறிஇருக்கிறார். பலவிதமான தென்னிந்திய குழம்பு வகைகளுக்குத் தேவையான மணம், நிறம் மற்றும் சுவையை இந்த பொடி அளிக்கிறது. தரமான பொருட்கள் மற்றும் சரியான முறையில் வறுக்கும் நுட்பங்கள் மூலம், இந்த மசாலாப் பொடியின் முழுமையான சுவையை எப்படிப் பெறுவது என்பதையும்அவர் படிப்படியாக விவரிக்கிறார்.
தேவையான பொருட்கள்:
Advertisment
Advertisements
கட்டிப் பெருங்காயம்: தேவையான அளவு
கடலை எண்ணெய்: 100 மில்லி
நீளமான காய்ந்த மிளகாய்: 200 கிராம்
பெடிக்கே மிளகாய் (நிறத்திற்காக): 100 கிராம்
கறிவேப்பிலை: 75 கிராம்
தனியா: 500 கிராம்
கருப்பு மிளகு: 100 கிராம்
சீரகம்: 100 கிராம்
கடுகு: 100 கிராம்
வெந்தயம்: 60-70 கிராம்
துவரம் பருப்பு: 100-150 கிராம்
மஞ்சள் தூள்: 50-60 கிராம்
செய்முறை:
முதலில், 100 மில்லி கடலை எண்ணெயை அடிகனமான கடாயில் சூடாக்கி, அதில் சிறிய துண்டுகளாக உள்ள கட்டிப் பெருங்காயத்தை மிதமான தீயில் 5 நிமிடங்கள் பொரித்து எடுக்கவும். பெருங்காயம் பொரிந்து, மணம் வந்தவுடன் எண்ணெயை வடித்து பெருங்காயத்தை மட்டும் தனியாக வைக்கவும்.
அதே கடாயில், நீளமான மிளகாய் மற்றும் பெடிக்கே மிளகாயை மெல்லிய தீயில் வறுக்கவும். மிளகாய் கருகாமல் இருக்க, சுமார் 75 கிராம் கறிவேப்பிலையைச் சேர்த்து 4-5 நிமிடங்கள் வறுக்கவும். வறுத்ததும் மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை எடுத்து தனியாக வைக்கவும்.அதே கடாயில், 500 கிராம் தனியாவை வாசனை வரும் வரை தொடர்ந்து கிளறி வறுக்கவும்.
அடுத்து, 100 கிராம் கருப்பு மிளகு, 100 கிராம் சீரகம், 100 கிராம் கடுகு, 60-70 கிராம் வெந்தயம் மற்றும் 100-150 கிராம் துவரம் பருப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாக வறுத்து தனியாக வைக்கவும்.வறுத்த அனைத்து பொருட்களையும், மஞ்சள் தூளுடன் சேர்த்து ஒரு பெரிய பாத்திரத்தில் கலக்கவும்.
இந்த கலவையை மாவு மில்லில் கொடுத்து நன்றாக அரைத்து மென்மையான தூளாக மாற்றவும். மில்லில் அரைப்பதற்கு முன், சிறிது அரிசி அல்லது காய்ந்த மிளகாயை அரைத்து இயந்திரத்தை சுத்தம் செய்வது நல்லது. அரைத்த தூளை நன்கு ஆறவைத்து, காற்றுப்புகாத பாத்திரத்தில் சேமித்து வைக்கவும். இந்த தூள் நீண்ட காலத்திற்கு பயன்படுத்தலாம்.